விஜய் விருதுகள்
விஜய் விருதுகள் (Vijay Awards) ஸ்டார் விஜய் தொலைக்காட்சி என்ற தமிழ் தொலைக்காட்சி குழுமத்தால் தமிழ் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகளாகும். இவ்விருதுகள் 2006 ஆம் ஆண்டு முதல் ஆண்டுக்கொரு முறை வழங்கப்படுகின்றன.[1]. இந்த விருதுகளில் பொதுமக்களே ஆறு பிரிவுகளில் தங்களுக்குப் பிடித்தவர்களை வாக்குகள்மூலம் விருதுக்குத் தேர்ந்தெடுக்க முடியும் என்பது இதன் தனிச்சிறப்பு.[2][3]
விஜய் விருதுகள் | |
![]() | |
விருதுக்கான காரணம் | தமிழ் திரைப்படத் துறையினருக்கு வழங்கப்படும் விருதுகள் |
வழங்கியவர் | விஜய் தொலைக்காட்சி |
நாடு | ![]() |
முதலாவது விருது | 2006 ஆம் ஆண்டு முதல் |
வரலாறு
விஜய் விருதுகள் முதல் விழாவில் கொடுக்கப்பட்ட விருதுகள் அனைத்தும், 2005ஆம் வருடத்துக்கு மட்டும் கொடுக்கப்படாமல், 2006 வரை வெளியான அனைத்து திரைப்படங்களையும் சேர்த்து கணக்கிட்டுக் கொடுக்கப்பட்டது. அதில் வாக்களித்த மக்களுக்கும் 2006 ஆம் ஆண்டு வரைக்கும் வந்த அனைத்து திரைப்படங்களில் இருந்தும் தங்களுக்குப் பிடித்த ஒரு படத்துக்கு அல்லது திரைப்படத் துறையைச் சேர்ந்தவருக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதன் படி 2006 ஆம் ஆண்டு வரை வெளியான திரைப்படம் மற்றும் அதில் பணியாற்றியவர்களுக்கு - பிடித்த நாயகன், நாயகி, படம், இயக்கம், இசை, பின்னணிப் பாடகர், பின்னணிப் பாடகி, எதிர் நாயகன்(வில்லன்), நகைச்சுவை நடிகர் போன்ற ஒன்பது துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் தரப்பட்டன. அது மட்டுமின்றி, மேலும் 10 விருதுகள் இவ்விழாவைச் சேர்ந்த நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டும் கொடுக்கப்பட்டன. இந்த முறைமை விஜய் விருதுகள் இரண்டாம் விழாவில் மாற்றியமைக்கப்பட்டது. அதன் படி மக்கள் வாக்கெடுப்பு மூலம் கொடுக்கப்பட்ட விருதுகளில் 5 விருதுகள் நீக்கப்பட்டு 2 விருதுகள்(பாடல், கேளிக்கையாளர் 2008 முதல்) சேர்க்கப்பட்டு, மொத்தம் 6 விருப்ப விருதுகள்(பிடித்த நாயகன், நாயகி, படம், இயக்கம், பாடல், கேளிக்கையாளர்) கொடுக்கப்பட்டன.[4][5][6]
விருதுகள்
விஜய் விருதுகள் 3 வகைப்படும். அவை நடுவர் விருதுகள், விருப்ப(மக்கள்) விருதுகள், விலக்கப்பட்ட விருதுகள்.
நடுவர் விருதுகள்
- சிறந்த திரைப்படம்
- சிறந்த இயக்குநர்
- சிறந்த நடிகர்
- சிறந்த நடிகை
- சிறந்த துணை நடிகர்
- சிறந்த துணை நடிகை
- சிறந்த நகைச்சுவை நடிகர்
- சிறந்த எதிர்நாயகன்
- சிறந்த அறிமுக நடிகர்
- சிறந்த அறிமுக நடிகை
- சிறந்த இசையமைப்பாளர்
- சிறந்த ஒளிப்பதிவாளர்
- சிறந்த படத்தொகுப்பாளர்
- சிறந்த கலை இயக்குநர்
- சிறந்த ஆண் பின்னணி பாடகர்
- சிறந்த பெண் பின்னணி பாடகர்
- சிறந்த பாடலாசிரியர்
- சிறந்த கதை, திரைக்கதை எழுத்தாளர்
- சிறந்த நடனாசிரியர்
- சிறந்த சண்டைப்பயிற்சியாளர்
- சிறந்த ஒப்பனை
- சிறந்த ஆடையமைப்பாளர்
- இந்த ஆண்டின் சிறந்த கண்டுபிடிப்பு
- சிறந்த பாத்திரமைப்பு
- தமிழ் திரைத்துறையின் பங்களிப்பு
- சிவாஜி விருது
விருப்ப விருதுகள்
விலக்கப்பட்ட விருதுகள்
- இந்த ஆண்டின் அடையாளம்(2006, 2007, 2009ல் மட்டும்)
சில விருதுகள் 2006 ஆம் ஆண்டில் மட்டும் கொடுக்கப்பட்டு அதன் பிறகு விலக்கப்பட்டு விட்டன. அவை அனைத்தும் மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் கொடுக்கப்பட்ட விருப்ப விருதுகள் என்பது குறிப்பிடத்தக்கது.[7]
