சிம்லா
சிம்லா, தற்பொழுது பெயர் ஷிம்லா என மாற்றப்பட்டுள்ளது, இமாசலப் பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். இது ஒரு புகழ் பெற்ற கோடை இருப்பிடமும் ஆகும். 1864-ம் ஆண்டு, இந்தியாவின் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் கோடைகாலத் தலைநகராக சிம்லா விளங்கியது. 'குன்றுகளின் ராணி' என்று ஆங்கிலேயர்களால் அன்புடன் அழைக்கப்பெற்ற ஷிம்லா, ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும். இமாலய மலைத் தொடரின் வடமேற்குப் பகுதியில், உயரமான மேட்டில் ஷிம்லா அழகான சுற்றுச்சூழலுடன் அமைந்துள்ளது. தேவதாரு, சிகப்பு நிற மலர்கொத்துகள் கொண்ட மரவகைகள், ரோடோடென்ரான், கருவாலி போன்ற அடர்ந்த மரங்கள் நிறைந்த காடுகளின் போர்வையால் சூழப்பட்ட இந்த ஷிம்லா நகரம், இதமான கோடை காலத்தையும் பனிமழை பொழியும் குளிர்ச்சியான குளிர்காலத்தையும் வழங்குகிறது. காலனி ஆதிக்கத்திலிருந்தே தோன்றிய நியோ-கோதிக் மற்றும் டியுடோர்பீதன் கட்டிடக்கலையின் சாயல் கொண்ட பல கட்டிடங்களுக்கு இந்த நகரம் பெயர் பெற்றது. கால்கா-ஷிம்லா ரயில்வே என்னும் மிக நீண்ட தூர குறுகிய ரயில் பாதை கால்கா நகருடன் ஷிம்லாவை இன்றும் இணைக்கிறது. மிக அண்மையிலுள்ள பெரிய நகரமான சண்டிகரிலிருந்து ஷிம்லா சுமார் 115 கி.மீட்டர் (71.4 மைல்) தூரத்திலும், இந்தியத் தலைநகரமான புதிய தில்லியிலிருந்து சுமார் 365 கி.மீட்டர் (226.8 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. இந்து கடவுள் காளியின் மறு அவதாரமாகக் கருதப்படும் சியாமளா தேவி அன்னையை போற்றும் வகையில், இந்நகருக்கு ஷிம்லா என்று பெயர் வந்தது.
சிம்லா | |
— தலைநகரம் — | |
அமைவிடம் | 31°06′40″N 77°09′14″E |
நாடு | ![]() |
மாநிலம் | இமாசலப் பிரதேசம் |
மாவட்டம் | ஷிம்லா |
ஆளுநர் | Acharya Dev Vrat[1] |
முதலமைச்சர் | ஜெய்ராம் தாகூர்[2] |
நகராட்சி ஆணையர் | ஒன்கர் சந்த் சர்மா |
மேயர் | சஞ்சய் சவுதான் |
மக்களவைத் தொகுதி | சிம்லா |
மக்கள் தொகை • அடர்த்தி |
1,63,000[3] (2001) • 120/km2 (311/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
25 கிமீ2 (10 சதுர மைல்) • 2,130 மீட்டர்கள் (6,990 ft) |
குறியீடுகள்
|
வரலாறு
கூர்க்கா போரின் பிறகு, 1819-ம் ஆண்டு பிரித்தானியர்கள் சிம்லாவைத் தன்வசமாக்கிக் கொண்டனர். அச்சமயத்தில் இந்துக் கடவுள் சியாமளா தேவியின் கோவிலால் இந்த ஊர் பெருமை பெற்றிருந்தது. 1822-ஆண்டு, சார்லஸ் பிராட் கென்னடி என்ற ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த அரசு அதிகாரியே, பிரித்தானிய முதல் கோடைக்கால இருப்பிடத்தை ஷிம்லாவில் கட்டினார்.
1823 முதல் 1828 வரை வங்காளத்தின் கவர்னர்-ஜெனரலாக இருந்த ஆம்ஹெர்ஸ்ட் பிரபு என்பவர்தான் 1827-ம் ஆண்டு கோடை முகாமைத் துவக்கி வைத்தார். அச்சமயத்தில் ஷிம்லா நகர் முழுவதற்கும் ஒரே ஒரு குடில் மட்டுமே இருந்தது. பிறகு அவ்வாண்டில் அவர் அவ்விடத்தை விட்டுச் சென்றபோது, சுமார் ஆறு குடில்கள் மட்டுமே கட்டி முடிந்தன. அதன் பின்னர் 10 ஆண்டுகளுக்குள், நூற்றுக்கும் மேற்பட்டவை உருவாகின.
