திருவிதாங்கூர் ரூபாய்

திருவிதாங்கூர் ரூபாய் திருவிதாங்கூர் சமத்தானத்தில் புழக்கத்தில் இருந்த நாணயம் ஆகும். பிரித்தானியரால் வெளியிடப்பட்ட இந்திய ரூபாய் போலன்றி, திருவிதாங்கூர் ரூபாய் 7 பணமாக பிரிக்கப்பட்டது; ஒவ்வொரு பணமும் 4 சக்கரத்திற்கும் ஒவ்வொரு சக்கரமும் 16 காசிற்கும் சமமாகும். திருவிதாங்கூர் ரூபாய் 1949 வரை புழக்கத்தில் இருந்தது. இதன் பின் இந்திய ரூபாய் செலாவணியாக மாறியது.

1901இல் 2 சக்கரங்கள், 4 சக்கரங்கள், 7 சக்கரங்கள் (1/4 ரூபாய்), 14 சக்கரம் (1/2 ரூபாய்) மதிப்புகளுக்கு வெள்ளி நாணயங்கள்வெளியிடப்பட்டன. 1 காசு, 4 காசு, 8 காசு, 1 சக்கரம் (=16 காசு) மதிப்பிற்கு செப்புக் காசுகள் வெளியிடப்பட்டன. பிரித்தானிய இந்திய ரூபாய் ஒன்றிற்கு 28 சக்கரம், 8 காசாக நாணயமாற்று இருந்தது. 1 திருவிதாங்கூர் ரூபாய் 15 அணா, 8.63 பைசாவிற்கு இணையாக இருந்தது. [1]

மேற்சான்றுகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.