மீடியோரா (இசைத் தொகுப்பு)

மீடியோரா லிங்கின் பார்க்கின் ராக் இசைத் தொகுப்பாகும் .ஹைப்ரிட் தியரி , ரீஅணிமேஷன் ஆகிய இசைத்தொகுப்புகளின் வெற்றியை தொடர்ந்து லிங்கின் பார்க் ஐக்கிய அமெரிக்க நாடுகள் முழுவதும் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. தங்களுக்கு கிட்டிய குறைவான கால அவகாசத்திலும் புதிய இசையை உருவாக்கத் துவங்கினர் இந்த இசை குழுவினர்.[1] டிசம்பர் 2002 இல் தங்களது புதிய இசை தொகுப்பைப் பற்றிய தகவலை அதிகாரப் பூர்வமாக வெளியிட்டனர். கிரீசில் மீடியோரா பாறைப் பகுதிகளுக்கு மேல் கட்டப்பட்டிருந்த ஆஸ்ரமங்கள் தங்கள் இசை ஆர்வத்திற்கு விருந்து அளித்ததாக இவர்கள் கூறினர்.[2] மீடியோராவில் ந்யூ மெடல், ராப் கோர் உடன் புதிதாக பல இசைக்கருவிகளுடன் சாகுஹசியும் ( மூங்கிலால் செய்யப்பட்ட ஜப்பானிய புல்லாங்குழல்) இடம்பிடித்தது.[3] மார்ச் 25, 2003 அன்று வெளிவந்த லிங்கின் பார்க்கின் இரண்டாவது இசை தொகுப்பு, உலகளாவிய அங்கீகரிப்பைப் பெற்றதோடு[3], அமெரிக்கா மற்றும் ஐக்கிய இரச்சியத்தில் முதல் இடத்தை பிடித்து ஆஸ்திரேலியாவிலும் இரண்டாம் இடத்தை பிடித்தது.[4]

Untitled

தனது முதல் வாரத்தில் மீடியோரா 800,000 பிரதிகள் விற்றிருந்தது. மேலும் பில்போர்டு அட்டவணையில் முதல் இடத்தையும் பிடித்து இருந்தது.[5] தனிப்பாடல்களாகிய "சம்வேர் ஐ பிலாங்", "ப்ரேகிங் தி ஹாபிட்", "பெயின்ட் ", "நம்ப்" வானொலி நிலையங்களின் சிறப்பு வரவேற்பைப் பெற்றன.[6] அக்டோபர் 2003 க்குள் மீடியோரா மூன்று மில்லியன் பிரதிகளுக்கு மேல் விற்றிருந்தது.[7] இந்த தொகுப்பின் மூலம் முத்வாய்னே, ப்ளைண்ட்சைட், சிபிட் போன்ற கலைஞர்களைக் கொண்டு ப்ரொஜெக்ட் ரேவோல்யூஷனை உருவாக்கினர்.[3] இதை தவிர மெடாலிக்கா இசைக்குழு 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்மர் சேனிடேரியம் டூரில் கலந்துக்கொள்ள லிங்கின் பார்க்குக்கு அழைப்பு விடுத்து இருந்தது. இதில் லிம்ப் பிஸ்கிட் , முத்வாய்னே மற்றும் டெப்டோன்ஸ்ஸும் அடங்கும்.[8] லைவ் இன் டெக்சாஸ் என்ற குறுவட்டை இந்தக் குழு வெளியிட்டது. இதை டெக்சாசில் நடந்த தங்களது இசை அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பேழையாக பயன்படுத்திக்கொண்டனர் இந்த குழுவினர்.[3] 2004 ஆம் ஆண்டின் துவக்கத்தில் லிங்கின் பார்க் மீடியோரா வேர்ல்ட் டூர் என்று தலைப்பிடப்பட்ட உலக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டது. இதில் ஹூபாச்டான்க், P.O.D., ஸ்டோரி ஒப் தி இயர் இடம்பிடித்தன.