1828 முதல் வங்காள கவர்னர்-ஜெனரலாக இருந்த வில்லியம் பென்டிங்க் பிரபு (பின்னர் 1833-ம் ஆண்டு கவர்னர் ஜெனரல் என்ற பதவி உருவாக்கிய பிறகு இந்தியா முழுமைக்கும் கவர்னர் ஜெனரலாக இருந்தவர்) என்பவரின் கவனத்தை, அண்மைக்காலம் வரை சிம்லா என்று விளங்கிய ஷிம்லா ஈர்த்தது. 1832-ம் ஆண்டு கர்னல் சர்ச்சிலுக்கு "லூதியானவிலிருந்து நான்கு நாள் பயணத் தொலைவில், எளிதாக அடையக் கூடியதாகவும் இந்துஸ்தானத்தின் கடுமையான கோடை வெப்பத்தின் எரிச்சல் மிகுந்த சமவெளிகளில் இருந்து தப்பிச் செல்ல உகந்த அடைக்கலமாகவும் உள்ளது" என்று எழுதினர்.[4]
“ | Simla is only four days march from Loodianah (Ludhiana), is easy of access, and proves a very agreeable refuge from the burning plains of Hindoostaun (Hindustan). | ” |


அவருக்குப் பின்னால் வந்த பிரபுக்களில் ஒருவரும் 1864 முதல் 1869 வரை இந்திய நாட்டின் வைஸ்ராயாக இருந்தவருமான ஐயா ஜான் லாரன்ஸ் என்பவர் பிரித்தானியர்கள் நிர்வாகத்தை ஆண்டுக்கு இருமுறை கல்கத்தாவிற்கும் அதிலிருந்து 1000 மைலுக்கும் அதிக தூரத்திலுள்ள தனி மையத்திற்கும் இடையே மாற்றும் முடிவை, அதை அடைவது கடினமான செயலாக இருந்தாலும், மேற்கொண்டார்.[5] 1876-1880-ம் ஆண்டில் வைஸ்ராயாக இருந்த லிட்டன் பிரபு என்பவர், 1876-ம் ஆண்டு முதல் நகரை வடிவமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். முதலில் பீட்டர் ஹோஃப் எனும் வாடகை வீட்டில் தங்கியிருந்தாலும் வைஸ் ரீகல் லாட்ஜ் என்னும் அரசப்பிரதிநிதிக்குரிய மாளிகையைக் கட்டத் திட்டமிட்டு, அதை வானமண்டல ஆராய்ச்சி நிலைய குன்றில் கட்டினார். இந்தியக் குடிமக்கள் தங்கி இருந்த "மேல் சந்தை" என்ற பகுதி எரிந்த பொழுது, பெரும் நிலப்பரப்பு வெட்ட வெளியாகியது. கிழக்குப்பகுதியை ஐரோப்பியர்களின் நகர மையமாக ஆக்கும் திட்டத்தால் அவர்கள் முகட்டிலிருந்து செங்குத்தான சரிவுகளில் கீழிறங்கி நடு மற்றும் கீழ் சந்தைக்கு இடம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மேல் சந்தையில் நூலகம், அரங்கம் ஆகிய வசதிகள் மட்டுமல்லாமல், காவலர், இராணுவ தன்னார்வலர்கள் ஆகியோரின் அலுவலகங்கள், நகராட்சி நிர்வாகம் போன்ற வசதிகளுடன், ஊர்ச் சாவடி அமைய இடம் ஏற்பட்டது.
கோடை காலங்களில் பஞ்சாப் மாநில அரசின் கோடைத்தலைநகராக மட்டுமல்லாமல், இந்திய இராணுவத்தின் தலைமைத் தளபதி மற்றும் பல அரசுத் துறைகளின் தலைமை அலுவலகமாகவும் சிம்லா விளங்கியது. கோடைக்காலத்தில், பெரும்பாலான பிரித்தானிய இல்லத்தரசிகள் மற்றும் சமவெளியில் வசிப்போரது பெண்மக்கள் ஆகியோரும் அவர்களுடன் இணைந்து கொள்வர். இவை அனைத்தும் ஒருங்கிணைந்து உருவானதே 'ஷிம்லா சமுதாயம்' ஆகும். சார்லஸ் ஆலன் என்பவரின் கூற்றுப்படி, "இது பிரித்தானிய இந்தியாவிற்கு ஒரு மேல் தட்டு ஏற்பட்டதைப் போன்றதாகும்". மிக அதிகமான விலைவாசி, மிக உன்னதமான, விரும்பத்தகுந்த பருவநிலை, மிகக் குறைந்த எண்ணிக்கையிலுள்ள தங்குமிடங்கள், போன்ற காரணங்கள் இதற்கு உதவியிருக்கலாம். ஒவ்வொரு ஆண்டும், பிரித்தானிய ராணுவ வீரர்கள், வியாபாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகியோர் இந்திய கங்கை நதி சமவெளியின் கோடைகால வெப்பத்திலிருந்து தப்புவதற்காக அங்கே செல்வர். திருமணமாகாத ஆண்கள், குடும்ப உறவற்றவர்கள், கோடையைக் கழிப்பதற்காக வந்துள்ள பெண்டிர் ஆகியோர் அங்கு இருப்பதால், சிம்லா விபச்சார நடவடிக்கைகள் நடைபெறும் இடம் என்றும் விபச்சாரம் பற்றிய வம்புப் பேச்சுகள் உலவும் இடம் எனவும் பெயர் பெற்றது. ஆலன் குறிப்பிடும் கடிதத்தில் ரூடியார்ட் கிப்ளிங் என்பவர் குறிப்பிட்டது போல் சிம்லா "அற்பத்தனம், வம்புப்பேச்சு, சதியாலோசனை ஆகியவற்றுக்காகப் புகழ் பெற்றிருந்தது. இதனையும் பார்க்கவும்[95]
1906-ல் கட்டிய, கால்கா-ஷிம்லா ரயில் தடம் சிம்லாவுக்குப் பிரபலத்தையும், தொடர்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. கால்கா, ஷிம்லா ரயில் தடமானது, 806-க்கும் அதிகமான பாலங்களையும், 103 குகைகளையும் கொண்டதாகும். இது ஒரு பொறியியல் விந்தை எனவும் , கிழக்கிந்தியாவின் பிரித்தானிய அணிகலன் எனவும் பெருமை பெற்றது. 2008-ம் ஆண்டில், யூனேஸ்கோவின் உலகப் பாரம்பரிய இடங்கள் பட்டியலில் , இந்தியாவின் மலை ரயில் தடமாக இடம் பிடித்தது. அது மட்டுமன்றி, பிரித்தானிய இந்தியாவின் பிரிவினைக்கு முன் இப்பகுதியில் கணிசமான அளவிற்கு முஸ்லிம்களும் வாழ்ந்து வந்தனர். மேலும், 1871-லிருந்து, இன்றைய தலைநகரான புதிய சண்டிகர் நகரம் கட்டி முடிக்கப்படும் வரையிலும் , பிரிக்கப்படாத பஞ்சாப் மாநிலத்திற்கு ஷிம்லா தலைநகரமாய் இருந்தது. 1971-ல் ஹிமாச்சல பிரதேசம் உருவானபோது ஷிம்லா இதன் தலை நகரமாயிற்று.
சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டிடங்கள் இன்றும் சிம்லாவில் காணப்படுகின்றன. அரசுப் பிரதிநிதி மாளிகை,ஆக்லாந்து இல்லம், கோர்டான் கோட்டை, பீட்டர் ஹாஃப் இல்லம், கெயிட்டி திரையரங்கம் ஆகியன பிரித்தானிய இந்திய ஆதிக்கத்தின் சுவடுகளாக எஞ்சி இருக்கின்றன. ஜக்கோ மலை மற்றும் பிராஸ்பெக்ட் மலை என்ற இரு குன்றுகளுக்கிடையே, மலைத்தொடரில் சுமார் ஒன்றரை மைல் நீளத்திற்கு பிரித்தானிய ஷிம்லா அமைந்திருந்தது. இந்த மலைமுகட்டின் நீளவாட்டில் முதுகுத் தண்டுபோல அமைந்தது தான் 'மால்' எனப்படும். இதன் தென்திசை விரிவாக்கம் வைஸ்ராய் மற்றும் அவரது மனைவியின் வண்டிகள் தவிர பிற போக்குவரத்துக்குத் தடை விதித்த பகுதியாகும்.
