கிராஃபென்பெர்க் இடம்
கிராஃபென்பெர்க் இடம் (Gräfenberg spot, பரவலாக G-spot) பெண்களின் பூப்பெலும்பிற்கு பின்னால் உள்ள ஓர் இடமாகும். இது சிறுநீர்க் குழாய் மென்பஞ்சின் ஓர் அங்கமாகும். சிலர் இது பெண் இனப்பெருக்கத் தொகுதியின் நரம்புக்கற்றை என்றும், இங்கு தூண்டப்பட்டால் மிகுந்த இன்பமுற்று பெண் பீச்சல் மற்றும் உச்சக்கட்ட புணர்ச்சிப் பரவசநிலை ஏற்படும் என்றும் நம்புகின்றனர்.[1] வேறு சில பெண் உடற்கூற்றியல் மருத்துவ வல்லுனர்கள் இவ்வகையான இடம் இருப்பதற்கான உடற்கூற்றுச் சான்று இல்லை என மறுத்துள்ளனர்.[2][3][4]
துவக்கம்
'ஜி-ஸ்பாட்' என இவ்விடத்தை 1981ஆம் ஆண்டில் அட்டிகோவும் பிறரும் பெயரிட்டனர்.[5] செருமானிய மகளிர் நலவியலாளர், எர்ன்ஸ்ட் கிராஃபென்பெர்க் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. கிராஃபென்பெர்க் தான் முதலில் "பெண் புணர்ச்சிப் பரவசநிலையில் சிறுநீர்க்குழாயின் பங்கு" என்பது குறித்து 1950இல் எழுதினார்.[6][7] 1982ஆம் ஆண்டில் இந்த இடம் குறித்து ஐக்கிய அமெரிக்காவின் மூன்று ஆசிரியர்கள் எழுதிய முதல் நூல் ஆங்கிலத்தில் "ஜி ஸ்பாட்டும் மனிதப் பாலின்பம் குறித்த பிற கண்டறிதல்களும்" வெளியாயிற்று.[1][4]
அமைவிடம்
ஜி-இடம் இருக்குமிடம் குறித்துத் தெளிவில்லை. இருப்பினும், இதனைக் கண்டறிய இரு செயற்பாடுகள் பயன்படுத்தப்படுகின்றன:
- பாலின்ப மகிழ்ச்சியின் நிலைகள்
- ஏதேனும் இடத்தைத் தொடும்போது பெண் பீச்சல் ஏற்படுதல்
ஜி-ஸ்பாட்டை தூண்டுவதனால் தங்களுக்கு “ஆழ்ந்த” பரவசநிலை எட்டுவதாக பெண்கள் கூறுகின்றனர்.[5] இதனை அறிவியல் முறையில் கண்டறிய முயன்ற சிலர் ஆய்வகச் சூழலில் புணர்புழையின் பல்வேறு இடங்களைத் தொட்டு ஜி-ஸ்பாட்டுக்கள் புணர்புழையின் முற்பாகத்தில் இருப்பதாக அறிவித்துள்ளனர்.[2]
பொதுமக்களிடைப் பார்வை
சில மருத்துவர்கள் உட்பட பலர் இவ்வகையான இடம் இருப்பதாக நம்புவதில்லை.[2][3][4] ஜி ஸ்பாட்டும் மனிதப் பாலின்பம் குறித்த பிற கண்டறிதல்களும் என்ற நூல் 1981இல் வெளியானபோது பலத்த விமரிசனம் எழுந்தது.[7] மருத்துவரல்லாத சிலர் இது புணர்புழையின் மிகுந்த உணர் திறனுடைய பகுதி என விவரிக்கின்றனர்.[8]
மேற்கோள்கள்
- Ladas, AK; Whipple, B; Perry, JD. The G spot and other discoveries about human sexuality. New York: Holt, Rinehart, and Winston.
- Delvin, David; Christine Webber (May 2008). "The G-spot". Healthy Living. NetDoctor.co.uk. பார்த்த நாள் 2008-11-05.
- Hines, Terence M. (August 2001). "The G-spot: A modern gynecologic myth." (abstract). Clinical Opinion: American Journal of Obstetrics & Gynecology. 185(2) pages 359-362. பார்த்த நாள் 2008-11-06.
- "In Search of a Perfect G". Time magazine. September 13, 1982. http://www.time.com/time/magazine/article/0,9171,951842-1,00.html.
- Addiego, F; Belzer, EG; Comolli, J; Moger, W; Perry, JD; Whipple, B. (1981). "Female ejaculation: a case study.". Journal of Sex Research 17 (1): 13–21.
- Ernest Gräfenberg (1950). "The role of urethra in female orgasm". International Journal of Sexology 3 (3): 145–148. http://www.landman-psychology.com/284/sexuality/grafenberg-gspot.htm.
- Perry, John D. (1996). ""Revised by the Author": A Side-By-Side Comparison of Two Versions of "The Role of Urethra in Female Orgasm" by Ernest Gräfenberg, M.D. - Editing and Commentary". published by John D. Perry. பார்த்த நாள் 2008-11-11.
- Darling, CA; Davidson, JK; Conway-Welch, C. (1990). "Female ejaculation: perceived origins, the Grafenberg spot/area, and sexual responsiveness.". Arch Sex Behav 19: 29–47. doi:10.1007/BF01541824.
வெளி இணைப்புகள்
- The G-Spot from UCSB's SexInfo