லிங்கின் பார்க்
லிங்கின் பார்க் என்ற குழு கலிபோர்னியாவின் அகூரா மலையைச் சேர்ந்த ஒரு ராக் இசை குழுவாகும். 1996 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த குழு 2000 ஆம் ஆண்டு தனது முதல் இசை வெளியீட்டின் மூலம் தனது முதல் வெற்றியை சந்தித்தது. ஹைப்ரிட் தியரி என்ற இந்த இசை வெளியீடு RIAAவினால் 2005 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது (வைரம்)[2] மீடியோரா என்ற மற்றொரு இசை வெளியீடு இந்த குழுவின் அடுத்த வெற்றியாக இருந்தது. இது 2003 ஆம் ஆண்டு பில்போர்டு 200 இசை அட்டவணையில் தலைமை இடத்தை பிடித்து இருந்தது. இதன் மூலமாக இந்த குழுவினர் ஏராளமான சுற்றுப்பயணங்கள் மற்றும் அறப்பணிகளில் ஈடுப்பட்டனர்.[3] 2003 ஆம் ஆண்டில், MTV2 லிங்கின் பார்க், இசை வீடியோ காலத்தில் ஆறாவது இடத்தை பிடித்திருப்பதாக அறிவித்தது. மேலும் இந்த நூற்றாண்டில் ஓயாசிஸ், கோல்ட்ப்ளேவை தொடர்ந்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.[4]
Linkin Park | |
---|---|
![]() Linkin Park performing at 2009's Sonisphere Festival | |
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | Xero (1996–1998)[1] Hybrid Theory (1998–1999)[1] |
பிறப்பிடம் | Agoura Hills, California, ஐக்கிய அமெரிக்க நாடு |
இசை வடிவங்கள் | Nu metal, rap metal, alternative metal, alternative rock |
இசைத்துறையில் | 1996-present |
வெளியீட்டு நிறுவனங்கள் | Warner Bros., Machine Shop |
இணைந்த செயற்பாடுகள் | Dead by Sunrise, Fort Minor, Jay-Z, White Pegacorn, Tasty Snax, Relative Degree, Grey Daze, Bucket of Weenies |
இணையதளம் | www.linkinpark.com |
உறுப்பினர்கள் | Rob Bourdon Brad Delson David "Phoenix" Farrell Joe Hahn Mike Shinoda |
முன்னாள் உறுப்பினர்கள் | Kyle Christener Scott Koziol Mark Wakefield Chester Bennington |
தங்களது இசை வெளியீடுகளான ஹைப்ரிட் தியரி மற்றும் மீடியோராவில் , ந்யூ மெடல் மற்றும் ராப் ராக் வகைகளை கையாண்ட லிங்கின் பார்க் தனது அடுத்த வெளியீடுகளில் மேலும் பல இசை வகைகளை கொண்டு ஆர்பரிக்கத் துவங்கியது.[5][6][7] இதற்கு எடுத்துக்காட்டாக அவர்களது புது வெளியீடான மினிட்ஸ் டு மிட்னைட் அமைந்திருந்தது.(2007)[8][9] இந்த வெளியீடு பில்போர்டு அட்டவணையில் முதல் இடத்தை பிடித்ததுடன், அது வெளியிடப்பட்ட முதல் மூன்று வாரத்திற்கு சிறந்த வெளியீடாகவே திகழ்ந்தது.[10][11] இந்த குழுவினர் புகழ்பெற்ற ராப் இசைக்கலைஞர் ஜே-சியுடன் இணைந்து கொலிஷன் கோர்ஸ் என்ற தங்களது மாஷ்அப் தொகுப்பை வெளியிட்டனர். இதைத் தவிர ரீஅனிமேஷன் என்ற மற்றொரு தொகுப்பில் இவர்கள் மேலும் பல புகழ்பெற்ற கலைஞர்களுடன் இணைத்து செயல் பட்டனர்.[6] உலகம் முழுவதிலும் லிங்கின் பார்க் இதுவரை 50 மில்லியன் இசை தொகுப்புகளை விற்பனை செய்துள்ளது.[12] மேலும், இரண்டு கிராமி அவார்ட்களையும் வென்றுள்ளது.[13][14]
குழுவின் வரலாறு
ஆரம்ப காலங்கள் (1996–1999)
