சூரத்துல் பகரா

சூரத்துல் பகரா அரபு மொழி: سورة البقرة பசு மாடு என்பது திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயம் ஆகும்

2 சூரத்துல் பகரா (பசு மாடு) வசனங்கள்:286 மதினாவில் அருளப்பட்டது

திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.

திருக்குர்ஆனின் 2 அத்தியாயமாகத் திகழும்சூ ரத்துல் பகரா (பசு மாடு) மதீனா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மதனிய்யா வகையைச் சார்ந்ததாகும்.

பெயர்

சூரத்துல் பகரா அரபு மொழி: سورة البقرة அரபுச் சொல்லுக்கு பசு மாடு எனப் பொருள்.

2:72 மேலும், இந்நிகழ்ச்சியை நினைவுகூருங்கள்: நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டு அதுபற்றி தர்க்கித்து, ஒருவர் மற்றொருவர் மீது குற்றம் சாட்டிக்கொண்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் மறைத்துக் கொண்டிருந்தவற்றை அல்லாஹ் வெளிப்படுத்த முடிவு செய்தான். 2:73 “(அறுக்கப்பட்ட) அப்பசுவின் ஒரு பாகத்தைக் கொண்டு கொலையுண்டவனை அடியுங்கள்” என அப்பொழுது நாம் கட்டளையிட்டோம். (பாருங்கள்) இவ்வாறே அல்லாஹ் மரித்தவர்களை உயிர்ப்பிக்கின்றான்; மேலும் நீங்கள் நல்லறிவு பெறும் பொருட்டு தன் சான்றுகளையும் உங்களுக்குக் காண்பிக்கின்றான்.

இறுதி வசனங்கள்

2:285 இந்தத் தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதின் மீது நம்பிக்கை கொண்டுள்ளார். அவரை ஏற்றுக் கொண்டவர்களும் அந்த வழிகாட்டுதலின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் மற்றும் அவனுடைய தூதர்களையும் நம்புகின்றனர். மேலும் “அல்லாஹ்வுடைய தூதர்கள் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமை பாராட்டுவதில்லை” என்றும், “எங்கள் இறைவனே! நாங்கள் செவியேற்றோம்; அடிபணிந்தோம். எங்கள் இறைவனே! நாங்கள் உன்னுடைய மன்னிப்பைக் கோருகிறோம். உன்னிடமே (நாங்கள்) திரும்பி வர வேண்டியிருக்கிறது” என்றும் கூறுகின்றனர். 2:286 அல்லாஹ் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக (பொறுப்புகளைச் சுமத்தி) சிரமப்படுத்துவதில்லை. அவர் சம்பாதித்த நன்மையின் பலனும் அவருக்கே; அவர் சம்பாதித்த தீமையின் விளைவும் அவருக்கே! (நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் இவ்வாறு இறைஞ்சுங்கள்:) “எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து போயிருப்பினும், பிழை செய்திருப்பினும் நீ எங்களை (குற்றம்) பிடிக்காதே! எங்கள் இறைவனே! மேலும், எங்களுக்கு முன் சென்றோர் மீது நீ பாரத்தை சுமத்தியது போல் எங்கள் மீதும் பாரத்தைச் சுமத்தி விடாதே! எங்கள் இறைவனே! மேலும் நாங்கள் தாங்க இயலாத பாரத்தை எங்கள் மீது சுமத்தி விடாதே! எங்களைப் பொறுத்தருள்வாயாக! எங்களுக்கு மன்னிப்பு வழங்குவாயாக! எங்கள் மீது கருணை பொழிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலனாவாய்! (சத்தியத்தை) நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக வெற்றி கொள்ள எங்களுக்கு உதவி செய்வாயாக!”

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

பிற தகவல்கள்

முந்தைய சூரா:
அல்ஃபாத்திஹா (குர்ஆன்)
சூரா2 அடுத்த சூரா :
[[ ]]
அரபு

1 · 2 · 3 · 4 · 5 · 6 · 7 · 8 · 9 · 10 · 11 · 12 · 13 · 14 · 15 · 16 · 17 · 18 · 19 · 20 · 21 · 22 · 23 · 24 · 25 · 26 · 27 · 28 · 29 · 30 · 31 · 32 · 33 · 34 · 35 · 36 · 37 · 38 · 39 · 40 · 41 · 42 · 43 · 44 · 45 · 46 · 47 · 48 · 49 · 50 · 51 · 52 · 53 · 54 · 55 · 56 · 57 · 58 · 59 · 60 · 61 · 62 · 63 · 64 · 65 · 66 · 67 · 68 · 69 · 70 · 71 · 72 · 73 · 74 · 75 · 76 · 77 · 78 · 79 · 80 · 81 · 82 · 83 · 84 · 85 · 86 · 87 · 88 · 89 · 90 · 91 · 92 · 93 · 94 · 95 · 96 · 97 · 98 · 99 · 100 · 101 · 102 · 103 · 104 · 105 · 106 · 107 · 108 · 109 · 110 · 111 · 112 · 113 · 114

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.