நான் அவனில்லை (2007 திரைப்படம்)

நான் அவனில்லை திரைப்படம் 2007 ல் இயக்குநர் செல்வா இயக்கிய தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் நடிகர் ஜெமினி கணேசன் நடித்திருந்த நான் அவனில்லை திரைப்படத்தி்ன் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் ஜீவன், சினேகா, நமிதா, மாளவிகா, ஜோதிமயி, கீர்த்தி சாவ்லா, லிவிங்ஸ்டன், இலட்சுமி, தேஜாஸ்ரீ, மயில்சாமி ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நான் அவனில்லை
இயக்கம்செல்வா
தயாரிப்புஜாபக்
கதைகைலாசம் பாலசந்தர்
இசைவிஜய் ஆண்டனி
டி. இமான்
நடிப்புஜீவன்
சினேகா
நமிதா
மாளவிகா
ஜோதிமயி
கீர்த்தி சாவ்லா
லிவிங்ஸ்டன்
இலட்சுமி
தேஜாஸ்ரீ
மயில்சாமி
ஒளிப்பதிவுயூ. கே. செந்தில் குமார்
விநியோகம்ஜாபக் பேக்கேஜ் லிமிடெட்
வெளியீடுஏப்ரல் 20, 2007 (2007-04-20)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு 1 கோடி
மொத்த வருவாய் 10 கோடிகள்

நடிகர்கள்

நடிகர்கள்கதாப்பாத்திரம்
ஜீவன்ஜூசப் பெர்ணான்டஸ்/ அண்ணாமலை/ விக்னேஷ்/ மாதவனன் மேனன்/ ஜாகிர் ஹூசேன்/ ஹரிஹரன் தாஸ்/ சியாம் பிரசாத்
சினேகாஅஞ்சலி
நமிதாமோனிகா பிரசாத்
மாளவிகாரேகா விக்னேஷ்
ஜோதிமயிஅம்முக்குட்டி மேனன்
கீர்த்தி சாவ்லாராணி தாஸ்
தேஜாசிறீ
லட்சுமிசாரதா
லிவிங்ஸ்டன்டேவிட் பெர்ணான்டஸ்
மயில்சாமிஅலெக்ஸ் தம்பிதுரை/ நெப்பொலியன்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி, டி. இமான் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற "ராதா காதல் வராதா" பாடலானது 1974 ஆவது ஆண்டில் வெளியான நான் அவனில்லை திரைப்படத்தில் இடம்பெற்ற ராதா காதல் வராதா பாடலின் மறுஆக்கமாகும். இப்படத்தின் எல்லா பாடல்களும் நேர்மறையான விமர்சனங்களை பெற்று வெற்றியைப் பெற்றன. குறிப்பாக, சங்கீதா ராஜேஷ்வரன், ஜெயதேவ் குரல்களில் சினேகா-ஜீவன் இடம்பெறும் "ஏன் எனக்கு மயக்கம்" பாடலானது 2007 ஆவது ஆண்டில் வெளியான மிகச் சிறந்த பத்து பாடல்களில் ஒன்றாக அமைந்தது. மேலும் 2007 பிலிம்பேர் விருதிற்கும் பரிந்துரைக்கப்பட்டது.

எண்பாடல்பாடகர்(கள்)பாடல் வரிகள்
1 "காக்க காக்க" விஜய் ஆண்டனி, சாருலதா மணி, மாயா, மேகா, வினய பிரசாத் பா. விஜய்
2 "ஏன் எனக்கு மயக்கம்" ஜெயதேவ், சங்கீதா ராஜேஷ்வரன், மேகா, ரம்யா பா. விஜய்
3 "மச்ச கன்னி" விஜய் ஆண்டனி, ஜெயராசகோபாலன், சத்ய லட்சுமி பா. விஜய்
4 "நீ கவிதை" கிரிஷ், மேகா பா. விஜய்
5 "ராதா காதல்" வி. வி. பிரசன்னா, மாயா, சங்கீதா ராஜேஷ்வரன், வினய பிரசாத் கண்ணதாசன்
6 "தேன் குடிச்ச நிலவு" நரேஷ் ஐயர், தீபா மிரியம் பழனி பாரதி

மேற்கோள்கள்

    வெளி இணைப்புகள்

    இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் நான் அவனில்லை

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.