மேல் நிலைப்பள்ளி நண்பர்களாக இருந்த மைக் ஷிநோடா, பிராட் டெல்சன் மற்றும் ராப் பூர்டனை கொண்டு ஆரம்பிக்கப்பட்டது லிங்கின் பார்க்.[1] பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் இசையை தொழிலாக எடுக்க எண்ணிய இந்த கலிபோர்னிய இளைஞர்கள் ஜோ ஹான், டேவ் "பீனிக்ஸ்" பார்ரெல் மற்றும் மார்க் வேக்பீல்டை தங்கள் சீரோ(Xero) குழுவுடன் இணைத்துக்கொண்டனர். வசதிகள் குறைவாக இருந்த பொழுதிலும் இந்த குழு அதை தடையாக எண்ணாமல் ஷிநோடாவின் படுக்கையறையில் இருந்த ஒலிப்பதிவு ஊடகங்கள் மூலம் தங்கள் இசை தொகுப்புகளுக்கு உயிர் ஊட்டினார்கள். (1996)[1][15] அவர்களது தொகுப்பு நல்ல விலைக்கு போகாத நிலையில் இந்த குழுவை சேர்ந்தவர் இக்கட்டில் தள்ளப்பட்டிருந்தனர்.[1] தனது உழைப்புக்கேற்ற வெற்றி கிட்டாதோ என்ற அச்சத்தில் அந்த சமயத்தில் வேக்பீல்ட், குழுவின் பாடகர் குழுவை விட்டு வெளியேறி வேற தொகுப்புகளில் பங்கேற்க முடியுமா என்று முயற்சி செய்தார்.[1][15] பார்றேல்லும் டேஸ்டி ஸ்நாக்ஸ் போன்ற இசை குழுக்களுடன் தனது பயணத்தை மேற்கொண்டார்.[16][17]
நீண்ட நாட்கள் முயற்சிக்கு பிறகு வேக்பீல்டின் இழப்பை ஈடுகட்ட சீரோ, அரிசோனாவின் செஸ்டர் பென்னிங்டனை குழுவின் பாடகராக நியமித்தது. மார்ச் 1999 இல் சோம்பா ம்யூசிக்கின் துணைத் தலைவரான ஜெப் ப்ளூ, பென்னின்க்டனை இந்த குழுவுக்கு பரிந்துரைத்தார்.[18] தனது வித்தியாசமான பாடல் திறமையைக்கொண்டு இந்த குழுவினரை தன் வசம் ஈர்க்க பென்னிங்டனுக்கு நிறைய நேரம் தேவை படவில்லை. இந்த குழு சீரோ என்ற தனது பெயரை ஹைப்ரிட் தியரி என்று மாற்றிகொண்டது.[16] ஷிநோடா மற்றும் பென்னிங்டனின் குரல்கள் இணைய இசை ஜாலங்கள் பல பிறக்கத் துவங்கின.[1] தனது உரு மாற்றத்தை குறிக்கும் வகையிலும் சான்டா மோனிகாவின் லிங்கன் பார்க்கிற்கு கவுரவம் தரும் வகையில் இந்த குழு ஹைப்ரிட் தியரி என்ற பெயரை லிங்கின் பார்க் என்று மாற்றி அமைத்துக் கொண்டது .[1] இந்த மாற்றங்களை செய்த பொழுதிலும் தனக்கு தேவையான இசை தொகுப்பு விற்பனையை அதனால் செய்ய இயலவில்லை. பல பெரிய ஒலிப்பதிவு நிறுவனங்கள் நிராகரித்த நிலையில் உதவிகேட்டு லிங்கின் பார்க் ஜெப் ப்ளூவை நாடியது. வார்நேர் பரோஸ். ரெகார்ட்ஸ் உடன் மூன்று முறை கையொப்பம் செய்ய முடியாமல் போனது. இம்முறை, அதாவது 1999 ஆம் ஆண்டு வார்நேர் பரோஸ். ரேகொர்ட்சில் தலைவராக இருந்த ஜெப் ப்ளூ மூலம் சாத்தியமானது. அடுத்த வருடமே தனது அசாத்தியமான இசை தொகுப்பை (ஹைப்ரிட் தியரி ) லிங்கின் பார்க் வெளியிட்டது.[18]
ஹைப்ரிட் தியரி (2000–2002)
ஹைப்ரிட் தியரி லிங்கின் பார்க்கால் வெளியிடப்பட்ட முதல் ராக் இசை தொகுப்பாகும்.அக்டோபர் 24, 2000 அன்று லிங்கின் பார்க் ஹைப்ரிட் தியரியை வெளியிட்டது.[19][20] குழுவின் ஐந்தாண்டு வெளிப்பாட்டின் சேகரிப்பாக விளங்கிய இந்த வெளியீட்டை டான் கில்மோர் என்ற இசை தயாரிப்பாளர் தொகுத்து வழங்கினார்.[1] ஹைப்ரிட் தியரி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது; முதல் ஆண்டிலேயே 4.8 மில்லியனுக்கும் மேற்பட்ட ஒலி நாடாக்களை விற்பனை செய்து சாதனைப் படைத்தது.
