மலேசிய இஸ்லாமிய கட்சி

மலேசிய இஸ்லாமிய கட்சி (பாஸ்) (மலாய்: Parti Islam Se-Malaysia) (ஜாவி: ڤرتي اسلام س-مليسيا) என்பது மலேசியாவில் உள்ள ஓர் அரசியல் எதிர்க் கட்சியாகும். பொதுவாக, இதனைப் பாஸ் கட்சி என்று அழைப்பார்கள். இது இஸ்லாமிய சமயம் சார்ந்த கட்சியாகும். இந்தக் கட்சியின் தலைவராக டத்தோ ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் இருக்கிறார். இஸ்லாமியச் சட்டவிதிகளைச் சார்ந்த ஒரு நாடாக மலேசியாவை மாற்றி அமைக்க வேண்டும் என்பதே இக்கட்சியின் தலையாயக் கோட்பாடு ஆகும்.[1]

மலேசிய இஸ்லாமிய கட்சி
பாஸ்
Pan-Islamic Malaysian Party
Parti Islam Se-Malaysia
ڤرتي اسلام س-مليسيا
ஆலோசகர்நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்
தலைவர்அப்துல் ஹாடி அவாங்
துணை தலைவர்முகமட் சாபு
பொது செயலாளர்முஸ்தாபா அலி
தொடக்கம்ஏப்ரல் 4, 1939
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
செய்தி ஏடுஹராக்கா நாளிதழ்
இளைஞர் அமைப்புபாஸ் இளைஞர் அணி
கொள்கைஇஸ்லாமியம்,
இஸ்லாமிய ஜனநாயகம்,
சமயப் பழைமைவாதம்
தேசியக் கூட்டணிபாரிசான் நேசனல் (1974–78)
ஐக்கிய உம்மா அணி (1989–1996)
மாற்று முன்னணி (1999–2004)
பாக்காத்தான் ராக்யாட் (2008-2015)சர்ச்சைக்குரிய
நிறங்கள்வெள்ளை, பச்சை
டேவான் ராக்யாட்:
23 / 222
இணையதளம்
www.pas.org.my

மலேசியா


சமய அடிப்படையில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்க்கும் ஆற்றல் மிக்க கட்சியாகவும் இந்த மலேசிய இஸ்லாமிய கட்சி விளங்கி வருகிறது.[2] தீபகற்ப மலேசியாவின் வட பகுதியில் இருக்கும் பழைமைவாத மாநிலங்களான கிளாந்தான், திரங்கானு ஆகியவற்றின் வலுவான ஆதரவுகளை இந்தக் கட்சி பெற்றுள்ளது. மலாயா சுதந்திரம் அடைந்த பிறகு, மலேசிய மக்களின் பேரதரவைப் பெற்று விளங்கிய பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல் அரசியல் கட்சியும் இதுவே ஆகும்.

2008ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலுக்குப் பின், பி.கே.ஆர் என்று அழைக்கப்படும் மக்கள் நீதிக் கட்சி, ஜனநாயக செயல் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து பாக்காத்தான் ராக்யாட் எனும் ஓர் அரசியல் எதிர் அணியை உருவாக்கியது. இப்போது மலேசியாவின் கிளாந்தான், திரங்கானு, சிலாங்கூர், பினாங்கு ஆகிய மாநிலங்களை பாக்காத்தான் ராக்யாட் தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறது.

மாற்று முன்னணி

புதிதாகத் தோன்றிய இந்த மக்கள் நீதிக் கட்சி, ஏற்கனவே செயல்பட்டு வந்த ஜனநாயக செயல் கட்சி, ஆகியவற்றுடனும் இணைந்து மாற்று முன்னணி (மலாய்: Barisan Alternatif) எனும் ஓர் எதிர் அரசியல் அணியை, மலேசிய இஸ்லாமிய கட்சி உருவாக்கியது. 1999 ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. அதில் மலேசிய இஸ்லாமிய கட்சி திரங்கானு மாநிலத்தை, ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியிடம் இருந்து கைபற்றியது.[3]

அண்மைய நிகழ்வுகள்

கடந்த காலங்களில், மலேசிய இஸ்லாமிய கட்சி மலாய்க்காரர்களையும், முஸ்லீம் ஆதரவாளர்களையும் இலக்குகளாக் கொண்டு செயல்பட்டு வந்தது. ஆனால், அண்மைய காலங்களில், குறிப்பாக 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர், அதன் அணுகுமுறையில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உறுத்தல்கள் இல்லாத மிதமான போக்கை முஸ்லீம் அல்லாதவர்களிடம் காட்டி வருகிறது.

மலேசியாவை ஓர் இஸ்லாமிய நாடாக மாற்றுவதையே ஓர் இலட்சியமாகக் கொண்டிருந்த மலேசிய இஸ்லாமிய கட்சி, அண்மைய காலங்களில் அதைப் பற்றி பேசுவதையும் குறைத்துக் கொண்டது.[4] 2008 பொதுத் தேர்தலில் முஸ்லீம் அல்லாத ஒருவரையும் மலேசிய இஸ்லாமிய கட்சியின் சார்பில் போட்டியிட வைத்தது.

நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்

டத்தோ பென்தாரா செத்தியா நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் '(10 ஜனவரி 1931-12 2015 பிப்ரவரி) ஒரு முன்னாள் மலேசிய அரசியல்வாதி, முஸ்லீம் ஆண்மிக அறிஞர் ,மலேசிய கிளாந்தான் மாநில முதல்வர் மற்றும் மலேசிய இஸ்லாமிய கட்சி (பாஸ்) ஆன்மீக தலைவர் ஆவார். "டோக் குரு" நிக் அஜிஸ் அவரது பிரபலமான புனைப்பெயர் ஆகும். இவர் தமிழ், அரபு, உருது மொழியில் சரளமாக உரையாட வல்லவர். இவர் மலேசிய தமிழர்கள் மத்தியில் மிக பிரபலம் ஆன அரசியல்வாதி ஆவார்.நிக் அஜிஸ் அவர்கள் 12 பிப்ரவரி 2015 இரவு 9:40 மணிக்கு புலாவ் மலாக்காவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். [5]

குமதா ராமன்

குமதா ராமன் எனும் ஒரு தமிழ்ப் பெண்ணைத் தன் கட்சியின் சார்பில் போட்டியிட வைத்து சாதனை படைத்தது. குமதா ராமன் ஒரு வழக்குரைஞர் ஆவார். ஜொகூர் மாநிலத்தில் உள்ள உலு திராம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார்.[6]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.