சூரத்துல் ஃபீல்
சூரத்துல் ஃபீல் அரபு மொழி: سورة الفيل யானை என்பது திருக்குர்ஆனின் 105வது அத்தியாயம் ஆகும்.

திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.
திருக்குர்ஆனின் 105 அத்தியாயமாகத் திகழும் சூரத்துல் ஃபீல் (யானை) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.
சூரத்துல் ஃபீல்(யானை)
இல | அரபு | தமிழாக்கம் |
---|---|---|
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم | அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) | |
۞105:1. | أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ | (நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? |
۞105:2. | أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ | அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? |
۞105:3. | وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ | மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். |
۞105:4. | تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ | சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. |
۞105:5. | فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ | அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- அல்-குர்ஆன்
- Surah Al-Feel (Complete text in Arabic with English and French translations)
பிற தகவல்கள்
|