ஆயர் குரோ

ஆயர் குரோ (ஆங்கிலம், மலாய் மொழி: Ayer Keroh) என்பது மலேசியா, மலாக்கா, மலாக்கா தெங்ஙா மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கிய நகரம் ஆகும். இந்த நகர்ப் பகுதி மேம்பாடு கண்டு, தற்சமயம் மலாக்கா மாநிலத்தின் அரசு நிர்வாக மையமாகவும் விளங்கி வருகிறது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும், குட்டி மலேசியா (Mini Malaysia), குட்டி ஆசியான் (Mini ASEAN), மலாக்கா வண்ணத்துப் பூச்சி - ஊர்வன காப்பகம் (Malacca Butterfly & Reptile Sanctuary), விலங்கியல் பூங்கா போன்றவை பிரசித்தி பெற்றவை.[1]

ஆயர் குரோ
Ayer Keroh
நாடு மலேசியா
மலேசியா
மலாக்கா
நேர வலயம்MST (ஒசநே+8)
  கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு75450
தொலைபேசி குறியீடு06

கோலாலம்பூர் மாநகரில் இருந்து 134 கி.மீ. தொலைவிலும், மலாக்கா மாநகரில் இருந்து 15 கி.மீ. தொலைவிலும் இருக்கிறது. தீபகற்ப மலேசியா, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் ஆயர் குரோ நுழைவுச் சாவடியில் இருந்து மூன்று கி.மீ. தொலைவில் இருக்கிறது.

இரவு விலங்கியல் பூங்கா எனும் சுற்றுலாக் கவர் நிகழ்ச்சியும் இரவு நேரங்களில் நடைபெற்று வருகிறது. இரவு சார் விலங்குகளின் நடமாட்டத்தை அந்த நிகழ்ச்சியில் காண முடியும்.[2] தவிர, இங்குள்ள தாமான் புவாயா எனும் முதலைகள் பண்ணை (Taman Buaya), உலக தேனீக்கள் அருங்காட்சியகம் (World Bees Museum) போன்றவை, பொழுதுபோக்குச் சார்ந்த உயிரியல் பூங்காக்களாக விளங்குகின்றன.

மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி

மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி இங்குதான் உள்ளது. மலேசியாவைச் சேர்ந்த மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் இந்தக் கல்லூரியில் மருத்துவம் பயின்று வருகின்றனர். மலாக்கா மாநகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் ஆயர் குரோ பகுதியில், மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி அமைந்து இருக்கிறது.[3]

1997 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்ட இந்தக் கல்லூரியில் இது வரை 1500 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றுள்ளனர். புக்கிட் பெருவாங் புற நகர்ப் பகுதியில் பல்லூடகப் பல்கலைக்கழகம் ஒன்றும் உள்ளது. மலேசியாவில் இருக்கும் ஒரே பல்லூடகப் பல்கலைக்கழகம் இது தான். இந்தப் பலகலைக்கழகத்தில் கணினியியல் படிப்பதற்கு மத்தியக் கிழக்கு நாடுகளில் இருந்து ஆயிரக் கணக்கான மாணவர்கள் வருகின்றனர்.

மலேசியப் பல்லூடகப் பலகல்கலைக்கழகம்

மலேசியப் பல்லூடகப் பலகல்கலைக்கழகம் (Multimedia University, சுருக்கம்: MMU), ஆயர் குரோவில்தான் இருக்கிறது. மலேசிய அரசாங்கம் அனுமதி வழங்கிய முதல் தனியார் பலகலைக்கழகம். 1996-இல் தோற்றுவிக்கப்பட்டது.[4] மலாக்கா மலேசியத் தொழில்நுட்பப் பலகல்கலைக்கழகம் (Universiti Teknikal Malaysia Melaka, சுருக்கம்: UTeM), எனும் அறிவியல் பல்கலைக்கழகமும் இந்த ஆயர் குரோ நகர்ப்பகுதியில்தான் இருக்கிறது. தாமான் தாசேக் உத்தாமா தொழிற்பேட்டையில் கட்டப்பட்டு இருக்கிறது.[5] தவிர, சாட் அறவாரியக் கல்லூரியும் (Kolej Yayasan Saad), இங்குதான் இருக்கிறது. இது மாணவர்கள் தங்கிப் படிக்கும் கல்லூரி ஆகும்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.