புவியியல்
இமயமலையின் வடமேற்குத் தொடரில் ஷிம்லா அமைந்துள்ளது. கடல்மட்டத்திலிருந்து சராசரியாக 2397.59 மீட்டர் (7866.10 அடி) உயரத்திலுள்ள இந்நகரம், ஒரு மலை முகட்டிலும்அதன் ஏழு முள்போன்ற கூரிய அமைப்புகளின் மீதும் பரந்து விரிந்துள்ளது. இந்நகரம் கிழக்கு மேற்காக சுமார் 9.2 கி.மீட்டர் (22) நீண்டுள்ளது. ஷிம்லாவில் 2454 மீட்டர் (8051 அடி) உயரத்திலுள்ள ஜாக்கோ குன்றுதான், மிக உயரமான இடமாகும். இந்தியாவின் நிலநடுக்க ஆபத்து மண்டலங்களுள் ஷிம்லா நான்காவது மண்டலமாகும் (அதிக அளவு பாதிப்பு விளையும் பகுதி) வலுவற்ற கட்டிடக்கலை நுட்பமும், பெருகி வரும் மக்கள் தொகையும், ஏற்கனவே நிலநடுக்க வாய்ப்புள்ள ஷிம்லா நகரத்தை அச்சுறுத்துகின்றன. நகரில் முக்கிய நீர் நிலைகள் ஏதுமில்லை. 21 கி.மீ.(13 மைல்) தூரத்திலுள்ள சத்லஜ் ஆறு தான் அதற்கு மிக அண்மையிலுள்ள நதியாகும். கிரி, பப்பர் யமுனையாற்றின் கிளைநதிகள் இரண்டும், ஷிம்லா மாவட்டத்தில் நகருக்குத் தொலைவில் ஓடும் ஆறுகளாகும். ஷிம்லாவின் திட்டப்பரப்பில் பசுமைப் பகுதி சுமார் 414 ஹெக்டேர் (1023 ஏக்கர்) ஆகும். நகரின் உள்ளேயும், சுற்றி புறத்தேயும் நிறைந்துள்ள, தேவதாரு, டியோடர், கருவாலி, சிகப்பு நிற மலர்கொத்துகள் கொண்ட மரவகைகள், (ரோடா டென்டிரான்) போன்ற மரங்களே முக்கிய காடுகளாகும். ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளைப் பராமரிக்கும் போதிய உள் கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால், சுற்றுப்புற சூழல் சீரழிந்து, ஷிம்லாவின் சுற்றுச்சூழல் சுற்றுலா மையம் என்ற புகழ் மங்கி விட்டது. கனமழைப் பொழிவுக்குப் பின் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகளும் இவ்விடத்தில் இப்போது அதிகரித்து வரும் பிரச்சனையாகும்.
தட்பவெப்பநிலை
தட்பவெப்ப நிலைத் தகவல், ஷிம்லா | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 17.2 (63) |
19.4 (66.9) |
23.9 (75) |
28.3 (82.9) |
30.0 (86) |
30.6 (87.1) |
27.8 (82) |
25.6 (78.1) |
24.4 (75.9) |
23.9 (75) |
19.4 (66.9) |
20.0 (68) |
30.6 (87.1) |
உயர் சராசரி °C (°F) | 8.3 (46.9) |
8.9 (48) |
13.9 (57) |
18.3 (64.9) |
22.2 (72) |
22.8 (73) |
20.6 (69.1) |
19.4 (66.9) |
19.4 (66.9) |
17.2 (63) |
13.9 (57) |
10.6 (51.1) |
16.3 (61.3) |
தாழ் சராசரி °C (°F) | 2.2 (36) |
2.8 (37) |
6.7 (44.1) |
11.1 (52) |
14.4 (57.9) |
16.1 (61) |
15.6 (60.1) |
15.0 (59) |
13.9 (57) |
10.6 (51.1) |
7.2 (45) |
4.4 (39.9) |
10.0 (50) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | −9.4 (15.1) |
−7.7 (18.1) |
−5.6 (21.9) |
0.0 (32) |
4.4 (39.9) |
7.8 (46) |
10.0 (50) |
11.1 (52) |
5.0 (41) |
3.9 (39) |
0.0 (32) |
−6.1 (21) |
&.4 (15.1) |
பொழிவு mm (inches) | 61 (2.4) |
69 (2.72) |
61 (2.4) |
53 (2.09) |
66 (2.6) |
175 (6.89) |
424 (16.69) |
434 (17.09) |
160 (6.3) |
33 (1.3) |
13 (0.51) |
28 (1.1) |
1,577 (62.09) |
ஆதாரம்: Worldwide Bioclimatic Classification System[6] |
குளிர்காலத்தில் மிகுதியான குளிர்ச்சியும், கோடைக் காலத்தில் மிதமான வெப்பமும் ஷிம்லாவின் தட்பவெப்ப நிலையாகும். வெப்பநிலையானது, ஆண்டு முழுவதும் 3.95 °C (39.11 °F) முதல் 32.95 °C (91.31 °F) வரையிலான வரையறைக்குட்பட்டது. கோடையில் சராசரி வெப்பம் 14 °C முதல் 20 °C வரையும், குளிர்காலத்தில் -7 °C முதல் 10 °C வரையும் பதிவாகின்றன. மாதத்தின் மழை அளவு நவம்பரில் 24 மி.மீ என்ற அளவிற்கும் ஜூலை மாதம் 415 மி.மீ என்ற அளவிற்கும் இடையே வேறுபடுகிறது. குளிர் மற்றும் வசந்த காலத்தில் மாதத்தில் 45 மி.மீ மழை பெய்வதும் பருவ மழை தொடங்கும் ஜூன் மாதத்தில் 115 மி.மீ மழை பெய்வதும் வழக்கமாகும். ஓராண்டில் பொழியும் மொத்த மழையின் சராசரி அளவு 1520 மி.மீ (62 அங்குலம்) ஆகும். வழக்கமாக டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்து வந்த பனிப் பொழிவு, அண்மைக் காலங்களில் (கடந்த பதினைந்து ஆண்டுகளாக), ஆண்டுதோறும் சனவரி, பிப்ரவரியில் நிகழ்கின்றது.
