மத்திய மலாக்கா
மத்திய மலாக்கா (Central Malacca, மலாய் மொழி: Melaka Tengah, மலாக்கா தெங்ஙா) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தை இரு நகராண்மைக் கழகங்கள் நிர்வாகம் செய்கின்றன. வரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம் (Historical Malacca City Council, மலாய் மொழி: Majlis Bandaraya Melaka Bersejarah (MBMB);[1] ஹங்துவா ஜெயா நகராண்மைக் கழகம் (Hang Tuah Jaya Municipal Council, மலாய் மொழி: Majlis Perbandaran Hang Tuah Jaya (MPHTJ)[2] ஆகியவையே அந்த இரு கழகங்கள்.
மத்திய மலாக்கா Central Malacca Melaka Tengah | |
---|---|
மாவட்டம், மலேசியா | |
![]() | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
அரசு | |
• மாவட்ட அதிகாரி | ரோஸ்லான் பின் இப்ராஹிம் |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 4,55,300 |
நேர வலயம் | MST (ஒசநே+8) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை (ஒசநே) |
அஞ்சல் குறியீடு | 75150 |
தொலைபேசி குறியீடு | 06 |
1977-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட வரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம் (Historical Melaka City Municipal Council (MPMBB), 15 ஏப்ரல் 2003-இல் மலாக்கா மாநகராண்மைக் கழகம் என்று பெயர் மாற்றம் கண்டது. பின்னர், 1 ஜனவரி 2010-இல், மேலும் தனி ஒரு நகராண்மைக் கழகம் இணைக்கப்பட்டது. அதன் பெயர் ஹங்துவா ஜெயா நகராண்மைக் கழகம்.
வரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம்
தற்சமயம், மலாக்கா தெங்ஙா மாவட்டத்தில், வரலாற்று மலாக்கா மாநகராண்மைக் கழகம் 30.86 ச.கி.மீ. பரப்பளவை நிர்வாகம் செய்கிறது. ஹங்துவா ஜெயா நகராண்மைக் கழகம் 57.66 ச.கி.மீ. பரப்பளவை நிர்வாகம் செய்கிறது.
மலாக்கா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில், இந்த மலாக்கா தெங்ஙா மாவட்டம்தான் மிகுந்த வளர்ச்சி கண்டுள்ளது. அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநிலமாகவும் விளங்குகிறது. மாநிலத்தின் தலைநகரம் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில், சுற்றுப்பயணிகளை அதிகமாகக் கவரும் இடங்களும் நிறைய உள்ளன.
துணை மாவட்டங்கள்
மலாக்கா தெங்ஙா மாவட்டத்தில் 40 துணை மாவட்டங்கள் அல்லது முக்கிம்கள் (Mukims) உள்ளன. மலேசியாவில் ஒரு முக்கிம் என்றால் ஒரு துணை மாவட்டம் அல்லது ஒரு துணை மாவட்டத்தில் மற்றொரு துணை மாவட்டத்தைக் குறிப்பதாக அமையும்.[3]
- ஆலாய்
- ஆயர் மோலேக்
- பாச்சாங்
- பாலாய் பாஞ்சாங்
- பத்து பிரண்டாம்
- பெர்த்தாம்
- புக்கிட் பாரு
- புக்கிட் கட்டில்
- புக்கிட் லிந்தாங்
- புக்கிட் பியாத்து
- புக்கிட் ரம்பாய்
- செங்
- டூயோங்
- உஜோங் பாசிர்
- காண்டாங்
- கிளேபாங் பெசார்
- கிளேபாங் கெச்சில்
- குருபோங்
- பாடாங் செமாபோக்
- பாடாங் தெமு
- பாயா ரும்புட்
- பிரிங்கிட்
- பெர்னு
- செமாபோக்
- சுங்கை ஊடாங்
- தாங்கா பத்து
- தஞ்சோங் கிளிங்
- தஞ்சோங் மின்யாக்
- தெலுக் மாஸ்
- பண்டார் புக்கிட் பாரு
- பண்டார் மலாக்கா
- பெக்கான் ஆயர் மோலேக்
- பெக்கான் பத்து பிரண்டாம்
- பெக்கான் புக்கிட் ரம்பாய்
- பெக்கான் கண்டாங்
- பெக்கான் கிளேபாங்
- பெக்கான் பாயா ரும்புட்
- பெக்கான் சுங்கை ஊடாங்
- பெக்கான் தாங்கா பத்து
- பெக்கான் தஞ்சோங் கிளிங்
மேற்கோள்கள்
- On 1st January 2010, another Local authority was established called Majlis Perbandaran Hang Tuah Jaya (MPHTJ). The history of Melaka Historic City Council (MBMB) is closely related to Melaka history.
- Hang Tuah Jaya Municipal Council was established to plan, develop and provide municipal services Green Technology City concept in line with the set vision and mission.
- Mukim is a geographical division used in Malaysia. It is losely translated as sub-district nowadays, as mukims are a level below daerah (district) which itself is one level below negeri (state).