முக்தா சீனிவாசன்

முக்தா சீனிவாசன் (Muktha Srinivasan, 31 அக்டோபர் 1929 - 29 மே 2018 ) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார்.[2] ஜெயலலிதாவின் 100ஆவது படமான ‘சூர்யகாந்தி’ உட்பட, 65 படங்களை இயக்கியிருந்தார். நாயகன் உட்பட, ஏராளமான படங்களைத் தயாரித்தார். இவர் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார்.

முக்தா சீனிவாசன்
பிறப்புவெங்கடச்சாரி ஸ்ரீனிவாசன்
அக்டோபர் 31, 1929(1929-10-31)
மணப்புரம், தஞ்சாவூர் மாவட்டம், இந்தியா
இறப்புமே 29, 2018(2018-05-29) (அகவை 88)
சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியன்
கல்விஎஸ்எஸ்எல்சி, விஷாரத் (இந்தி)
பணிதிரைப்பட இயக்குனர் & தயாரிப்பாளர், முக்தா கலையகம்
பெற்றோர்வெங்கடச்சாரியார், செல்லம்மாள்[1]
வாழ்க்கைத்
துணை
பிரேமா
பிள்ளைகள்ரவி, சுந்தர், மாயா

திரைப்படத்துறை பங்களிப்புகள்

இயக்கிய திரைப்படங்கள்

தயாரித்த திரைப்படங்கள்

எழுத்துத்துறை பங்களிப்புகள்

முக்தா சீனிவாசன் திரைப்படம், வரலாறு, அறிவியல், இலக்கியம், ஆன்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு பல சிறுகதைகளையும் நூல்களையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். 1994இல் தமிழ்த் திரைப்படத்துறை குறித்த கலைக்களஞ்சியத்தை தமிழ் திரைப்பட வரலாறு என்ற தலைப்பில் தொகுத்தார்; இது "துக்ளக்" இதழில் வெளிவந்தது.

  • இருபதாம் நூற்றாண்டின் கதைகள் பாகம் I -V
  • தேஜஸ்வி
  • தலைமுறை கதைகள்
  • உத்தமி
  • தண்டனைக்குத் தப்பிய குற்றங்கள்
  • மனு
  • முக்தாவின் சிறுகதைகள்
  • ஆத்மா வென்றது
  • சொல்லாத இரகசியம்
  • திருமணம் புனிதமானது
  • மன சந்திப்பு
  • மனுஷ்ய தர்மம்
  • கூத்துக்காரன் தோப்பு
  • முக்தாவின் கட்டுரைகள்
  • மனிதநேயக் கதைகள்
  • எதிர்வீட்டு ஹேமா
  • கால வெள்ளம்
  • பாரம்பரியம்
  • உலகத்தின் சிறந்த கதைகள் பாகம் – I & II
  • இலக்கியத்தில் இணையும் இந்தியா
  • தமிழ் திரைப்பட வரலாறு
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் வரலாறு
  • கலைஞர்களோடு நான்
  • கதாசிரியர்களோடு நான்
  • அறிஞர்களோடு நான்
  • நினைவு ஏடுகள்
  • கோபமும் சிரிப்பும்
  • சமூக நீதி போராட்டங்கள்
  • மானுடம் கண்ட மகா ஞானிகள்
  • இணையற்ற சாதனையாளர்கள் பாகம் I – V
  • நூல்கள் தரும் நுண்ணறிவு பாகம் I & II
  • இராமாயணத்தில் துணை கதா பாத்திரங்கள்
  • மாணவர்களுக்கான இந்திய சுதந்திரப் போராட்டம் – தமிழ்
  • மாணவர்களுக்கான இந்திய சுதந்திரப் போராட்டம் – ஆங்கிலம்
  • பாரதியின் ஞான செம்மல்
  • தமிழ் தயாரிப்பாளர்களின் வரலாறு பாகம் I & II
  • திரைப்பட சேம்பர் வரலாறு – தமிழிலும் ஆங்கிலத்திலும்
  • காளிதாசனின் மேகதூதம்
  • வடமொழி இலக்கியம்
  • நான் சந்தித்த கலைஞர்கள்
  • இரகுவம்ச மகா காவியம்
  • இன்னும் சில கதைகள்

அரசியல்

சீனிவாசன் துவக்கத்தில் பொதுவுடமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கட்சிப்பணிகளில் பங்கேற்று வந்தார். 1946இல் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டபோது, அரசு அலுவலராக இருந்த சீனிவாசன் வேலையிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். திரைப்படத்துறையில் இருந்த இவரது தமையனார் இராமசாமியின் முயற்சியால் விடுவிக்கப்பட்டு திரைப்படத்துறையில் நாட்டம் செலுத்தினார். இவரது துவக்க கால திரைப்படங்களான முதலாளி, நாலு வேலி நிலம், தாமரைக் குளம் ஆகியன பொதுவுடமைக் கருத்துக்களின் தாக்கம் கொண்டவையாக அமைந்தன.

பொதுவுடமைக்கட்சி இரண்டாக பிளவுபட்டபோது 1961இல் இந்தியத் தேசிய காங்கிரசில் இணைந்தார். 1996இல் கருப்பையா மூப்பனாரின் தலைமையில் பிரிந்த தமிழ் மாநில காங்கிரசில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். பின்னர் இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக இருந்தார். இவர் பொறுப்பேற்ற பதவிகள்:

  • மாவட்ட காங்கிரசுத் தலைவர்
  • தமிழ்நாடு காங்கிரசு குழு (TNCC) துணைத்தலைவர்
  • மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரசின் பொதுச் செயலாளர்

விருதுகள்

  • முதலாளி திரைப்படத்திற்காக தேசிய விருது[4]
  • பலப்பரிட்சை - தமிழக அரசின் 1977-78க்கான சிறந்த திரைப்பட விருது
  • 1981-82 கீழ் வானம் சிவக்கும்' - தமிழக அரசின் 1981-82க்கான சிறந்த திரைப்பட விருது
  • பரிட்சைக்கு நேரமாச்சு - தமிழக அரசின் 1981-82க்கான சிறந்த திரைப்பட இயக்குநர் விருது

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.