பொருளாதாரம்
சுற்றுலா மற்றும் அரசுத்துறை இங்கு வேலைவாய்ப்பைத் தருகின்றன. இமாச்சலப் பிரதேசத்தின் நிர்வாகத் தலைநகரம் என்பதாலேயே, மத்திய, மாநில அரசுகளின் பல அலுவலகங்கள் இங்குள்ளன. வேலை செய்பவர்களில் கிட்டத்தட்ட பாதி மக்கள் (47%) அரசுப் பணியில் இருப்பவர்களாகும். நேரடி விருந்தோம்பும் தொழிலாளிகளான சுற்றுலா வழிகாட்டிகள், உறைவிடங்களிலும், உணவு விடுதிகளிலும் பணிபுரிவோர் மற்றும் பலர் மிகக் குறைவானவர்களே (10%). எஞ்சியவர்களுள் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவு பரிசுப் பொருட்களை உற்பத்தி செய்தல், தோட்டவிளைபொருட்களைப் பதனிடுதல் போன்ற கைவினைகளிலும், சிறு தொழில்களிலும் ஈடுபடுவோராவர் .
இப்பிரதேசத்தின் வியாபாரம் மற்றும் போக்குவரத்தின் மையமாக ஷிம்லா நகரம் விளங்குவதுடன், இந்திரா காந்தி மருத்துவமனை (முன்னாள் ஸ்நோடவுன் மருத்துவமனை), தீன் தயாள் உபாத்யாய் மருத்துவமனை (முன்னாள் ரிப்பன் மருத்துவமனை), கமலா நேரு மருத்துவமனை மற்றும் இண்டஸ் மருத்துவமனை ஆகிய நான்கு பெரிய மருத்துவமனைகள் மற்றும் ஒரு மருத்துவக் கல்லூரியை இப்பகுதிக்கு வழங்கி உடல்நலம் பேணும் மையமாகவும் திகழ்கிறது. ஷிம்லாவை ஒரு கவர்ச்சியான ஆரோக்கிய சுற்றுலா மையமாக மாற்றுவதற்கு, நகரின் முன்னேற்றத் திட்டங்கள் முனைகின்றன.
நகராட்சி நிர்வாகம்

ஷிம்லா நகர் மற்றும் அதன் புறநகர் பகுதிகளான தால்லி, டுட்டு, புதிய ஷிம்லா ஆகியவற்றின் நிர்வாகப் பொறுப்புகள் ஷிம்லா நகராட்சி மன்றத்திற்குண்டு. 1851 ம் ஆண்டு துவங்கிய இந்த நகராட்சி மன்றத்தில், இமாசலப் பிரதேச அரசு நியமிக்கும் 3 உறுப்பினர்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 27 உறுப்பினர்கள் பொறுப்பு வகிக்கிறார்கள். சமூக சேவை, கல்வித் துறை மற்றும் பிற செயல்களில் மேம்பாட்டின் அடிப்படையில் உறுப்பினர்கள் நியமனம் செய்கிறார்கள். 33 சதவீத இருக்கைகள் பெண்களுக்கு ஒதுக்கியுள்ளன. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடக்கிறது. மேயரையும், துணை மேயரையும் மன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கின்றனர். 2008 ம் ஆண்டு ஜுன் மாத நிலவரப்படி இந்திய தேசிய காங்கிரஸ் (எதிர்க்கட்சி) மற்றும் பாரதீய ஜனதா கட்சி (ஆளும் கட்சி) ஆகியவை இரண்டு பெரிய அரசியல் கட்சிகளாகும். மாநில அரசால் நியமிக்கப்படும் ஆணையர்தான் நகரசபையின் நிர்வாகத் தலைவர்.
ஷிம்லா நகரமானது, மாநிலங்களவைக்கு (விதான் சபா) ஓர் உறுப்பினரையும், பாராளுமன்ற மக்களவைக்கு (லோக் சபா) ஓர் உறுப்பினரையும் அனுப்பி வைக்கிறது. நகரின் சட்டம், ஒழுங்குமுறைகளை காவல்துறை, கண்காணிப்புத்துறை, அமலாக்க இயக்குனரகம், தடய அறிவியல் துறை, தீயணைப்புத் துறை, சிறைத்துறை மற்றும் ஊர்க்காவல் துறை ஆகிய அனைவரும் ஒருங்கிணைந்து பராமரிக்கி றார்கள். சிம்லா நகரில் மட்டும் 5 காவல் நிலையங்களும், 3 தீயணைப்பு நிலையங்களும் உள்ளன. ௦காவல் துறை மேலாளர், காவல் துறைக்குத் தலைமை ஏற்றுள்ளார். மாநிலத்திலுள்ள நான்கு ஆயுதம் தங்கிய போலீஸ் பட்டாளத்தில் ஒன்றான முதலாம் ஆயுதம் தாங்கிய போலீஸ் பட்டாளமும், நகரிலுள்ள காவல் துறையினருக்கு உதவி செய்யக் காத்திருக்கிறார்கள். விரைவு நடவடிக்கை நீதிமன்றம் உள்பட, மொத்தம் பதினொரு நீதிமன்றங்கள் இந்த மாவட்டத்தில் செயல்புரிகின்றன.
