R

R (ஆர்) என்பது புதிய ஆங்கில நெடுங்கணக்கிலும் சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கிலும் 18ஆவது எழுத்து ஆகும்.[1]

Rஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை

பெயர்

எவ்வு (F), எல் (L), எம் (M), என் (N) போன்ற எழுத்துகளின் பெயரை ஒத்ததாக, இலத்தீனில் rஇன் பெயர் ஏர் (er) ஆகும்.[2] நடு ஆங்கிலத்தில் இதன் பெயர் ஆராக (ar) மாறியது.

பயன்பாடு

ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் எட்டாவது எழுத்து r ஆகும்; கூடுதலாகப் பயன்படுத்தப்படும் நான்காவது மெய்யொலியும் (t, n, s ஆகியவற்றுக்கு அடுத்து) r ஆகும்.[3]

கணிதத்திலும் அறிவியலிலும்

இயற்கணிதத்தில், மெய்யெண்களின் தொடை ℝஆல் குறிக்கப்படும்.[4] வடிவவியலில், ஆரையைக் குறிப்பதற்கும் radius என்பதன் முதலெழுத்தான r பயன்படுத்தப்படுகின்றது.

வேதியியலில், வளிம மாறிலியானது Rஆல் குறிக்கப்படும்.[5]

இயற்பியலில், தடைக்கான குறியீடாக R பயன்படுத்தப்படுகின்றது.[6]

ஒருங்குறியில்

ஒருங்குறியில் rஐ ஒத்த பின்வரும் வரியுருக்கள் காணப்படுகின்றன.

  • 𝐑𝐫 𝑅𝑟 𝑹𝒓 𝖱𝗋 𝗥𝗿 𝘙𝘳 𝙍𝙧 ℛ𝓇 𝓡𝓻 ℜ𝔯 𝕽𝖗 𝚁𝚛 ℝ𝕣 கணிதக் குறியீடுகளாகப் பயன்படும் ஒருங்குறி வரியுருக்கள்
  • ʀ சிறிய பேரெழுத்து R, சிறுநாக்கொலி உருட்டொலிக்கான (Uvular trill) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • Ꝛ ꝛ சுற்றிய r (r rotunda)
  • Ꞃ ꞃ கேலிய R
  • Ʀ இலத்தீன் எழுத்து YR (U+01A6), விரிவாக்கப்பட்ட இலத்தீன் பீயில் ʀஇன் பேரெழுத்தாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ɹ பன்முகட்டுப் உயிர்ப்போலிக்கான (alveolar approximant) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ɾ பன்முகட்டு வருடொலிக்கான (alveolar flap) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ɻ மேலண்ண உயிர்ப்போலிக்கான (retroflex approximant) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ɽ மேலண்ண வருடொலிக்கான (retroflex flap) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ʁ ஒலிப்புடை பன்முகட்டு உரசொலிக்கான (voiced uvular fricative) பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் குறியீடு
  • ˞ R-நிற உயிரொலியைக் குறிக்கும் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடிக் கொக்கி ஒலித்திரிபுக் குறி
  • ® பதிவுசெய்யப்பட்ட வணிகக்குறிக்கான குறியீடு
  • ℟ கிறித்தவ வழிபாட்டு முறையில் பதிலுரைக்கான குறியீடு
  • உரூபிள் நாணயக் குறியீடு

மேற்கோள்கள்

  1. "English Alphabet". EnglishClub. பார்த்த நாள் 2015 ஆகத்து 31.
  2. "Abecedarivm Latinæ-The Latin alphabet". Phonetica Latinæ. பார்த்த நாள் 2015 ஆகத்து 31.
  3. "English Letter Frequency (based on a sample of 40,000 words)". Cornell University. பார்த்த நாள் 2015 ஆகத்து 31.
  4. "Common Number Sets". Math is Fun. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 1.
  5. "Molar gas constant" (Encyclopædia Britannica). பார்த்த நாள் 2015 செப்டம்பர் 1.
  6. R. Nave. "Resistance". HyperPhysics. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 1.

வெளியிணைப்புகள்

  • பொதுவகத்தில் R பற்றிய ஊடகங்கள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.