வட ஆற்காடு

வட ஆற்காடு மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருந்த பிரிக்கப்பட்ட பழைய மாவட்டம் (ஜில்லா) ஆகும்.

வட ஆற்காடு மாவட்டம்
மாவட்டம் of மதராஸ் மாகாணம்

1855–1989 [[திருவண்ணாமலை மாவட்டம்|]]
 
[[வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், இராணிப்பேட்டை மாவட்டம்|]]

கொடி

Location of வட ஆற்காடு மாவட்டம்
வட ஆற்காடு மாவட்டம் அமைந்துள்ள இடம் மற்றும் வருடம் 1956
தலைநகரம் சித்தூர் (1855 - 1911), வேலூர் (1911-1989)
வரலாறு
  ஆற்காடு மாநிலத்தின் இணைப்பு 1855
  தனியாக பிரிக்கப்பட்ட சித்தூர் மாவட்டம் 1911
  வட ஆற்காடு மாவட்டத்தை திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வேலூர் மாவட்டம் ஆக பிரிக்கப்பட்டது. 1989
பரப்பு
  1901 19,129.7 km2 (7,386 sq mi)
Population
  1901 22,07,712 
மக்கள்தொகை அடர்த்தி 115.4 /km2  (298.9 /sq mi)
The Imperial Gazetteer of India, Vol. 5

முகலாய ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் (சுபா) தலைநகராக ஆற்காடு (Arcot) இருந்தது. இந்நகரம் இன்று வேலூர் மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் ஆற்காடு நவாப்கள் ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக வட ஆற்காடு, தென் ஆற்காடு என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. வடாற்காடு ஜில்லாவில் இருந்து 1950 களில், சித்தூர் மாவட்டம் பிரிக்கப்பட்டு ஆந்திர மாநிலத்தில் சேர்க்கப்பட்டது. மீண்டும் 1989இல் வடாற்காடு மாவட்டமானது வடாற்காடு சம்புவராயர் மாவட்டம் (இன்று :திருவண்ணாமலை மாவட்டம் ) வடாற்காடு அம்பேத்கார் மாவட்டம் (இன்று:வேலூர் மாவட்டம்) என்று இரண்டாக நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டது. மேலும் நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டத்தை ஆகஸ்டு 15 2019 ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டம் என பிரிக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.