மக்கள் தொகை விவரங்கள்
ஷிம்லா நகரம் என்பது, ஷிம்லா நகராட்சி மன்றம் மற்றும் சிம்லா திட்ட விரிவாக்கப் பகுதிகள் ஆகிய இரண்டையும் கொண்டது. ஷிம்லா திட்ட விரிவாக்கப் பகுதி என்பது, தால்லி, டுட்டு, புதிய ஷிம்லா நகர்ப்புற தொகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியது. 2001-ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஷிம்லா நகரமானது 1,042,161 ஜனத்தொகையுடன் 19.55 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுடையது. சுற்றுலாத்துறையின் மூலமாக வந்துபோகும் பயணிகளால் நிரந்தரமற்ற மக்கள்தொகை 75000 ஆகும். மக்கள்தொகையில் பெரும்பகுதியினர், அதாவது சுமார் 55% சதவீதத்தினர் 16–45 வயதுக்கு உட்பட்டவர்களாகும். அடுத்து 28 சதவீதத்தினர் 15 வயதிற்குக் குறைவான சிறார்கள். 2001 கணக்கின்படி, 1000 பையன்களுக்கு, 930 பெண்கள் என்ற குறைவான பால் விகிதம் இம்மாநிலத்திற்கு இயல்பற்றதல்ல எனினும் கவலைக்குரியதாகும்.
1992-ல் 36% சதவீதமாக இருந்த வேலையற்றோர் எண்ணிக்கை, 2006-ல் 22.6% சதம் என்று கணிசமாக குறைந்துவிட்டது. சமீபத்திய தொழில்மயமாக்கல், சேவை செய்யும் நிறுவனங்களின் வளர்ச்சி, மற்றும் அறிவு வளர்ச்சி என்ற காரணங்களாலேயே வேலையில்லாதோர் எண்ணிக்கை குறைந்தது என்று குறிப்பிடப்படுகிறது.ஷிம்லா மாவட்டத்தில் 80சதவீதத்தினரும், மொத்த மாநிலத்தில் 77 சதவீதத்தினரும் கல்வி அறிவு பெற்றவர்கள் என்பதை ஒப்பிடும்போது ஷிம்லா நகரத்தில் 84 சதவீதத்தினர் படித்தவர்களாவர். இமாசலப் பிரதேசத்தின் பூர்வீகக் குடிமக்களே ஷிம்லா நகரின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள். பிரிட்டிஷ் இந்தியாவின் பிரிவினையின்போது, இங்கிருந்த பெரும்பாலான முகமதியர்கள் வெளியேறாமல் இங்கயே தங்கிவிட்டார்கள். சோலன் பகுதியல் வசிக்கும் சாஹ்னிஸ் போன்ற முஸ்லிம்களும் இதில் அடக்கம். ஹிந்தி, பஞ்சாபி, பிஹாரி போன்றவை மக்கள் பரவலாக பேசும மொழிகளாகும். இங்குள்ள முக்கியமான மதம் இந்து மதமாகும் (89%), அதற்கடுத்தது சீக்கிய மதமாகும் (9.7%), சிறுபான்மையினராக கிறித்துவர்களும், திபெத்திய பெளத்தர்கள், இசுலாமியர் ஆகியோரும் உள்ளனர்.
கலாச்சாரம்
ஷிம்லா நகரவாசிகளை ஷிம்லாயிட்ஸ் என்று சாதாரணமாக அழைக்கிறார்கள். அதிக அளவில் பட்டணத்து மேட்டுக்குடி மக்கள் இருப்பதால், அவர்கள் இங்கு பல வகையான விழாக்களை கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் மிக அதிகமான சுற்றுலாப் பயணிகள் வரும் காலத்தில் சிம்லா கோடைத் திருவிழவானது, 3 - 4 நாட்கள் மலைமுகட்டில் கொண்டாடுகிறார்கள். இந்திய நாட்டின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் பிரபலமான பாடகர்கள் வந்து பாடுவது இந்தக் கோடை விழாவின் சிறப்புகளில் ஒன்று. ஷிம்லாவில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. பலரும் கூடும் இடங்களான மால் சாலையும், மலைமுகடும் நகரின் மையத்தில் உள்ளன. புரதான கட்டிடங்கள் பலவும் அவற்றின் தொன்மையான டூ டர்பீதன் கட்டிடக்கலை அம்சங்களுடன் இன்னும் பாதுகாக்கிறார்கள். இந்திய உயர்கல்விக் கலாசாலை அமைந்துள்ள வைஸ் ரீகல் லாட்ஜ்ம், தற்போது ஆடம்பர விடுதியாக இருக்கும் வைல்ட் ஃப்ளவர் ஹாலும், அவற்றுள் பிரபலமானவையாகும். 1974-ல் கட்டிய அரசு அருங்காட்சியகத்தில், சிம்லா பிராந்தியத்தின் ஓவியங்கள், ஆபரணங்கள், துணிமணிகள், கலாச்சாரத்தை விவரிக்கும், ஆடைகள் ஆகியவற்றைக் காணலாம். நகரிலிருந்து இன்னும் சற்றுத் தொலைவில் சென்றால், இந்தியாவிலேயே மிகப் பழமை வாய்ந்த, ஒன்பது குழிகள் கொண்ட நல்டேரா கோல்ப் மைதானத்தைக் கண்டு மகிழலாம். பனிக் காலத்தில் மட்டும் நடக்கும் பனிச்சறுக்கு விளையாட்டு அரங்கமான குப்ரி நகரிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மலைமுகட்டில்நீண்டு அமைந்திருக்கும் லக்கர் பஜார் என்பது, மரத்தால் செய்த கைவினைப் பொருட்கள், பரிசு நினைவுப்பரிசுப் பொருட்கள் விற்பனையாகும் அங்காடியாகும். சத்லஜ் ஆறு ஆற்றங்கரையில், ஊருக்கு 55 கிலோமீட்டர் தொலைவில், டாட்டா பாணி என்ற பெயருடையதும் மருத்துவ முக்கியத்துவம் கொண்டுள்ளதாகக் கருதப்படுவதுமான கந்தக சுடு நீரூற்று அமைந்துள்ளது. ஆசியா கண்டத்திலேயே உள்ள ஒரே ஒரு இயற்கைப் பனிச் சறுக்கு போட்டிக்களமும் ஷிம்லாவில் மட்டுமே உள்ளது. மாநில மற்றும் அகில இந்திய அளவிலான