மாலத்தீவின் ருஃபியா
ருஃபியா (rufiyaa, திவெயி: ދިވެހި ރުފިޔާ) மாலத்தீவுகளின் அலுவல்முறை நாணயமாகும். அமெரிக்க டாலருக்கு நிகரான மாற்று வீதத்தையும் நாணயங்களை வெளியிடுவதையும் மாலத்தீவுகள் நிதிய ஆணையம் மேற்கொள்கின்றது. ருபியாவைக் குறிக்க பெரும்பாலும் MRF அல்லது Rf பயன்படுத்தப்படுகின்றது. இதற்கான ஐ.எசு.ஓ 4217 குறியீடு MVR ஆகும். ருபியா 100 லாரிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. "ருஃபியா" என்ற சொல் இந்திச் சொல் ருப்யா (रुपया)விலிருந்து வந்துள்ளது. 10 ஏப்ரல் 2011 நிலவரப்படி, ஒரு அமெரிக்க டாலருக்கான மத்திய மாற்று வீதம் 12.85 ருபியாக்களாகும். இதிலிருந்து ±20% வரை வேறுபடலாம்; அதாவது 10.28 ருபியாக்களிலிருந்து 15.42 ருபியாக்கள் வரை.[1]
மாலத்தீவின் ருஃபியா | |
---|---|
ދިވެހި ރުފިޔާ (திவெயி மொழி) | |
![]() 1 ருஃபியா நாணயம் | |
ஐ.எசு.ஓ 4217 | |
குறி | MVR |
வகைப்பாடுகள் | |
சிற்றலகு | |
1/100 | லாரி |
குறியீடு | Rf, MRf, MVR, .ރ or /- |
வங்கிப் பணமுறிகள் | Rf. 5, Rf. 10, Rf. 20, Rf. 50, Rf. 100, Rf. 500 |
Coins | 1 லாரி, 5 லாரி, 10 லாரி, 25 லாரி, 50 லாரி , Rf 1, Rf 2 |
மக்கள்தொகையியல் | |
User(s) | ![]() |
Issuance | |
நடுவண் வங்கி | மாலத்தீவு நிதிய ஆணையம் |
Website | www.mma.gov.mv |
Printer | டெ லா ரூ |
Website | www.delarue.com |
Mint | நிதி மறும் கருவூல அமைச்சகம் |
Website | www.finance.gov.mv |
Valuation | |
Inflation | 7.3% |
Source | உலகத் தரவுநூல், சூன் 2009 மதிப். |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.