கூட்டுசேரா இயக்கம்
கூட்டுசேரா இயக்கம் அல்லது அணி சேரா இயக்கம் (Non-Aligned Movement, NAM) எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். 2011ஆம் ஆண்டு நிலவரப்படி, இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர். 2016 இல் 17வது மாநாடு வெனிசுவேலாவில் இடம்பெற்றது.[1]
கூட்டு சேரா இயக்கம் |
||
---|---|---|
![]() World map with the members and observers of the Non-aligned movement உறுப்பினர்கள்( ) மற்றும் பார்வையாளர் நாடுகள் ( )
|
||
ஒருங்கிணைப்பு செயலகம் | நியூயார்க் நகரம் | |
அங்கத்துவம் | 120 உறுப்பினர்கள் 17 பார்வையாளர்கள்[1] |
|
Leaders | ||
• | முதன்மை முடிவெடுக்கும் அமைப்பு | கூட்டுசேரா நாடுகளின் நாட்டு/அரசுத் தலைவர்கள் மாநாடு[2] |
• | அவைத்தலைமை[2] | |
• | செயலாளர் நாயகம் | முகமது உசேன் தந்தாவி |
Website csstc.org |
இந்த இயக்கம் 1961ஆம் ஆண்டு பெல்கிரேட்டில் உருவானது. யுகோசுலாவியாவின் அதிபராக இருந்த சோசப்பு பிரோசு டிட்டோ, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, எகிப்தின் இரண்டாவது தலைவர் ஜமால் அப்துல் நாசிர், கானாவின் முதல் தலைவர் குவாமே நிக்ரூமா மற்றும் இந்தோனேசியாவின் முதல் தலைவர் சுகர்ணோ இவர்களின் கருத்தாக்கத்தில் இந்த இயக்கம் துவங்கியது. இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும் நாடுகள் செல்லவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். இந்த சொல்லாடலை ஐக்கிய நாடுகள் அவையில் 1953ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த வி. கே. கிருஷ்ண மேனன் கையாண்டார்.[3]
தற்போதைய உறுப்பினர்கள்===
ஆபிரிக்கா ஆபிரிக்காவில் சூடானைத் தவிர அனைத்து நாடுகளும் கூட்டுசேரா இயக்கத்தின் உறுப்பினர்களாகும்.
(1961)
அங்கோலா (1964) பெனின் (1964) போட்சுவானா (1970) புர்க்கினா பாசோ (1973) புருண்டி (1964) கமரூன் (1964) கேப் வர்டி (1976) மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு (1964) சாட் (1964) கொமொரோசு (1976) காங்கோ மக்களாட்சிக் குடியரசு (1961) சீபூத்தீ (1983) எகிப்து (1961) எக்குவடோரியல் கினி (1970) எரித்திரியா (1995) எதியோப்பியா (1961) காபொன் (1970) கம்பியா (1973) கானா (1961) கினியா (1961) கினி-பிசாவு (1976) ஐவரி கோஸ்ட் (1973) கென்யா (1964) லெசோத்தோ (1970) லைபீரியா (1964) லிபியா (1964) மடகாசுகர் (1973) மலாவி (1964) மாலி (1961) மூரித்தானியா
(1964)
மொரிசியசு (1973) மொரோக்கோ (1961) மொசாம்பிக் (1976) நமீபியா (1979) நைஜர் (1973) நைஜீரியா (1964) காங்கோ (1964) ருவாண்டா (1970) சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி (1976) செனிகல் (1964) சீசெல்சு (1976) சியேரா லியோனி (1964) சோமாலியா (1961) தென்னாப்பிரிக்கா (1994) சூடான் (1961) சுவாசிலாந்து (1970) தன்சானியா (1964) டோகோ (1964) தூனிசியா (1961) உகாண்டா (1964) சாம்பியா (1964) சிம்பாப்வே (1979)
==ஆசியா
ஆப்கானித்தான் (1961) பகுரைன் (1973) வங்காளதேசம் (1973) பூட்டான் (1973) பகுரைன் (1993) கம்போடியா (1961) இந்தியா (1961) இந்தோனேசியா (1961) ஈரான் (1979) ஈராக் (1961) யோர்தான் (1964) குவைத் (1964) லாவோஸ் (1964) லெபனான் (1961) மலேசியா (1970) மாலைத்தீவுகள் (1976) மங்கோலியா (1993) மியான்மர் (1961) நேபாளம் (1961) வட கொரியா (1976) ஓமான் (1973) பாக்கித்தான் (1979) பலத்தீன் (1976) பிலிப்பீன்சு (1993) கட்டார் (1973) சவூதி அரேபியா (1961) சிங்கப்பூர் (1970) இலங்கை (1961) சிரியா (1964) தாய்லாந்து (1993) கிழக்குத் திமோர் (2003) துருக்மெனிஸ்தான் (1995) ஐக்கிய அரபு அமீரகம் (1970) உஸ்பெகிஸ்தான் (1993) வியட்நாம் (1976) யேமன் (1961)
ஐரோப்பா
அசர்பைஜான் (2011) பெலருஸ் (1998)
ஓசீனியா
பிஜி (2011) பப்புவா நியூ கினி (1993) வனுவாட்டு (1983)
பழைய உறுப்பினர்கள்
அர்கெந்தீனா (1973-1991) சைப்பிரசு (1961-2004) மால்ட்டா (1973-2004) யூகோஸ்லாவியா (1961-1992)
அவதானிப்பாளர்கள்
பின்வரும் நாடுகளும் நிறுவனங்களும் அவதானிப்பு நிலையிலுள்ளன:
நாடுகள்
நிறுவனங்கள்
- ஆபிரிக்க ஒன்றியம்
- Afro-Asian People's Solidarity Organisation
- அரபு நாடுகள் கூட்டமைப்பு
- Commonwealth Secretariat
- Hostosian National Independence Movement
- Kanak and Socialist National Liberation Front
- Organisation of Islamic Cooperation
- South Centre
- ஐக்கிய நாடுகள்
- World Peace Council
மேற்கோள்கள்
- XV Summit of the Non-Aligned Movement, Sharm El Sheikh, 11–16 July 2009: அங்கத்தினர்கள், பார்வையாளர்கள் மற்றும் விருந்தினர்கள்
- "The Non-Aligned Movement: Background Information". Government of Zaire (21 செப்டம்பர் 2001). பார்த்த நாள் 23 ஏப்ரல் 2011.
- http://books.google.com/books?id=v2pFvh9crtEC&pg=PA75&lpg=PA75&dq=krishna+menon+coined+non+alignment&source=bl&ots=AJefNCzeyW&sig=qZwt3biuygBsEuFlcVvWJE6x8Ls&hl=en&ei=bm1DTpzWK6KKsgLR_YDCCQ&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CC8Q6AEwAQ#v=onepage&q&f=false
வெளி இணைப்புகள்
- Official Site: 15th Summit — Fifteenth Non Aligned Movement Summit, (Sharm el Sheikh July 11–16, 2009)
- Official Site: 14th Summit — Fourteenth Non Aligned Movement Summit, (Havana, September 11–16, 2006)
- Non-Aligned Movement — South African government NAM site
- International Institute for Non-Aligned Studies — International Organization for Non-Aligned Movement
- The Cold War International History Project's Document Collection on the NAM