போட்டிகள் அடிக்கடி இங்கே நடக்கும். இந்த போட்டிக்களத்தை நிர்வகிக்கும் தி சிம்லா ஐஸ் ஸ்கேட்டிங் கிளப் என்ற நிறுவனம், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஒரு மனமகிழ் விழாவை நடத்துகிறார்கள். இவ்விழாவில் மாறுவேடப் போட்டியும், பனிக் கட்டியில் சறுக்கும் போட்டியும் சிறப்பம்சங்களாகும். சமீபகாலமாக, பூமி வெப்பமயமாதலாலும், சிம்லா நகரிலும் அதன் சுற்றுப்புறத்திலும் நகர்ப்புற வளர்ச்சி அதிகரிப்பதாலும், இங்கு குளிக் காலத்தில் பனிக் கட்டிகள் மீது நடைபெறும் விழாக்கள், நிகழ்ச்சிகள் கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருகின்றன. அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் பல பக்தர்கள் வந்து அடிக்கடி தரிசனம் செய்யும் பல கோவில்கள் ஷிம்லாவில் உண்டு. இந்துக் கடவுளான காளிக்காகப் படைத்த காளிபாரி- கோவில் மாலுக்கு அருகில் உள்ளது. இந்துக் கடவுளான ஹனுமனுக்காக ஏற்பட்ட ஜக்கூ கோவில் சிம்லாவின் உச்சியில் இருக்கிறது. மற்றொரு ஹனுமான் கோவிலான சங்கட்மோச்சன் எப்போதும் பல குரங்குகள் கூடி இருக்கும் இடம் எனப் புகழ் பெற்றது. இந்தக் கோவில் சிம்லா-கால்கா நெடுஞ்சாலையில் நகருக்கு 10 கிலோமீட்டர்கள் (6.2 mi) தொலைவில் உள்ளது. அருகேயுள்ள தாராதேவி ஆலயம், பல பண்டிகைகளும், மதச்சடங்குகளும் நடத்தும் இடமாகும். பேருந்துகளின் கடைசி நிறுத்தத்தின் அருகிலுள்ள குருத்வாராவும் மலைமுகட்டில் உள்ள மாதாகோயிலும், வணங்கத்தக்க பிற முக்கியமான இடங்களாகும். மேலும்,முஸ்லிம்களின் இரண்டு பள்ளி வாசல்களும் இங்கு உள்ளன. இங்கு காஷ்மீரை சேர்ந்த முஸ்லிம்கள் ரயில்வே போர்டர்களாகவும் சுமை தூக்கும் கூலி ஆட்களாகவும் உள்ளனர். சமீபத்தில் சிம்லா சென்ற எனக்கு இந்த காஷ்மீர் மக்களின் துயரங்களை நேரடியாக காணும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே காஷ்மிரி நபர் ஒரு பெரிய இரும்பு பீரோ வை தூக்கி சென்ற காட்சிகள் சர்வ சாதரணமாக நடக்கின்றன.
கல்வி

நகரில் 14 சிறார் பராமரிப்பு நிலையங்களும், 63 ஆரம்பப்பள்ளிகளும் உள்ளன. பிரித்தானிய காலம்தொட்டே பல பள்ளிகள் இயங்குகின்றன. பிஷப் காட்டன் பள்ளி , சிம்லா பப்ளிக் பள்ளி,, செயின்ட் எட்வார்ட்ஸ் பள்ளி, தாரா ஹால் , ஹைனால்ட் பப்ளிக் பள்ளி , டிஏவி க்கர் பஜார் , டிஏவி புது சிம்லா , ஆக்லேண்டு ஹவுஸ் பள்ளி , தயானந்து பப்ளிக் பள்ளி , சாரப்ராவில் உள்ள செயின்ட் பீட்ஸ் (பெண்கள்) பள்ளி மற்றும் ஹிமாலயன் இன்டர்நேசனல் பள்ளி, செயின்ட் தாமஸ் சிம்லா, சாப்ச்லீ பள்ளி ஆகிய பள்ளிகள் பிரபலமானவை. கேந்திரிய வித்யாலயா ஷிம்லா ஜக்கூ என்பது ஷிம்லாவில் உள்ள தரமான பள்ளிகளில் ஒன்று. ஹார்கோர்ட் பட்லர் பள்ளி என்பதே இதன் முந்தைய பெயர்.
இந்திர காந்தி மருத்துவ கல்லூரி மற்றும் பல் மருத்துவ கல்லூரி ஷிம்லாவிலுள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களாகும். செயின்ட் பீட்ஸ் மற்றும் ராஜ்கியா கன்யா மகாவித்யாலயா (ஆர் கே எம் வீ) ஆகியவை பெண்கள் மட்டுமே பயிலும் கல்லூரிகள். சஞ்சாவுலி அரசுக் கல்லூரியும், சவுரா மைதான அரசுக் கல்லூரியும் நகரிலுள்ளன. வைஸ் ரீகல் லாட்ஜில் அமைந்துள்ள இந்திய உயர்கல்வி கலாசாலை யானது கலை, இலக்கியம், இந்திய பண்பாடு, , மதம், சமூக அறிவியல், இயற்கை அறிவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிப் படிப்புக்கான உறைவிட மையமாகும். இமாசலப் பிரதேச மாநிலப் பல்கலைக் கழகமும் ஷிம்லாவில் அமைந்துள்ளது. பல்கலைக்கழக தகவல் தொழில் நுட்ப கலாசாலை, (UIIT) என்னும் தொழில் நுட்பக் கல்வியளிக்கும் ஒரு முதன்மை நிறுவனம் இங்கு அமைந்துள்ளது.
சுமார் 47,000 பழைய புத்தகங்களை தம்மிடையே சேமித்து வைத்துள்ள இரண்டு நூலகங்கள் ஷிம்லாவில் உள்ளன. பல்கலைக் கழகத்தின், காந்தி பவனில் உள்ள நூலகத்தில் 40,000 க்கும் மேற்பட்ட புத்தகங்களும், மலைமுகட்டிலுள்ள புராதன நினைவுக் கட்டிடத்திலுள்ள நூல் நிலையத்தில் சுமார் 7000 புத்தகங்களும் உள்ளன.
இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ICAR) அங்கமாகிய, மத்திய உருளைக் கிழங்கு ஆராய்ச்சி நிறுவனமும், இந்தியத் தணிக்கை மற்றும் கணக்கு சேவை (IA&AS) அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் தேசிய தணிக்கை மற்றும் கணக்கு கல்விக் கழகம்]] ஷிம்லாவில் உள்ள பிற உயர் கல்வி நிறுவனங்களாகும்.
