விஜய் ஆண்டனி

விஜய் ஆண்டனி (பிறப்பு: சூலை 24, 1975)[1] இந்தியா, தமிழ்நாட்டின் ஓர் முன்னணி திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். தற்போது திரைப்படத்தில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

விஜய் அண்டனி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ராஜா அந்தோனி
பிறப்புசூலை 24, 1975 (1975-07-24)
இசை வடிவங்கள்திரையிசை, இசையமைப்பாளர்
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர், நடிகர், பின்னனிப் பாடகர், தயாரிப்பாளர்
இசைத்துறையில்2005 இன்றுவரை
இணையதளம்vijayantony.com

வாழ்க்கை வரலாறு

விஜய் ஆண்டனி தமிழ்நாடு மாநிலம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை இவருக்கு 7 வயது இருக்கும் போது இறந்து விட்டார். விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானவர். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோபைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில இசைத்துண்டுகளை (jingles) அமைத்தார்.[2] அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது.

இவரது அண்மைய திரைப்படம் விஜய் நடித்த வேட்டைக்காரன் படமாகும்.

மேலும் இவர் கன்னடப் படம் புத்திவந்தா விற்கு இசையமைத்துள்ளார், இது தமிழ்ப்படம் நான் அவனில்லையின் மறுபதிப்பு திரைப்படமாகும்.

2009ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற கான் கோல்டன் லயன் விருதை சிறந்த இசைக்காக டைம்ஸ் ஆஃப் இந்தியாவிற்காக தயாரித்த "நாக்க முக்கா" வணிகப்படத்திற்காகப் பெற்றார்.

தமது இசையமைப்பில் பல புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் என்ற பெருமை உடையவர்.

மேலும் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்ட விட்டார் என்றே கூற வேண்டும்.

திரைப்படங்கள்/தொகுப்புகள்

ஆண்டுபெயர்மொழிகுறிப்புகள்
2005சுக்ரன்தமிழ்
2006பை2தமிழ்
டிஷ்யூம்தமிழ்
2007நினைத்தாலேதமிழ்
நான் அவனில்லைதமிழ்
2008பந்தயம்தமிழ்
காதலில் விழுந்தேன்தமிழ்
புத்திவந்தாகன்னடம்நான் அவனில்லை மறுபதிப்பு
பசும்பொன்தேவர் வரலாறுதமிழ்
2009அ ஆ இ ஈதமிழ்
தநா-07 அல் 4777தமிழ்
மரியாதைதமிழ்
நினைத்தாலே இனிக்கும்தமிழ்
மகாத்மாதெலுங்கு
வேட்டைக்காரன்தமிழ்
2010ரசிக்கும் சீமானேதமிழ்
உத்தம புத்திரன் தமிழ்எடுக்கப்படுகிறது
கனகவேல் காக்கதமிழ்ஒலிப்பேழை வெளியிடப்பட்டுள்ளது
அங்காடித்தெருதமிழ்
அவள் பெயர் தமிழரசிதமிழ்
2012நான்தமிழ்
2014 சலீம்தமிழ்
2015இந்தியா பாக்கிஸ்தான்தமிழ்
2016பிச்சைக்காரன்தமிழ்
சைத்தான்தமிழ்
2017எமன்தமிழ்
அண்ணாதுரைதமிழ்இரு வேடங்களில் நடித்துள்ளார்

மேற்கோள்கள்

  1. "விஜய் ஆண்டனி குறிப்புகள்".
  2. Kalpagam Sarma. "'Naaka Mukka' Antony". goergo.in. பார்த்த நாள் 2009-01-19.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.