எழுத்து (இலக்கணம்)
தமிழ் இலக்கண நூல்களில் எழுத்து (letter) என்ற சொல் மொழியில் வழங்கும் ஒலிகளைக் குறிக்கவும், அவ்வொலிகளுக்குரிய வரிவடிவத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் “அ“ என்ற எழுத்து ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் குறித்து நிற்கின்றது.
- முதலெழுத்து, சார்பெழுத்து என்பன மொழியில் எழுத்து தனித்தன்மை, சார்புத்தன்மை குறித்த பாகுபாடுகள்.
- உயிரெழுத்து, மெய்யெழுத்து என்பன அவற்றின் இயங்கு-தன்மை குறித்த பாடுபாடு. மெய் தனித்து இயங்காது.
- குறில், நெடில் எனபன எழுத்துக்கள் ஒலிக்கும் கால அளவு பற்றியவை.
- வல்லினம், மெல்லினம், இடையினம் என்பன எழுத்தின் பிறப்பிடத்தால் ஒலிப்பில் தோன்றும் வன்மை, மெனமை, இடைமை பற்றியவை.
- சுட்டு, வினா என்பன மொழியிடை வரும் இடைச்சொல்லாகிப் பொருள் உணர்த்தும் எழுத்துக்கள். தனிநிலையில் இவை பொருள் உணர்த்துவது இல்லை.
- மயங்கும் எழுத்துக்கள், மயங்கா எழுத்துக்கள் என்பவை நாவால் ஒலிக்கமுடியும் எழுத்துக்களையும், ஒலிக்கமுடியாத எழுத்துக்களையும் குறிப்பன.
- மொழிமுதல் எழுத்துக்கள் என்பவை மொழியில் முதல் எழுத்தாக வருபவை
- மொழியிறுதி எழுத்துக்கள் என்பவை மொழியின் இறுதியில் வருபவை.
- புணர்ச்சியில் மயங்கும் எழுத்துக்கள்
மேலும் காண்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.