- விருப்பமான இசையமைப்பாளர் (2006 இல் மட்டும்) - ஏ.ஆர். ரகுமான்
- விருப்பமான எதிர்நாயகன் (2006 இல் மட்டும்) - பிரகாஷ் ராஜ்
- விருப்பமான பின்னணிப் பாடகர் (2006 இல் மட்டும்) - பாலசுப்பிரமணியன்
- விருப்பமான பின்னணிப் பாடகி (2006 இல் மட்டும்) - ஜானகி
- விருப்பமான நகைச்சுவை நடிகர் (2006 இல் மட்டும்) - விவேக்
- விஜய் விருதுகள் (நாளைய சூப்பர் ஸ்டார்)
- விஜய் விருதுகள் (நாளைய சூப்பர் ஸ்டார்) என்ற விருது, விஜய் விருதுகள்(2006) நிகழ்ச்சியில் மட்டும் கொடுக்கப்பட்ட ஒரு விருதாகும். இதை நடிகர் விஜய், அவர் நடித்த திருப்பாச்சி மற்றும் சிவகாசி ஆகிய திரைப்படங்களுக்காக வாங்கினார். இது விஜய் தொலைக்காட்சியால் நடத்தப்பட்ட மக்கள் பொது வாக்கெடுப்பு மூலம் கொடுக்கப்பட்ட விருதாகும். அதன் பிறகு இந்த விருது 2011 ஆம் ஆண்டு வரைக்கும் யாருக்கும் வழங்கப்படவில்லை.[7]
விழாக்கள்
இவ்விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. முதல் விருது விழா மட்டும் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதன் பிறகு அவ்வாறு செய்யப்படவில்லை. இவ்விழா விஜய் தொலைக்காட்சியில் மட்டும் ஒளிபரப்பப்படும் விழா என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விழாக்கள் வழக்கமாக (முதல் விழா தவிர்த்து) மே அல்லது சூன் மாதங்களில் தென்னிந்திய பிலிம்ஃபேர் விருதுகள் விழாவுக்கு முன்னரே கொடுக்கப்படுகின்றன.
எண் | விழா | தியதி | நிகழ்ச்சி தொகுப்பாளர்(கள்) | விளம்பரதாரர் |
---|---|---|---|---|
1. | முதல் விஜய் விருதுகள் | டிசம்பர் 23, 2006 | யூகிசேது | ரிலையன்ஸ் மொபைல் |
2. | இரண்டாம் விஜய் விருதுகள் | மே 03, 2008 | யூகிசேது | ரிலையன்ஸ் மொபைல் |
3. | மூன்றாம் விஜய் விருதுகள் | சூன் 13, 2009 | கோபிநாத் | யுனிவர்செல் |
4. | நான்காம் விஜய் விருதுகள் | மே 29, 2010 | கோபிநாத் | யுனிவர்செல் |
5. | ஐந்தாம் விஜய் விருதுகள் | சூன் 25, 2011 | கோபிநாத் மற்றும் சிவ கார்த்திகேயன் | கிளோஸப் |
6. | 6வது ஆண்டு விஜய் விருதுகள் | சூன் 16, 2012 | கோபிநாத் மற்றும் சிவ கார்த்திகேயன் | கிளோஸப் |
7. | 7வது ஆண்டு விஜய் விருதுகள் | மே 11, 2013 | கோபிநாத் மற்றும் மாதவன் | கிளோஸப் |
8. | 8வது ஆண்டு விஜய் விருதுகள் | ஜூலை 5, 2014 | கோபிநாத் மற்றும் திவ்யதர்ஷினி | ஜியோனி |
உயர்நிலைகள்
- ஒரே விழாவில் அதிக விருது பெற்ற திரைப்படம்
- வாரணம் ஆயிரம்(2008) - 9 விருதுகள்
- ஒரே விழாவில் அதிக விருது பெற்றவர்கள்
- ஏ. ஆர். ரகுமான் - 7 விருதுகள்
- கமல், விஜய் - தலா 5 விருதுகள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
Watch 8th Star Vijay Awards 2014 - Full Program
- http://www.hindu.com/fr/2003/10/31/stories/2003103101460500.htm
- http://www.indiaglitz.com/channels/tamil/article/46842.html
- https://news.liveurlifehere.com/in/10th-vijay-awards-2016.html
- http://www.indiantelevision.com/release/y2k6/dec/decrel50.htm
- http://wirelessfederation.com/news/4418-grande-finale-of-reliance-mobile-vijay-awards/
- http://www.hindu.com/fr/2007/02/02/stories/2007020200100400.htm
- Vijay Awards. Starboxoffice.com (2008-01-02). Retrieved on 2011-06-06.