மீடியோரா (2002–2004)
ஹைப்ரிட் தியரி , ரீஅணிமேஷனின் வெற்றியை தொடர்ந்து லிங்கின் பார்க் ஐக்கிய அமெரிக்க நாடுகள் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. தங்களுக்கு கிட்டிய குறைவான கால அவகாசத்திலும் புதிய இசையை உருவாக்கத் துவங்கினர் இந்த இசை குழுவினர்.[21] டிசம்பர் 2002 இல் தங்களது புதிய இசை தொகுப்பைப் பற்றிய தகவலை அதிகாரப் பூர்வமாக வெளியிட்டனர். கிரீசில் மீடியோரா பாறைப் பகுதிகளுக்கு மேல் கட்டப்பட்டிருந்த ஆஸ்ரமங்கள் தங்கள் இசை ஆர்வத்திற்கு விருந்து அளித்ததாக இவர்கள் கூறினர்.[22] மீடியோராவில் ந்யூ மெடல், ராப் கோர் உடன் புதிதாக பல இசைக்கருவிகளுடன் சாகுஹசியும் ( மூங்கிலால் செய்யப்பட்ட ஜப்பானிய புல்லாங்குழல்) இடம்பிடித்தது.[1] மார்ச் 25, 2003 அன்று வெளிவந்த லிங்கின் பார்க்கின் இரண்டாவது இசை தொகுப்பு, உலகளாவிய அங்கீகரிப்பைப் பெற்றதோடு[1], US மற்றும் UK -வில் முதல் இடத்தை பிடித்து ஆஸ்திரேலியாவிலும் இரண்டாம் இடத்தை பிடித்தது.[15]
மற்ற இசை வெளியீடுகள்(2004–2006)
மீடியோராவின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்த சில வருடங்களுக்கு எந்த இசைத்தொகுப்பையும் துவங்காமல் இருந்தது இந்தக் குழு .தனது கவனத்தை சுற்று பயணத்தை மேற்கொள்வதிலும் மற்ற விஷயங்களிலும் செலுத்தி இருந்தது. DJ லீதலின் "ஸ்டேட் ஒப் தி ஆர்டில்" பென்னிங்டன் பங்கெடுத்துக்கொண்டார். இதைத்தவிர அவர் டெட் பை சன்ரைஸ் என்ற பாடலையும் பாடினார். இவரைப் போலவே ஷிநோடா தேபேச்சே மோடுடன் இணைந்து செயல் புரிந்தார்.[16] 2004 ஆம் ஆண்டில் இந்த குழு ஜே-சியுடன் இணைந்து வேலை செய்து ரீமிக்ஸ் இசைத்தொகுப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் பெயர் கொலிஷன் கோர்ஸ். இந்த தொகுப்பில் வெளிவந்த பாடல் வரிகள் மற்றும் பாடல் இசை, இதற்கு முன்னர் இந்த இரண்டு இசைக்கலைஞர்களின் இசை தொகுப்புகளில் வெளிவந்த இசை வடிவின் இணைப்பாக இருந்தது. இது நவம்பர் 2004-இல் வெளிவந்தது. போர்ட் மைனர் என்ற புதிய குழுவை ஷிநோடா துவங்கினார். ஜே சியின் உதவியோடு போர்ட் மைனர் தனது முதல் இசைத்தொகுப்பை ( தி ரைசிங் டைட்) வெளியிட்டது.[23][24] நம்பிக்கை இல்லாததாலும் பண பிரச்சனைகளாலும் வார்நேர் பரோஸ். ரெகார்ட்ஸ் உடன் இந்த குழு கொண்டிருந்த உறவுப்பாலம், இந்த சமயத்தில் சிதைய தொடங்கியது.[25] பல மாதங்கள் விவாதத்திற்கு பிறகு டிசம்பர் 2005 இல் கையொப்பம் இட்டனர்.[26]
பல நன்கொடை நிகழ்ச்சிகளிலும் லிங்கின் பார்க் பங்கெடுத்து கொண்டது. சார்லி சூறாவளி (2004) மற்றும் கத்ரீனா சூறாவளியில்(2005) பாதிக்கப்பட்டவர்களுக்காக லிங்கின் பார்க் நிகழ்ச்சிகளை நடத்தி நன்கொடை அளித்தது.[16] மார்ச் 2004 இல் லிங்கின் பார்க் ஸ்பெஷல் ஒபெறேஷனஸ் வாரியர் பவுண்டேஷனுக்காக $75,000 ஐ நன்கொடையாக அளித்தது.[27] "ம்யூசிக் பார் ரிலீப்" என்ற காப்பீட்டு திட்டத்தை நிறுவியது மூலமாக இவர்கள் 2004 சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தனர்.[28] உலகம் எச்சரிக்கையாக இருப்பதற்கு நடத்தப்பட்ட அறக்கட்டளை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதில் லைவ் 8 மிக முக்கியமான ஒரு தொடர் நிகழ்ச்சியாகும்.[29] உலகளாவிய ரசிகர்களுக்கு ஜே சியுடன் சேர்ந்து பிலடெல்பியா, பென்சில்வேனியா, ஆகிய இடங்களில் லைவ் 8 நிகழ்ச்சியில் மேடை ஏறினர்.[29] தாங்கள் வென்ற கிராமி விருதை பெறுவதற்கு முன்னர் இந்த குழு கிராமி விருது வழங்கும் விழா 2006இல் ஜே சீயுடன் இணைந்து "நம்ப்/எங்கோர்" என்ற பாடலை பாடியது. இந்த விழாவில் சிறந்த ராப்/பாடல் கோப்புக்காக விருதை இந்த குழு பெற்றது.[30] மேலும் 2006 ஆம் ஆண்டு ஜப்பானில் மேட்டாளிகா நடத்திய சம்மர் சொனிக்கிலும் லிங்கின் பார்க் கலந்துக்கொண்டது.[31]
