பாண்டியர் செப்பேடுகள்

பாண்டியர் செப்பேடுகள் என்பது பாண்டிய வேந்தர்கள் கொடுத்த நில தானங்களையும், தன் முன்னோர் நில தானங்களை ஆவணப்படுத்தவும் உருவாக்கப்பட்ட பட்டயங்களாகும். பாண்டியர் செப்பேடுகளில் இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கொடுக்கப்பட்ட ஏழு செப்புப்பட்டயங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைந்தன. இவை கிடைக்காமல் போயிருந்தால் களப்பிரர் ஆட்சியைத் தமிழ்நாட்டில் வேரறுத்த பாண்டியர் வேந்தன் கடுங்கோன் பற்றி வரலாறு அறியாமலேயே போயிருக்கும். இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்களின் காலங்களைக் கணிப்பதற்கும், முறைப்படுத்துபவதற்கும் வகையிலாமல் போயிருக்கும்.[1]

திருவரமங்கலம் செப்பேடுகள்
இளையன்புதூர் செப்பேடுகள்

ஏழு முக்கியச்செப்பேடுகள்

முற்கால மற்றும் பிற்கால செப்பேடுகளில் ஏழு செப்பேடுகள் மிகவும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அவை,

  1. இளையன்புதூர் செப்பேடுகள்
  2. வேள்விக்குடிச் செப்பேடுகள்
  3. திருவரமங்கலத்துச் செப்பேடுகள்
  4. சின்னமனூர் செப்பேடுகள் (சிறியவை)
  5. சின்னமனூர் செப்பேடுகள் (பெரியவை)
  6. பாண்டியன் பராந்தக வீரநாராயணின் தளவாய்ப்புரச் செப்பேடுகள்
  7. சிவகாசிச் செப்பேடுகள்

காலநிரல்

மேற்கூறப்பட்ட 7 செப்பேடுகளையும் வைத்துப் பாண்டியர் ஆட்சிக்காலங்கள் (வரிசை) கணிக்கப்பட்டன. அவை,

இளையன்புதூர்[2]

  1. செழியன் சேந்தன்
  2. அரிகேசரி

வேள்விக்குடி[3]

  1. பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி - சங்ககாலம். இதன் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்து,
  2. கடுங்கோன்
  3. அவனி சூளாமணி
  4. செழியன் சேந்தன்
  5. அரிகேசரி
  6. கோச்சடையான்
  7. முதலாம் இராசசிம்மன்
  8. பராந்தகன்

சின்னமனூர் (சிறியவை)[4]

  1. ஜடிலவர்மன்
  2. அரிகேசரி

சின்னமனூர் (பெரியவை)[4]

  1. ஜடிலன்
  2. இரண்டாம் இராசசிம்மன்
  3. வரகுணன்
  4. சீவல்லபன்
  5. இரண்டாம் வரகுணன் மற்றும் அவனின் இளையவன் பராந்தகன் வீர நாராயணன்
  6. மூன்றாம் இராசசிம்மன்

திருவரமங்கலம்[5]

  1. மாறவர்மன்
  2. நெடுஞ்சடையன்

தளவாய்புரம்

  1. பராந்தகன் கோச்சடையான்
  2. சீவல்லபன்
  3. இரண்டாம் வரகுணன் மற்றும் அவனின் இளையவன் பராந்தகன் வீர நாராயணன்

சிவகாசி

  1. தீவிர கோபன்
  2. சீவல்லபன்
  3. மானகுலாசலன்
  4. மானாபரனன்
  5. சுந்தர பாண்டியன் மற்றும் அவன் இளையவன் வீர பாண்டியன்.

பாண்டியர்பற்றிய குறிப்புகள்

மேலுள்ள செப்பேடுகளில் தளவாய்புரம், சின்னமனூர், வேள்விக்குடி போன்ற செப்பேடுகளில் பாண்டிய வேந்தர்கள் செய்ததாகச் சில செயல்கள் குறிக்கப்படுகின்றன. அவை,

