I

I () என்பது சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன அடிப்படை இலத்தீன் நெடுங்கணக்கில் ஒன்பதாவது எழுத்தும் மூன்றாவது உயிரெழுத்தும் ஆகும். உரோம எண்களில் I என்பது ஒன்றைக் குறிக்கும்.[1]

Iஇன் வளைந்த வடிவங்களை எழுதும் முறை
சைகை மொழியில் I

ஆங்கிலத்தில்

ஆங்கிலத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்படும் ஐந்தாவது எழுத்து i ஆகும்.[2]

ஆங்கிலத்தில் தன்மைப் பெயரான I என்பது, எப்போதும் ஆங்கிலப் பேரெழுத்து Iஆலேயே குறிக்கப்படும்.[3] இது ஐ என்று பலுக்கப்படும்.[4]

கணிதத்திலும் அறிவியலிலும்

கணிதத்தில், அலகுக் கற்பனை எண்ணைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றது.[5] அலகுத் தாயத்தைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.[6] காட்டீசியன் ஆள்கூற்று முறைமையில் எட்சு அச்சின் திசையிலான அலகுக் காவி தடித்த iஆல் குறிப்பிடப்படும்.[7]

இயற்பியலில், மின்னோட்டம், செறிவு, சடத்துவத் திருப்பம் என்பவற்றைக் குறிக்க I பயன்படுத்தப்படுகின்றது.[8]

வேதியியலில், அயடீனின் வேதிக் குறியீடு I ஆகும்.[9]

தொடர்புடைய எழுத்துகளும் ஒத்த வரியுருக்களும்

மேற்கோள்கள்

  1. "பெரிய எண்களும் உரோமன் எண்குறிகளும்" 6. Educational Publications Department. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 2.
  2. "English Letter Frequency (based on a sample of 40,000 words)". Cornell University. பார்த்த நாள் 2015 ஆகத்து 31.
  3. "Subject Pronouns". CliffsNotes. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 2.
  4. "I". Oxford Dictionaries. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 2.
  5. "Complex number". Encyclopædia Britannica (2015 சனவரி 20). பார்த்த நாள் 2015 செப்டம்பர் 2.
  6. "Identity matrix". Encyclopædia Britannica. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 2.
  7. "Vectors". Revision Maths. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 2.
  8. அ. கருணாகரர் (2009). நவீன உயர்தர மாணவர் பௌதிகம் அலகுகள் Iம் IIம் அளவைகள், பரிமாணங்கள், பொறியியல். ரண்யா கிராபிக்ஸ். பக். 7, 187.
  9. Karl Christe (2014 சூன் 10). "Iodine (I)". Encyclopædia Britannica. பார்த்த நாள் 2015 செப்டம்பர் 2.

வெளியிணைப்புகள்

  • பொதுவகத்தில் I பற்றிய ஊடகங்கள்
  •  I – விளக்கம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.