காணத் தூண்டும் இடங்கள்
ஷிம்லா நகரின் பிரதான கடைத்தெரு மால். உணவகங்கள், மனமகிழ் மன்றங்கள், வங்கிகள், மதுபானக் கடைகள், தபால் நிலையங்கள், சுற்றுலா அலுவலகங்கள் ஆகியவன அனைத்தும் அங்குள்ளன. கெய்ட்டி திரையரங்கும் இங்குதான் உள்ளது. இந்த இடம் அனைத்து மக்களும் கூடும் முக்கியமான இடமாதலால், மக்கள் இத்தெருவில் மெதுவாக மேலும், கீழும் நடமாடிக் கொண்டும் இடையில் நின்று யாருடனாவது வம்பு பேசிக்கொண்டும் இருப்பார்கள். ரிட்ஜ் மற்றும் ஸ்கேண்டல் பாயிண்ட் இரண்டும் மாலில், முக்கியமான ஒன்று கூடும் இடங்கள்.
கிறைஸ்ட் சர்ச் : ஷிம்லாவின் ரிட்ஜ் என்ற மலை யுச்சி முகட்டில் அமைந்துள்ள இந்த கிறிஸ்துவ ஆலயம் வட இந்தியாவின் இரண்டாவது மிகத் தொன்மையான ஆலயமாகும். இது ஒரு கம்பீரமான வெளித் தோற்றம் உடையது. உட்புறத்தில் வண்ணமிகு கண்ணாடி ஜன்னல்களின், அழகும் கண்ணைக் கவரும். இந்த கண்ணாடி ஜன்னல்கள் இறைவன் மேலுள்ள நம்பிக்கை, எதிர்பார்ப்பு, அருளிரக்கம், சகிப்புத்தன்மை, பொறுமை, தன்னடக்கம் போன்ற குணாதிசயங்களைப் பிரதிபலிக்கின்றன. இங்கு வரும் அனைவரும் இந்த கிறிஸ்து தேவாலயத்தில் சிறுது நேரம் செலவிட வேண்டும்.
ஜக்கு மலை : ஷிம்லா நகரிலிருந்து 2 கீ.மீ. தூரத்திலுள்ளதும், 8000 அடி உயரத்தில் அமைந்துள்ளதுமான மிக உயர்ந்த சிகரமான இந்த ஜக்கு மலையுச்சியிலிருந்து, ஷிம்லா நகரின் அற்புதமான அழகையும் பனிக்கட்டிகள் மூடிய இமயமலைத் தொடர்களையும் காணலாம். இந்த மலை உச்சியில், ஒரு பழமையான அனுமான் கோவில் உள்ளது. இங்கு வரும் பார்வையாளர்கள் போடும் தின்பண்டங்களால் பசியாறக் காத்திருக்கும் குறும்புத்தனம் மிக்க எண்ணற்ற குரங்குகளுக்கு இக்கோவில் இருப்பிடமாகும்.
ஷிம்லா அரசு அருங்காட்சியகம் : 1974-ல் துவங்கிய இந்த அருங்காட்சியகம், இந்த மலை மற்றும் மலை சார்ந்த இயற்கை வளங்களையும், கலாச்சார செல்வத்தையும் பாதுகாக்கிறது. மிகச் சிறிய அளவில் வரையப்பட்ட பஹாரி ஓவிங்கள், சிற்பங்கள், வெண்கல மற்றும் மர வேலைப்பாடுகளும் இந்த மாநிலத்திற்குரிய அழகு சாதனப் பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் ஆகியன இங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.
இந்திய உயர்கல்விக் கலாசாலை 1884-88 ல் வைஸ் ரீகல் லாட்ஜில், இந்நிறுவனம் துவங்கியது..
கோடை மலை : மலையுச்சி முகட்டிலிருந்து (ரிட்ஜ்) சுமார் 5 கி.மீ. தொலைவில், சுமார் 6,500 அடி உயரத்தில், ஷிம்லா-கால்கா ரயில்பாதையில் அழகான கோடை மலைக் குடியிருப்பு அமைந்துள்ளது. மகாத்மா காந்தியடிகள் சிம்லாவுக்குச் சென்றபோதெல்லாம், இந்த அமைதியான சூழலில் தான் வசித்து வந்தார். இமாசலப் பிரதேசத்தின் பல்கலைக் கழகம் இங்குதான் உள்ளது.
அண்ணான்டேல் : ரிட்ஜிலிருந்து சுமார் 2–4 கி.மீ. தூரத்திலுள்ள அண்ணான்டேல் ஒரு சிறப்பான விளையாட்டு மைதானமாக 6,117 அடி உயரத்தில் உருவெடுத்துள்ளது. கிரிக்கெட், பிக்னிக், போலோ போன்றவற்றுக்கு மிகவும் விரும்பப்படுகின்ற இடம்.
தாரா தேவி : ஷிம்லா பேருந்து நிலையத்திலிருந்து 11 கி.மீ. தொலைவிலுள்ளது. தாரா தேவி மலையின் உச்சியில் நட்சத்திர தேவதைகளுக்காக அர்பணிக்கப்பட்ட கோவில் உள்ளது. இராணுவ பால்பண்ணை நகரும், அகில இந்திய சாரணர் இயக்கத்தின் தலைமையகமும் இங்குதான் உள்ளன.
சங்கட் மோச்சன் : ஒரு அனுமன் கோவில் இங்குள்ளது.
ஜுங்கா : ஷிம்லாவிலிருந்து 26 கி.மீ. தொலைவில் உள்ள ஜுங்கா, ஒரு தாலுக்காவாகும். இதன் பழங்காலப் பெயர் ஜுங்கா . கியோன்தால் எஸ்டேட் என்று அழைக்கப்பட்ட, ஜுங்கா என்ற மாநிலத்தின் அரசகுடும்பம் தனிமையில் ஓய்வெடுக்கும் இடமாக இது இருந்துள்ளது.
மஷோப்ரா : ஷிம்லாவிலிருந்து 13 கி.மீ. தூரத்திலுள்ள இவ்விடத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதத்தில் சிப்பி என்னும் விழா கொண்டாடப்படுகிறது.
குப்ரி, ஷிம்லாவிலிருந்து 16 கி.மீ. தொலைவில் 8,600 அடி உயர சிகரத்தில் குளிர்கால விளையாட்டுத் தலை நகரமாகவுள்ள குஃப்ரியில் சிறு மிருகக் காட்சி சாலையும் உள்ளது.