மினிட்ஸ் டு மிட்நைட் (2006–2008)
புதிய இசை தொகுப்பில் வேலை செய்வதற்கு மீண்டும் லிங்கின் பார்க் 2006 ஆமாண்டு களம் இறங்கியது. இந்த தொகுப்பை தயாரிப்பதற்காக இந்த குழு ரிக் ரூபினை தேர்ந்தெடுத்தது. இது 2006 ஆம் ஆண்டில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப் பட்டிருந்த போதிலும், சில காரணங்களால் 2007 ஆம் ஆண்டில் தான் வெளிவந்தது.[8] ஷிநோடா இந்த தொகுப்பு பாதி நிலையில் உள்ளதாக ஆகஸ்ட் 2006 இல் அறிவித்தபோது லிங்கின் பார்க் குழு இதற்காக முப்பதிலிருந்து , ஐம்பது பாடல்கள் வரை ஒலிப்பதிவு செய்து வைத்திருந்தது.[32] பின்னர் பென்னிங்டன் இந்த இசைத்தொகுப்பு எப்பொழுதும் தழுவி வரும் ந்யூ மெடல் இசையை கொண்டு இல்லாமல் வேறு இசை வடிவில் வெளி வரும் என்று அறிவித்தார்.[33] வார்நேர் பரோஸ். ரெகார்ட்ஸ் இந்த குழுவின் மூன்றாவது இசைத் தொகுப்பான மினிட்ஸ் டு மிட்நைட் மே 15, 2007 அன்று அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வெளிவரும் என்று அதிகார பூர்வமாக அறிவித்தது.[34] பதினான்கு மாதங்கள் உழைப்புக்கு பிறகு தங்கள் பதினேழு பாடல்களில் இருந்து ஐந்து பாடல்களை நீக்கி விடுவது என்று குழுவினர் முடிவு செய்தனர். டூம்ஸ்டே க்லாக்கை தழுவி வந்த இந்த இசை தொகுப்பின் பாடல் வரிகள் அதன் தலைப்புக்கு ஏற்றவாறே அமைந்திருந்தது.[35] முதல் வாரத்திலேயே 600,000 காப்பிகளுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட மினிட்ஸ் டு மிட்நைட் கடந்த சில ஆண்டுகளின் சிறந்த அறிமுக இசைத்தொகுப்பாக அறிவிக்கப்பட்டது. பில் போர்டு அட்டவணையிலும் இந்த தொகுப்பு முதல் இடத்தை பிடித்தது.
புதிய இயக்கம் (2008 இலிருந்து)

அக்டோபர் 2008 இல் ஷிநோடா ஹாநீன் வீட்டில் தங்களது முதல் இரண்டு பாடல்களையும் ஆரம்பித்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தார். இதில் ஷிநோடா பீனிக்ஸ் மற்றும் ஹான் மூவரும் கலந்து கொண்டனர். இதற்கான ஒளிப்பதிவு மிக விரைவில் நடைபெறவிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.[36] 2008 இல் பென்னிங்டன் தங்களது அடுத்த ஆல்பம் ஒரு கருத்து இசைத்தொகுப்பாக இருக்கும் என்று அறிவித்தார்.[37] இன்னும் இந்த தொகுப்பை பற்றிய வேறு எந்த விவரத்தையும் இந்த குழு தெரிவிக்கவில்லை. நவம்பர் 2008 இல், MTVயுடன் நடந்த நேர்முக காணலில் பென்னிங்டன், "இது சற்று பயமுறுத்தும் யோசனையாக எனக்கு தெரிந்தது. ஆனால் எங்களது நண்பர் இதனை கூறும் பொழுது நல்ல யோசனையாக இது எனக்கு தெரிந்தது. இந்த மையத்தை கொண்டு எங்களால் நிறைய எழுத முடிகிறது. எங்கள் கற்பனை வளத்திற்கு இது ஒரு நல்ல தீனியாக உள்ளது", என்று கூறினார். மேலும் ஆறு வாரத்திற்கு தொடர்ந்தவாறு டிசம்பரில் தொடங்கி, இந்த இசைதொகுப்புக்கு ஒளிப்பதிவு நடக்கும் என்று கூறினார். 2009 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் வெளிவர இருந்த இந்த இசைத்தொகுப்பு அவ்வாறு வரவில்லை. ஷிநோடா தனது பிளாக்கில் "செச்டேரின் டெட் பை சன்ரைஸ் ஆல்பம் இந்த இலை உதிர் காலத்துக்குள்ளேயும் புதிய LP இசைத்தொகுப்பு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவரும் என்று நம்புகிறேன்.", என்று குறிப்பிட்டு இருந்தார்.[38]
