காத்தாடி ராமமூர்த்தி

காத்தாடி ராமமூர்த்தி 1938இல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் எஸ்.சுந்தரேச அய்யரின் மகனாகப் பிறந்தார்.

கல்லூரி வாழ்க்கை

கும்பகோணம் பாணாதுரை பள்ளியில் படித்தவர்.[1] இவர் 1958இல் விவேகானந்தா கல்லூரியில் பட்டம் பெற்றார். கல்லூரியில் பயிலும் நாட்களிலேயே ராமமூர்த்தி நாடகங்களில் நடிப்பதை பெரிதும் விரும்பினார். அவரது நாடகங்கள் மக்களிடையே மிகப் பிரசித்தமானவை. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது, தேவனின் ‘கோமதியின் காதலன்’ என்ற நாடகத்தில் வில்லனின் கைத்தடி பக்கிரி வேடமேற்று நடித்தார். 1960-களில் ‘இஃப் ஐ கெட் இட்’ என்று சோ போட்ட நாடகத்தில் இவர் ‘காத்தாடி’ என்ற பாத்திரத்தில் நடித்ததன் மூலமாக ‘காத்தாடி’ என்ற அடைமொழியைப் பெற்றார்.[1]

பன்முகம்

இவர் தமிழில் மேடை நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடிகராகவும், இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும், டப்பிங் கலைஞராகவும் பணியாற்றியுள்ளார்.

நடிப்பு

நகைச்சுவை நடிகராக இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்களும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் மக்களால் பெரிதும் விரும்பப்படுபவையாகும். இவர் மேடை நாடகங்களில் நடித்து பல விருதுகளை வென்றுள்ளார். இவரது நாடக குழுவில் நடிக்க முதல் வாய்ப்பைப் பெற்று பின்னர் பிரபலமடைந்தவர்களுள் சோ.ராமசாமி, விசு, டெல்லி கணேஷ் மற்றும் கிரேசி மோகன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். பொம்மலாட்டம், மடிப்பாக்கம் மாதவன், சின்ன பாப்பா பெரிய பாப்பா (கெளரவ வேடம்), துப்பறியும் சாம்பு (துப்பறியும் சாம்புவாக), ஆஹா, இளவரசி உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும், ஒரு ஓடை நதியாகிறது (1983) உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 40 நாடகங்களை 7,000 தடவை மேடையேற்றிய பெருமையைப் பெற்றவர்.[1]

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

ஆண்டுவிருதுவகைதொடரின் பெயர்கதாபாத்திரம்முடிவு
2014 சன் குடும்பம் விருதுகள் சன் குடும்பம் சிறந்த துணை நடிகர் விருது பொம்மலாட்டம் (தொலைக்காட்சித்தொடர்) பத்ரி நியமிக்கப்படல்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.