பேசின் பாலம் தொடருந்து நிலையம்

பேசின் பிரிட்ஜ் (Basin Bridge) அல்லது பேசின் பாலம் இந்திய மாநகரம் சென்னையின் வடபகுதியில் ஓட்டேரி நளாவும் பக்கிங்காம் கால்வாயும் இணையும் இடமாகும்.இங்கு சென்னை படகு குழாம் படகு வலித்தல் போட்டிகளை நடத்துகிறது.

பேசின் பாலம் சென்னை புறநகர் இருப்புவழியில் ஓர் தொடர்வண்டி நிலையமாகும். சென்னை சென்ட்ரலுக்கு அடுத்த முதல் தொடர்வண்டி சந்திப்பாகும். இந்நிலையத்தில் இருப்புவழி மூன்று வழிகளில் பிரிகிறது:முதலாவது ஆவடி மற்றும் அரக்கோணம் நோக்கியும் இரண்டாவது எண்ணூர் மற்றும் கும்மிடிப்பூண்டி நோக்கியும் மூன்றாவது சென்னைக் கடற்கரை நோக்கியும் பிரிகின்றன.

சென்னையின் வடக்கே உள்ள வெளியூர்களுக்கு பேசின் பிரிட்ஜ் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்படுகின்றன.

வரலாறு

இந்த தொடருந்து நிலையம் 1979ஆம் ஆண்டு மின்மயமாகபட்டது. [1]

சான்றுகள்

  1. "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்த்த நாள் 17 Nov 2012.

}

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.