டிசம்பர் 2008 இல் புதிய ப்ரோ டூல்ஸ் 8 மென்பொருளை பயன்படுத்த ஒரு வாய்ப்பை டிஜிடிசைன் இந்த குழுவுக்கு அளித்தது. இதனை ஷிநோடா மற்றும் பூர்டான் தங்களது பாடல் மூலம் பரிசோதித்து பார்த்தனர்.[39]
ஏப்ரல் 2009 இல் ஷிநோடா Transformers: Revenge of the Fallen க்காக பிரபல திரைப்பட கலைஞரான ஹான்ஸ் சிம்மர் உடன் இணைந்து செயல் படப் போவதாக தனது ப்லொக்கில் குறிப்பிட்டு இருந்தார்.[40] மே 7 அன்று திரைப்படத்திற்காக உருவான பாடல் "நியூ டிவைட்" என்று அறிவிக்கப்பட்டது. இந்த பாடல் மே 18 அன்று வெளிவந்தது.[41][42] இந்த பாடலுக்கான ம்யூசிக் வீடியோ ஜூன் 12, 2009 அன்று வெளிவந்தது.இந்த பாடல் ஹானால் இயக்கப்பட்டது. ஜூன் 22, 2009, அன்று திரைப்படம் வெளியிடப்பட்ட முதல் நாளன்று இந்த குழு பாடலின் சிறிய பகுதியை வாசித்து காட்டியது. வெஸ்ட்வூட் கிராமத்தில் ஒரு சிறிய தெருவில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
மே 2009 இல் லிங்கின் பார்க் தனது நான்காவது இசைத் தொகுப்பை 2010 ஆம் ஆண்டு வெளியிடப் போவதாக அறிவித்தது. இது குறிப்பிட்ட ஒரு வகையில் இல்லாமல் எல்லா இசைத் தரப்பினரையும் கவரும் நோக்குடன் உருவாக்கப்படுகிறது என்று இந்த குழுவினர் அறிவித்தனர்.[43] ஷிநோடா தனது நேர்முக பெட்டியில் IGN இடம் தங்களது மினிட்ஸ் டு மிட்நைட்டை பல புதிய யுகதிகளை கையாண்டு இந்த தொகுப்பு வெளியாக உள்ளது என்று கூறினார்.[44] மேலும் பென்னிங்டன், இந்த தொகுப்புக்கு ரிக் ரூபின் மீண்டும் தயாரிப்பாளர் ஆகிறார் என்று அறிவித்தார். டிசம்பர் 2009 இல் ஷிநோடா லிங்கின் பார்க் பாதாள விசிறி சங்கத்துடன் கொண்ட உரையாடலில் ஐந்து பாடல்கள் முடிந்திருக்கும் நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார்.ஷிநோடா ஒரு பாடலுக்கு ராப் செய்யும் பொழுது மற்றொன்றுக்கு ஷிநோடா மற்றும் பென்னிங்டன் மாறி மாறி பாடியுள்ளனர். மற்றொரு பாடலை பென்னிங்டன் மட்டும் பாடியுள்ளார். மேலும் இரண்டு பாடல்களை ஷிநோடா மற்றும் பென்னிங்டன் இருவரும் சேர்ந்து பாடியுள்ளனர்.[45] ஜனவரியில் இரண்டாம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பாடல்களை உருவாக்க இந்த குழு முனைந்திருப்பதாக தெரிகிறது.
இசை வடிவங்கள்
ஹைப்ரிட் தியரி , மீடியோரா ஆகிய இரண்டு தொகுப்புகளுமே மாற்று மெடல்,[46] ந்யூ மெடல்,[16][47][48][49][50] ராப் ராக்[50][51] ஒலியுடன் ஹிப்-ஹோப், மாற்று ராக்,[52] எலெக்ட்ரோநிகா, ப்ரோக்ராம்மிங் மற்றும் கூட்டிணைப்பு கருவிகள் கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தன. ஆல்முயூசிக்கை சேர்ந்த வில்லியம் ரூல்மேன், இந்த மரபை " ஏற்கனவே மிகுந்து இருக்கும் வகையை மேலும் மிகைப்படுத்தி காட்டி இருப்பதாக கூறினார். இது காலத்துக்கு ஏற்றவாறு இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்[53] . ஆனால் ரோல்லிங் ஸ்டோன் "ப்ரேகிங் தி ஹாபிட்டை" "அபாயகரமான ஒரு அழகிய கலை" என்று விவரிக்கிறது.[54]
மினிட்ஸ் டு மிட்நைட் தொகுப்பில் இந்த குழு பல ஒலிகளில் மற்றும் மற்ற வகைப்பாடல்கள் மற்றும் மரபுகளில் இருந்து மையக்கருவை எடுத்து பாடல்களை உருவாக்கியுள்ளது. இதனை லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் U2வின் வேலைப்பாட்டுடன் ஒப்பிட்டு பார்க்கிறது.[55] இதில் இரண்டு பாடல்கள் மட்டுமே ராப்பிங்கை கொண்டுள்ளது. மற்றவை மாற்று ராக்கை[56][57] சார்ந்து வந்துள்ளது. இதில் ந்யூ மெடல் மற்றும் ராப் ராக் இல்லை. இந்த தொகுப்பில் தான் முதல் முறை குழுவின் கிட்டார் தனிப்பாடல்கள் இடம்பிடித்தன.
