ஸூரத்துல் லஹப்
ஸூரத்துல் லஹப் (ஆங்கிலம்:al-lahab)(அரபு மொழி: سورة المسد) சுடர் / சுவாலை என்பது திருக்குர்ஆனின் 111வது அத்தியாயம் ஆகும்.

திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.
திருக்குர்ஆனின் 111 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துல் லஹப் (சுடர்)மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.
சுடர் / சுவாலை
இல | அரபு | தமிழாக்கம் |
---|---|---|
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ | *அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) | |
۞111:1. | تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ | *அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும். |
۞111:2. | مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ | *அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.. |
۞111:3. | سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ | *விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான். |
۞111:4. | وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ | *விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, |
۞111:5. | فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ | *அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்). |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- Surah Al-Masadd (Complete text in Arabic with English and French translations)
பிற தகவல்கள்
|