மீடியோரா இந்த குழுவுக்கு எண்ணற்ற மதிப்புகளையும் விருதுகளையும் தேடிக்கொடுத்தது. சிறந்த ராக் வீடியோ ("சம்வேர் ஐ பிலாங்") மற்றும் பார்வையாளருக்கு பிடித்தது ("ப்ரேகிங் தி ஹாபிட்") என்ற விருதுகளை MTV வழங்கியது. இரண்டையும் இந்த குழு தட்டி சென்றது.[9] 2004 ஆம் ஆண்டு ரேடியோ ம்யூசிக் விருதுகளில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த லிங்கின் பார்க் ஆர்டிஸ்ட் ஒப் தி இயர் மற்றும் சாங் ஒப் தி இயர் ("நம்ப்") விருதுகளை பெற்றது.[9] ஹைப்ரிட் தியரி பெற்ற வெற்றியைப்போல் மீடியோரா பெறாவிட்டாலும் அது 2003 ஆமாண்டு அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்ட இசை தொகுப்புகளில் மூன்றாவது இடத்தை பெற்றிருந்தது.[10] 2004 ஆமாண்டின் துவக்கத்தில் நிறைய சுற்றுபயணங்களை மேற்கொண்ட இந்தக் குழு முதலில் மூன்றாவது ப்ரொஜெக்ட் ரேவோல்யூஷனில் கலந்து கொண்டது பின்னர் ஐரோப்பிய இசை நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டது.[10]

லிங்கின் பார்க் குழு

கீழே தரப்பட்டுள்ள தகவல்கள் இசைத்தட்டு வெளியீட்டின் பின் கொடுக்கப்பட்ட தகவல்கள் ஆகும்.[11]
  • செஸ்டர் பென்னிங்டன் – முதல் பாடகர்
  • ரோப் பூர்டன் – ட்ரம்ஸ், தட்டு வாத்தியம், பின்குரல் பாடகர்
  • பிராட் டெல்சன் – லீட் கிடார், பின்குரல் பாடகர்
  • டேவிட் "பீனிக்ஸ்" பார்ரெல் – பேஸ் கிடார், பின்குரல் பாடகர்
  • திரு. ஹான் – டர்ன்டேபிள்ஸ், ப்ரோக்ராமிங், சாம்ப்ல்ஸ், பின்குரல் பாடகர்
  • மைக் ஷிநோடா –முதல் பாடகர், ரிதம் கிடார், சாம்ப்ல்ஸ், கிபோர்டு

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. வார்நேர் பரோஸ். ரெகார்ட்ஸ், "தி மேகிங் ஒப் மீடியோரா" (2003) DVD,March 25, 2003 அன்று வெளிவந்தது.
  2. MTV.com, [புதிய LP யை முடிப்பதற்காக லிங்கின் பார்க் தனது கோவத்தை அடக்குகிறது ஜூன் 10, 2006 அன்று திரும்பவும் பெறப்பட்டது
  3. Yahoo! Music, அறிமுக லிங்கின் பார்க் 'மீடியோரா' மூலம் முதல் இடத்தை பிடிக்கிறது, மிளிடரிக்காக டிக்ஸ் இரண்டாம் இஅடத்த்ஜை பிடிக்கிறது ஏப்ரல் 8, 2007 அன்று திரும்பவும் பெறப்பட்டது
  4. Yahoo! Music, லிங்கின் பார்க், "பெயின்ட் மற்ற பாடல்களுக்கு இணையாக உள்ளது" என்று கூறுகிறது ஏப்ரல் 8, 2007 அன்று திரும்பவும் பெறப்பட்டது
  5. LAUNCH ரேடியோ நெட்வொர்க்ஸ், லிங்கின் பார்க் தொகுப்பு ட்ரிப்ள் பிளாட்டினம் இடத்தை பிடித்துள்ளது ஏப்ரல் 8, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
  6. VH1.com, லிங்கின் பார்க்: சுயசரிதை ஏப்ரல் 8, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
  7. Ringsurf.com, லிங்கின் பார்க் விருதுகள் ஏப்ரல் 4, 2007அன்று திரும்பவும் பெறப்பட்டது
  8. "Hybrid Theory by Linkin Park CD". cduniverse.com. பார்த்த நாள் 2007-08-18.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.