ஸூரத்துல் கவ்ஸர்

ஸூரத்துல் கவ்ஸர் ஆங்கிலம்:Sūrat al-Kawthar அரபு மொழி: سورة الكوثر மிகுந்த நன்மைகள் என்பது திருக்குர்ஆனின் 108வது அத்தியாயம் ஆகும்.

108ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்) வசனங்கள்: 3 மக்காவில் அருளப்பட்டது۞♫♫mp3


திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.

திருக்குர்ஆனின் 108 அத்தியாயமாகத் திகழும் ஸூரத்துல் கவ்ஸர் (மிகுந்த நன்மைகள்)மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.

  • ஸூரத்துல் கவ்ஸர் மதினாவில் அருளப்பட்டதாக கருத்து முரண்பாடுகளும் உள்ளன

பெயர்

ஸூரத்துல் கவ்ஸர் அரபு மொழி: سورة الكوثر என்ற அரபுச் சொல்லுக்கு அகராதியில் பொருள் இல்லை. நபிவழியிலும் இதற்குச் சான்று இல்லை.சிலர் மிகுந்த நன்மைகள் எனப் கொண்டுள்ளனர்.

کَوۡثَرَ கவ்ஸர் என்றால் என்ன

நியாயத் தீர்ப்பு நாளில் மக்கள் தாகத்தால் தவிக்கும் போது அவர் களுக்கு விநியோகம் செய்வதற்கு அல்லாஹ் கவ்ஸர் எனும் ஒரு தடாகத்தை ஏற்படுத்துவான். அதை விநியோகம் செய்யும் பொறுப்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வழங்கப்படும். இந்தத் தடாகத்தின் பெயரே கவ்ஸர் ஆகும்.சூரா கவ்ஸர்(108) விளக்கம்


மிகுந்த நன்மைகள்

இலஅரபுதமிழாக்கம்
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
۞108:1. إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு கவ்ஸர் (என்ற தடாகத்தை) கொடுத்திருக்கின்றோம்.
۞108:2. فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ எனவே, உம் இறைவனுக்கு நீர் தொழுது, குர்பானியும் கொடுப்பீராக.
۞108:3. إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ) அவன்தான் சந்ததியற்றவன்..


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்


பிற தகவல்கள்

முந்தைய சூரா:
ஸூரத்துல் மாஊன் ‎
சூரா108 அடுத்த சூரா :
ஸூரத்துல் காஃபிரூன்
அரபு

1 · 2 · 3 · 4 · 5 · 6 · 7 · 8 · 9 · 10 · 11 · 12 · 13 · 14 · 15 · 16 · 17 · 18 · 19 · 20 · 21 · 22 · 23 · 24 · 25 · 26 · 27 · 28 · 29 · 30 · 31 · 32 · 33 · 34 · 35 · 36 · 37 · 38 · 39 · 40 · 41 · 42 · 43 · 44 · 45 · 46 · 47 · 48 · 49 · 50 · 51 · 52 · 53 · 54 · 55 · 56 · 57 · 58 · 59 · 60 · 61 · 62 · 63 · 64 · 65 · 66 · 67 · 68 · 69 · 70 · 71 · 72 · 73 · 74 · 75 · 76 · 77 · 78 · 79 · 80 · 81 · 82 · 83 · 84 · 85 · 86 · 87 · 88 · 89 · 90 · 91 · 92 · 93 · 94 · 95 · 96 · 97 · 98 · 99 · 100 · 101 · 102 · 103 · 104 · 105 · 106 · 107 · 108 · 109 · 110 · 111 · 112 · 113 · 114

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.