சூரத்துல் அஸ்ரி
சூரத்துல் அஸ்ரி அரபு மொழி: سورة العصر காலம்)என்பது திருக்குர்ஆனின் 103 வது அத்தியாயம் ஆகும்

திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.
திருக்குர்ஆனின் 103 அத்தியாயமாகத் திகழும் சூரத்துல் அஸ்ரி(காலம்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.
சூரத்துல் அஸ்ரி (காலம்)
இல | அரபு | தமிழாக்கம் |
---|---|---|
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم | அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) | |
۞103:1. | وَالْعَصْرِ | காலத்தின் மீது சத்தியமாக |
۞103:2. | إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ | நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். |
۞103:3. | إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ | ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). |
மேற்கோள்கள்
பிற தகவல்கள்
|