சாரப்ரா : குஃப்ரிக்குச் செல்லும் வழியில் ஷிம்லாவிலிருந்து 13 கி.மீட்டர் தொலைவில் இந்த இடம் உள்ளது.
நல்தேரா : ஷிம்லாவிலிருந்து 22 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஒன்பது துளை நல்தேரா கோல்ப் கிளப் இங்குதான் உள்ளது. ஆண்டுதோறும் ஜுன் மாதத்தில் நல்தேராவில்தான் சிப்பி திருவிழா நடைபெறும்.
ததாபானி : ததாபானி புனிதக் கோவிலருகே கந்தக வெந்நீர் ஊற்று இருக்கிறது.
செயில் : இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன், பாட்டியாலா மகா ராசாவிற்குச் சொந்தமான இப்பகுதி கோடைக்கால, தலை நகரமாயிருந்தது. உலகிலேயே அதிக உயரத்திலுள்ள கிரிக்கெட் ஆடுகளம் இங்குதான் உள்ளது.
ஆர்க்கி : அந்நாளைய பாகல் என்ற மலை நாட்டின் தலைநகரமாக இருந்தபோது கட்டிய, 18 ம் நூற்றாண்டின் பழமையான கோட்டையும் இங்குள்ளது.
சஞ்சாவுலி : ஷிம்லா நகரின் முக்கியமான புறநகரமாகும்.
போக்குவரத்து
ஷிம்லாவின் உள்ளூர் போக்குவரத்து, அரசுத் துறை பேருந்துகள் அல்லது தனியார் வாகனங்கள் மூலமாக நடைபெறுகிறது. நகரின் மையப் பகுதியைச் சுற்றிலும் உள்ள வட்டமான சாலையில் அடிக்கடி பேருந்துகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நகரத்தை விட்டு வெளியே செல்வதற்கு சுற்றுலா வாடகை வண்டிகளும் கிடைக்கின்றன. உள்ளூர் வாசிகள் நகருக்குள் நடந்தே செல்கிறார்கள். மால், ரிட்ஜ் மற்றும் அருகிலுள்ள கடைத்தெருக்களில் தனியார் வாகனங்கள் செல்லுவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது. குறுகலான ரோடுகள், செங்குத்தான சரிவுகள் உள்ள காரணத்தினால், இந்தியாவின் பிற நகரங்களில் பொதுவாகப் பயன்ப்படும் ஆட்டோ ரிகஷாக்கள் இங்கு காணப்படுவதில்லை.
ஷிம்லா நகரம், ரயில் மற்றும் சாலை வசதியால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 22 (NH 22) ஷிம்லா நகரை அருகிலுள்ள பெரிய ஊரான சண்டிகருடன் இணைக்கிறது. [[கல்கா ஷிம்லா ரயில் மிகக் குறுகிய ரயில் பாதையில் 96 கி.மீ. தூரத்துக்கு, மிக செங்குத்தாக உயர்ந்து செல்வது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில்|கல்கா ஷிம்லா ரயில் மிகக் குறுகிய ரயில் பாதையில் 96 கி.மீ. தூரத்துக்கு, மிக செங்குத்தாக உயர்ந்து செல்வது கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் ]] இடம் பெற்றுள்ளது. கல்கா என்ற சமவெளி ரயில் நிலையத்திலிருந்து இந்தியாவின் பிற பெரிய நகரங்களுக்குக்கும் தினமும் ரயில்கள் புறப்பட்டுச் செல்கின்றன. 12 கி.மீ. தொலைவிலுள்ள ஜுப்பர்ஹட்டி விமான நிலையம் ஷிம்லாவை டெல்லியுடன் இணைக்கிறது.
காட்சியகம்
- மேலிருந்து சிம்லாவின் காட்சி .
- சிம்லாவின் அருகிலுள்ள மலைகளின் காட்சி.
- சிம்லாவின் இரவுக்காட்சி.
- பனியில் புதைந்த சிம்லா
- சிம்லா ரிட்சின் தெற்கு பக்கம்.
- ரிட்சில் அமைந்துள்ள கிறித்து தேவாலயம்
- சிம்லா ரிட்ஜ்
- குளிர்காலத்தில் சிம்லாவின் சாலை, 1905 ஆம் ஆண்டில்
- சிம்லாவின் நகராட்சி மன்றம்
- ஷிம்லாவின் மால் வீதியும், சந்தைக்கடைகளும்
மேலும் பார்ப்பதற்கு..
- 1972 ஆண்டு, ஜுலை 3 ம் நாள் இந்தியா பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிம்லா ஒப்பந்தம்.
- (1913) ஆண்டு பிரிட்டனக்கும், திபெத்துக்கும் இடையே ஒரு சிம்லா கருத்துணர்வு ஏற்பட்டது. 1914 ம் ஆண்டு இறுதியில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்குப்பின் கையழுத்தானது இந்த ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தின் சட்டப்பூர்வ அதிகாரம் இன்னும் வாதிக்கப் பட்டாலும், இதுவே இன்றளவும், இந்தியா, சீனவுக்கிடையேயான எல்லையை உறுதி செய்கிறது.
வெளி இணைப்புகள்
- சிம்லா மாவட்டத்தின் அதிகார்வபூர்வ வலைத்தளம்
- சிம்லா நகராட்சி நிர்வாகம்
- மழை பெய்த அளவின் வரைபடம்
- சிம்லாவின் சமீபகால தட்பவெப்பநிலை
விக்கிப்பயணத்தில் Simla என்ற இடத்திற்கான பயண வழிகாட்டி உள்ளது.
- http://india.gov.in/govt/governor.php
- http://india.gov.in/govt/chiefminister.php
- "Official Web Site of District Shimla".
- யூதர்கள், முகமதியர்கள், பிற மத வகுப்பினர் ஆகியோருக்கிடையே ஆராய்ச்சிகளும் மதப் பிரச்சார பணிகளும் - ஜோசப் ஓல்ஃப்பினால் எழுதப்பட்டது. ஓ ரோகர்சால் வெளிடப்பட்டது.
- "India - simla". Centro de Investigaciones Fitosociológicas. பார்த்த நாள் December 4, 2011.