நிகழ்ச்சிகளில் தி க்யூர், டெப்டோன்ஸ், கன்ஸ் N' ரோசெஸ், நைன் இன்ச் நெய்ல்ஸ் போன்ற பாடல்களை பாடியுள்ளது இந்த குழு.
லிங்கின் பார்க் இரண்டு பாடகர்களை தனது நிகழ்ச்சிகளில் கட்டாயம் பயன் படுத்துகிறது. மிக பிரபலமாக இருக்கும் செஸ்டர் பென்னிங்டன் கத்திப்பாடுவதுடன் மெடல் மற்றும் ஹார்ட்கோர் இசையை பின்பற்றி பாடுகிறார். இதனுடன் மெல்லிசைப் பாடல்களையும் பாடுவதால் அவர் ஹிட் பரெடைரஸ் அட்டவணையில் 46 வதாக வந்துள்ளார்.("ஹெவி மெடல்'ஸ் ஆல்-டைம் டாப் 100 வோகலிஸ்ட்ஸ்").[58]
மைக் ஷிநோடா இந்த குழுவின் MC ஆவார். மேலும் இவர் ராபிங்கும் செய்கிறார். இவர் எல்லா பாடல்களிலும் பின் குரல் தந்துள்ளார். இவர்களது மினிட்ஸ் டு மிட்நைட் , தொகுப்பில் மைக் "இன் பிட்வீன்", "ஹான்ட்ஸ் ஹெல்ட் ஹை", "நோ ரோட்ஸ் லெப்ட்" ஆகிய பாடல்களை முதன்மை பாடகராக பாடியுள்ளார். ஷிநோடாவும் பரேடர்ஸ் அட்டவணையில் ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். இவர் பெற்ற இடம் 72.[58]
குழவினர்
_%40_Sonisphere_2009.jpg)
- செஸ்டர் பென்னிங்டன் – முதல் பாடகர் , ரிதம் கிட்டார் (1999-2017வரை)
- ரோப் பூர்டன் – ட்ரம்ஸ், தட்டு வாத்தியம், பின்குரல் பாடகர் (1996 இலிருந்து)
- பிராட் டெல்சன் – லீட் கிடார், பின்குரல் பாடகர் (1996 இலிருந்து)
- டேவிட் "பீனிக்ஸ்" பார்ரெல் – பேஸ் கிடார், பின்குரல் பாடகர் (1996–1998, 1999, since 2001)
- Mr. ஹான் – டர்ன்டேபிள்ஸ், ப்ரோக்ராமிங், சாம்ப்ல்ஸ், பின்குரல் பாடகர் (1996 இலிருந்து)
- மைக் ஷிநோடா –முதல் பாடகர், ரிதம் கிடார், சாம்ப்ல்ஸ், கிபோர்டு(1996 இலிருந்து)
இசைப் பதிவுகள்
- ஹைப்ரிட் தியரி (2000)
- மீடியோரா (2003)
- மினிட்ஸ் டு மிட்நைட் (2007)
விருதுகள்
மேலும் பார்க்க
- சிறப்பு விற்பனை இசைக் கலைஞர்கள் பட்டியல்
- உலகம் முழுதும் சிறப்பாக விற்பனையாகும் இசைதொகுப்புகளின் பட்டியல்
குறிப்புகள்
- AskMen.com, லிங்கின் பார்க் – சுயசரிதை மார்ச் 20, 2007 அன்று திரும்பவும் பெறப்பட்டது.
- ரெகார்டிங் இண்டஸ்ட்ரி அசோசியேஷன் ஒப் அமெரிக்கா, RIAA ரெகார்ட் சேல்ஸ், ஜூன் 13, 2007 அன்று திரும்ப பெறப்பட்டது.
- Soundspike.com, இசை தொகுப்பு அட்டவணை: லிங்கின் பார்க்கின் மீடியோரா முதல் இடத்தை பிடிக்கிறது., மார்ச் 19, 2007 அன்று திரும்ப பெறப்பட்டது
- Negri, Andrea (October 10, 2003). "22 greatest bands? Something 2 argue about". Houston Chronicle.
