விபீடணன்

விபீடணன், விபீசணன் அல்லது வீடணன் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு ஒரு கதை மாந்தர். இவரது மகள் திரிசடை ஆவார். இவன் இராவணனின் தம்பி ஆவான். நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தான். சீதையை இராவணன் கடத்தி வந்த போது அநியாயம் என்று எடுத்து உரைத்தான். சீதையை விட்டுவிடுமாறு பல ஆலோசனைகள் கூறினான். ஆனால் இராவணன் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டான். நியாயத்துக்கு எதிராக இராவணனுக்கு உதவ விரும்பாத விபீடணன் இராமனிடம் அடைக்கலம் அடைந்து அவனுக்கு உதவினான்.[1] இராவணனுக்கு எதிராக இராமன் நடத்திய போரில் இராவணனும், அவனது கூட்டத்தினரும் மாண்டனர். இராமன் விபீடணனை இலங்கை அரசனாக முடி சூட்டினான்.

விபீடணன்
இலங்கையின் மன்னனாக விபீடணன்
ஆட்சிஇராவணனுக்குப் பின் அரசனானான்.
முன்னிருந்தவர்இராவணன்
அரசிசார்மா
மரபுபுலாத்தியம்
தந்தைவிசுராவாசு
தாய்கேசினி
பிறப்புஇலங்கை
இறப்புபுராணங்களின் படி இவனுக்கு இறப்பில்லை

படக்காட்சிகள்

கோதண்டராமர் கோயிலின் கருவறைச் சுவர்களில் வரைந்துள்ள இராமாயண நிகழ்வுகளில், வீடணன் குறித்தான சித்திரங்கள்.

மேற்கோள்கள்

  1. வீடணன் அடைக்கலப் படலம்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.