சிம்லா ஸ்பெஷல்

சிம்லா ஸ்பெஷல் 1982-ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் கமல்ஹாசன், ஸ்ரீப்ரியா முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 'உனக்கென்ன மேலெ' எனும் பாடலுக்கு நடண அமைப்பாளராகவும் கமல் பணியாற்றியுள்ளார்.

சிம்லா ஸ்பெஷல்
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புமுக்தா வி.ராமசாமி
கதைவிசு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புகமல்ஹாசன்
ஸ்ரீப்ரியா
எஸ். வி. சேகர்
ஒய். ஜி. மகேந்திரன்
மனோரமா
ஒளிப்பதிவுஎம். கர்ணன்
படத்தொகுப்புவி. பி. கிருஷ்ணன்
சி. ஆர். ஷண்முகம்
நடனம்புலியூர் சரோஜா
கலையகம்முக்தா பிலிம்ஸ்
விநியோகம்முக்தா பிலிம்ஸ்
வெளியீடு14 ஏப்ரல் 1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வகை

நகைச்சுவைப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கோபு (கமல்ஹாசன்) ஒரு வளர்ந்து வரும் நாடகம் கலைஞர். அவர் மற்றும் அவரது நல்ல நண்பர் பாபு (எஸ். வி. சேகர்) இருவரும் குறைந்தசெலவில் நகைச்சுவை நாடகங்கள் நிகழ்த்தும் பிரபலமான குழுவிற்குச் சொந்தக்காரர்கள். பாபுவின் சகோதரியின் திருமணச் செலவிற்கு கைகொடுக்க உதவும் என்று , அவர்கள் சிம்லா உள்ள தமிழர்கள் சங்கம் சார்பில் நாடகங்களை நடத்த அவர்கள் குழு தயார் ஆகிறது. அந்த நாடகங்களில் ஒன்று "சிம்லா ஸ்பெஷல்" என்ற தலைப்பில் மகாலட்சுமி(ஸ்ரீப்ரியா)யால் எழுதப்பட்டிருக்கிறது.

கோபு சிம்லாவில் இருக்கும் போது, பாபுவிடம் கோபுவின் அம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக அவசர தகவல் தெரிவிக்கும் ஒரு தந்தி வருகிறது. அவர்கள் சிம்லாவில் நாடகம் நடத்த இயலாவிட்டால், வரப்போகும் பணஇழப்புக்குப் பயந்து, பாபு கோபுவிடம் தகவலைக் கூறாமல் மறைத்து வைத்திருக்கிறார். இதற்கிடையில் ஒரு நண்பர், கோபுவின் தாயார் நிலைமை மிகவும் மோசமடைந்தது என்று கோபுவிடம் தெரிவித்து விடுகிறார். தனது தாயின் நோய் பற்றி கண்டுபிடித்தாலும், இருப்பினும், தனது நண்பரின் அக்காவுக்காக, கோபு நாடகத்தில் தொடர முடிவு செய்கிறார். பாபுவுக்குத் தெரிந்தால், கோபுவை அவரது தாயார் அருகில் இருக்க சொல்லி வலியுறுத்துவார் என்று நினைத்து, தனக்கு வந்த தகவலைக் கோபு மறைக்கிறார்.

பாபுவின் தங்கை நிச்சயதார்த்தம் நடந்த நாளில், பாபுவின் கோட்டு பையில் அந்த தந்தியைக் கண்டுபிடித்து தனது நண்பரின் சுயநலத்தை உணர்கிறான். மனக்கசப்பினால் அவர்களது நட்பு முறிகிறது. இறுதி நாடகம் நிகழ்த்தும் போது, கோபுவின் அம்மா உடல்நிலை நன்றாக இருக்கிறது என்று ஒரு அழைப்பு வருகிறது. கோபதாபங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு, நண்பர்கள் மீண்டும் இணைகிறார்கள்.

நடிகர்கள்

பாடல்கள்

இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.

எண்.பாடல்பாடகர்கள்
1"உனக்கென்ன மேலெ நின்றாய்"எஸ். பி. பாலசுப்பிரமணியம்
2"தஞ்சாவூர் மேளம் அடிச்சு"எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன்
3"லுக் லவ் மை டியர் (Look Love Me Dear)"எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
4"குத்துர குத்துல"மலேசியா வாசுதேவன், மனோரமா

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.