- Sinclair, Tom (March 28, 2003). "Meteora (2003)". Music Review (Entertainment Weekly). http://www.ew.com/ew/article/0,,435104~4~0~meteora,00.html. பார்த்த நாள்: October 19, 2007.
- MSN மியூசிக், லிங்கின் பார்க்: சுயசரிதை, ஜூன் 14, 2007 அன்று திரும்ப பெறப்பட்டது
- MacKenzie Wilson. "allmusic ((( Linkin Park > Overview )))". Allmusic.com. பார்த்த நாள் October 28, 2008.
- MTV.com, மைக் ஷிநோடா, "'2006 இல் புதிய இசைத்தொகுப்பு இல்லை'" என்று கூறுகிறார் , ஜூன் 9, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- Powers, Ann (May 15, 2007). "Minutes to Midnight (Warner Bros.)". Pop Album Review (Los Angeles Times). http://www.calendarlive.com/printedition/calendar/cl-et-linkin15may15,0,2089411.story?coll=cl-calendar. பார்த்த நாள்: October 19, 2007.
- Billboard.com, இந்த வாரத்தின் முதல் தளத்தை பிடித்திருப்பது M2M ,மே 28, 2007 அன்று திரும்பவும் பெறப்பட்டது.
- Billboard.com, மிட் நைட்டை கொண்டு லிங்கின் பார்க் சிறந்த அறிமுக குழுவானது., மே 28, 2007 அன்று திரும்பவும் பெறப்பட்டது.
- Verrico, Lisa (January 30, 2008). "Linkin Park". The Times. http://entertainment.timesonline.co.uk/tol/arts_and_entertainment/music/live_reviews/article3271745.ece. பார்த்த நாள்: February 20, 2009.
- ராக் ஒன தி நெட், கிராமி விருதுகள்: சிறந்த ராப் அற்றும் பாடல் கூட்டிணைப்பு , ஜூன் 9, 2007 அன்று திரும்பவும் பெறப்பட்டது.
- ராக் ஒன தி நெட் கிராமி விருதுகள்: சிறந்த ஹார்ட் ராக் இசை, ஜூன் 14, 2006 அன்று திரும்பவும் பெறப்பட்டது.
- "Linkin Park — band history and biography". http://www.popstarsplus.com/music_linkinpark_history.htm. பார்த்த நாள்: December 23, 2007.
- MusicMight.com, லிங்கின் பார்க் – இசை பலம் சுயசரிதை மார்ச் 20, 2007 அன்று திரும்பவும் பெறப்பட்டது.
- Livedaily.com, லைவ்டெய்லி நேர்முக காணல்: லிங்கின் பார்க்கின் டேவ் 'பீனிக்ஸ்' பார்ரெல் மார்ச் 20, 2007 அன்று திரும்பவும் பெறப்பட்டது.
- Lptimes.com, குழு வரலாறு மார்ச் 20, 2007 அன்று திரும்பவும் பெறப்பட்டது.
- "Linkin Park - Hybrid Theory released October 24, 2000.". http://rateyourmusic.com/release/album/linkin_park/hybrid_theory/. பார்த்த நாள்: December 23, 2007.
- "Linkin Park fansite — Album release date". http://www.linkin-park.com/?pg=albums. பார்த்த நாள்: December 23, 2007.
- வார்நேர் பரோஸ். ரெகார்ட்ஸ், "தி மேகிங் ஒப் மீடியோரா" (2003) DVD,March 25, 2003 அன்று வெளிவந்தது.
- MTV.com, [புதிய LP யை முடிப்பதற்காக லிங்கின் பார்க் தனது கோவத்தை அடக்குகிறது ஜூன் 10, 2006 அன்று திரும்பவும் பெறப்பட்டது
- Semansky, Matt (February 13, 2006). "Mike Shinoda's Fort Minor Rise To The Occasion". Chart. http://www.chartattack.com/news/40464/mike-shinodas-fort-minor-rise-to-the-occasion. பார்த்த நாள்: November 17, 2008.
- மிஷீன் ஷாப், போர்ட் மைனர் சுயசரிதை ஏப்ரல் 23, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- ரோல்லின் ஸ்டோன், லிங்கின், வார்நேர் இடையே பகை மூளுகிறது மே 12, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- வெறுப்பு, லிங்கின் பார்க், வார்நேர் பரோஸ். மீண்டும் சேருகின்றனர் மே 12, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- ஸ்பெஷல் ஒபெரடிஒன்ஸ் வாரியர் பவுண்டேஷன்: செய்தி மற்றும் நிகழ்ச்சி தேக்கிடம்
- VoaNews, சுனாமியில் பாதிக்கப்பட்டவர்களுக்காக லிங்கின் பார்க் ரெலீப் பண்டை ஒதுக்கீடு செய்துள்ளது; பாக்ஸ்ட்ரீட் பாய்ஸ் புது தொகுப்பை வெளியிட உள்ளனர் மே 12, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- தி லிங்கின் பார்க் டைம்ஸ், லைவ் 8 பிலடெல்பியா 2005 மே 12, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- About.com, ஜே-சி மற்றும் லிங்கின் பார்க் க்ராமியில் இணைந்து பாட உள்ளனர், ஜூன் 9, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- Linkinpark.com, லிங்கின் பார்க், ஜப்பான் சம்மர் சொநிகில் போர்ட் மைனர் , ஜூன் 9, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- MTV.com, மைக் ஷிநோடா புது தொகுப்பை பாதியளவு லிங்கின் பார்க் முடித்திருப்பதாக கூறுகிறார்.,ஜூன் 9, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- MTV.com, லிங்கின் பார்க் ந்யூ மெடல் இப்பொழுது வழக்கில் இல்லை அடுத்த LP யில் சுத்தமாகவே இல்லை என்று கூறுகிறது, ஜூன் 9, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- வார்நேர் பரோஸ். ரெகார்ட்ஸ், லிங்கின் பார்க் வெளியீட்டு நாளையும் தொகுப்பின் பெயரை அறிவித்ததும் விசிறிகள் மினிட்ஸ் வரும் நாளை எதிர்நோக்கி இருக்கின்றனர்., ஜூன் 9, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- MTV.com, லிங்கின் பார்க் அபோகாளிப்டிக் தொகுப்பை முடிக்கிறது.ப்ரொஜெக்ட் ரேவோல்யூஷன் சுற்றுப்பயணத்தை புதுபிக்கிறது ஜூன் 9, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- "Mike Shinoda / Blog". Mikeshinoda.com. பார்த்த நாள் October 28, 2008.
- "Chester Bennington / Blog". Cbennington.com. பார்த்த நாள் October 29, 2008.
- மைக் ஷிநோடாவின் ப்லாக், ஸ்டூடியோவில்: மார்ச் 2009
- http://www.mikeshinoda.com/blog/gadgets__recommendations-in_the_studio-linkin_park_/protools_8_mike_in_the_studio
- ட்ரான்ஸ்போர்மர்ஸ் 2: புதிய லிங்கின் பார்க் பாடல் MikeShinoda.com ஏப்ரல் 24, 2009.
- ட்ரான்ஸ்போர்மர்ஸ் பாடல் பெயர் MikeShinoda.com. மே 7, 1998
- Ditzian, Eric 'ட்ரான்ஸ்போர்மர்ஸ்: ரிவெஞ் ஒப் தி பாலன்' லிங்கின் பார்க்கை போட்டு காண்பிக்க ஒலி தளம் MTV செய்திகள் . மே 7, 1998
- லிங்கின் பார்க் இசை மரபுகளை தாண்டிய தொகுப்பை உருவாக்குகிறது, 2010
- http://lptimes.com/news2009/june/news06222009.html
- http://lptimes.com/news2009/dec/news12092009.html
- MacKenzie Wilson. "allmusic ((( Linkin Park > Overview )))". Allmusic.com. பார்த்த நாள் October 28, 2008.
- லிங்கின் பார்க் பற்றிய கண்ணோட்டம் , போப்மாட்டர்ஸ்
- NME இல் லிங்கின் பார்க்
- ரோல்லிங் ஸ்டோன்னில் லிங்கின் பார்க்
- லிங்கின் பார்க் கண்ணோட்டம் , IGN music
- லிங்கின் பார்க், Allmusic
- Wilson, MacKenzie (2007). "Linkin Park Biography". Yahoo! Music. http://music.yahoo.com/ar-303254-bio--Linkin-Park. பார்த்த நாள்: February 20, 2009.
- ரூல்மேன், வில்லியம். Allmusic.com ஆல்மியூசிக் (((ஹைப்ரிட் தியரி > காணல்))):, மே 30, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- ரோல்லிங் ஸ்டோன்ஸ் ரோல்லிங் ஸ்டோன்: லிங்கின் பார்க்: மீடியோரா: இசை பார்வை:,மே 30, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- Calendarlive.com, லிங்கின் பார்க் புதிய தொகுப்பை வெளியிடுகிறது: 'மினிட்ஸ் டு மிட்நைட்' மே 30, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
- IGN, லிங்கின் பார்க் - மினிட்ஸ் டு மிட்நைட், ஜனவரி 27, 2008.அன்று திரும்பவும் பெறப்பட்டது
- MetaCritic, மினிட்ஸ் டு மிட்நைட். ஜனவரி 14, 2006 இல் திரும்ப எடுக்கப்பட்டது
- RoadRunnerRecords.com, 'ஹெவுய் மெட்டல்ஸ் ஆல்-டைம் டாப் 100 வோகலிஸ்ட்ஸ்' அட்டவணையில் இடம்பிடித்திருப்பவர் ரோப் ஹால்போர்ட், ராபர்ட் பிளான்ட், போன் ஸ்காட், ஓசி - டிசம்பர் 1, 2006,டிசம்பர் 5, 2007.'Heavy Metal's All-Time Top 100 Vocalists'