  1. உலகம் எல்லாம் பேரூழியில் அழிந்தது. பாண்டிய வேந்தன் ஒருவன் மட்டும் உயிரோடு இருந்தான். மீண்டும் பிரம்மா பூவுலகை படைக்கும் போது அதைச் சுமக்கும் ஆதிசேசனுக்கு சுமை அதிகமானதால், பாண்டியனை புவியின் பாரத்தை தாங்குமாறு வேண்டினான். அதற்குப் பாண்டியன் இசைந்து சந்திர வம்சத்தில் மீண்டும் புதனாக (கிரகம்) தோன்றினான். அவன் வழியில் புரூரவசு என்ற மன்னன் வந்தான் என்று கூறுகின்றன. அதன்படி பின்வரும் பாண்டியர் வம்சம் விளக்கப்ப்டுகின்றது.
    1. ஊழியில் அழியாத பாண்டியன் மற்றும் விட்ணு
    2. அவரின் நாபிக்கமலத்திலிருந்து பிரம்மா
    3. பிரம்மா அத்திரி முனிவரைத் தோற்றுவிக்கிறார்
    4. அத்திரி சந்திரனை தோற்றுவிக்கிறார்
    5. சந்திரனுக்கு புதன் பிறக்கிறான்
    6. புதனுக்கு புரூரவசு பிறக்கிறான்
    7. இன்னும் பல ஆண்டுகள் கழித்து மேற்கூறப்பட்ட வழியிலிருந்து தெளிவில் சந்திரனை மிஞ்சியும், ஒளியில் சூரியனை விஞ்சியும், ஞானத்தால் தேவர்களின் குருவான பிரகசுபதியை விஞ்சியும் பாண்டியர் குலம் பூவுலகில் தோன்றுகிறது.
  1. பாற்கடலை பாண்டியர்கள் கடைந்தனர்
  2. தேவாசுர யுத்தத்தில் தேவர்களின் சார்பில் போரிட்டு அசுரகணங்களை அழிக்கின்றனர்.
  3. இந்திரன் தன் உலகத்துக்கு அழைக்க அங்கு சென்ற பாண்டியன் இந்திரன் ஆசனத்தில் அமர்ந்தான்.
  4. இதனால் இந்திரன் வருணனை ஏவ வருணன் பாண்டிய நாட்டை ஊழியாக அழிக்க முயல கடலைத் தன் வேலெறிந்து அடக்குகிறான் ஒரு பாண்டியன்.
  5. இந்திரனின் முடியை உடைத்தான் ஒரு பாண்டியன்.
  6. இந்திரனின் முத்தாரத்தை அணிந்து கொண்டான் ஒரு பாண்டியன்.
  7. மேருவின் மீது தன் சின்னமான இரு கயல்களை பொறிக்கிறான் ஒரு பாண்டியன்.
  8. அகத்தியரை பாண்டியர்கள் குல குருவாகக் கொண்டனர்.
  9. அரிச்சந்திரனின் நகரத்தைக் கவர்ந்து அவனின் கொற்றம், குடை முரசம் போன்றவற்றைக் கைப்பற்றுகின்றனர்.
  10. இராவணனை தோற்கடித்து தேவர்களுடன் சமாதானம் செய்து வைக்கின்றனர்.
  11. அர்ச்சுனனனை தோற்கடித்தனர்.
  12. அர்ச்சுனனின் வசு சாப்த்தை தீர்த்தனர்.
  13. மகாபாரதப் போரில் பாண்டவர்கள் சார்பில் போரிட்டு கௌரவர்களைத் தங்கள் யானைப் படைமூலம் வெல்கின்றனர்.
  14. மகாபாரத்த்தை தமிழ் படுத்தினர்.
  15. 1000 வேள்விகளைச் செய்து 1000 யானைகளை அந்தணர்களுக்கு தானமாகக் கொடுக்கின்றனர்.
  16. இன்னும் பல அரசர்களை அடக்கியதாகவும், இந்திரன், அசுரர்கள் போன்றவர்களைப் பலமுறை தோற்கடித்தாகவும் பல வீரச் செயல்கள் கூறப்படுகின்றன.

செப்பேடுகளின் விவரங்கள்

செப்பேடுகளின் பெயர்கள்தானம் கொடுத்த வேந்தனின் பெயர்பாதுகாக்கப்ப்டும் இடம்செப்பேடுகளை வெளியிட்ட அமைப்புகள்செப்பேடுகளின் விவ்ரம்செப்பேடுகள் கிடைத்த இடம்
இளையன்புதூர்மாறவர்மன் அரிகேசரிஆவணம்3 ஏடுகள், வட்டெழுத்து, முழுமையாக உள்ளது.மதுரை
வேள்விக்குடிநெடுஞ்சடையன்பிரித்தானிய அருங்காட்சியகம்செந்தமிழ்10 ஏடுகள், வட்டெழுத்து, முழுமையாக உள்ளது.தெரியவில்லை
திருவரமங்கலம்நெடுஞ்சடையன்மதராசிய அருங்காட்சியகம்இந்திய பழம்பொருளகம்7 ஏடுகள், வட்டெழுத்து, முழுமையாக உள்ளது.தெரியவில்லை
சின்னமனூர் (சிறியது)தெரியவில்லைமத்திய தொல்லியல் துறை, மைசூர்தென்னிந்திய கல்வெட்டுகள்3 ஏடுகள் மட்டுமே உள்ளன, வட்டெழுத்து, சில எடுகள் கண்டறியப்படவில்லை.சின்னமனூர், உத்தமபாளையம் வட்டம், தேனி மாவட்டம்.
தளவாய்புரம்பராந்தகன் வீர நாராயணன்டி.என். சுப்பிரமணியன்தமிழ் வரலாற்றுக்கழகம்7 ஏடுகள், வட்டெழுத்து, முழுமையாக உள்ளது.தளவாய்புரம், கோவிலபட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டம்
சின்னமனூர் (பெரியது)இராசசிம்மன்மத்திய தொல்லியல் துறை, மைசூர்தென்னிந்திய கல்வெட்டுகள்7 ஏடுகள் மட்டுமே உள்ளன, வட்டெழுத்து, முதலும் இறுதியுமான ஏடுகள் கிடக்கவில்லை.சின்னமனூர், உத்தமபாளையம் வட்டம், தேனி மாவட்டம்.
சிவகாசிவீரபாண்டியன்மதராசிய அருங்காட்சியகம்தமிழ் வரலாற்று கழகம்5 ஏடுகள், வட்டெழுத்து, இரண்டாம் ஐந்தாம் ஏடுகள் உடைந்து உள்ளன.சிவகாசி, விருதுநகர் மாவட்டம்

மூலம்

  • பாண்டியர் செப்பேடுகள் பத்து. 40, பீட்டர்சு தெரு, சென்னை - 14: தமிழ் வரலாற்றுக்கழகம். 1967.

உசாத்துணை

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. "தொல்பொருள் சான்றுகள்". tamilvu.org. பார்த்த நாள் டிசம்பர் 04, 2012.
  2. T.S. SUBRAMANIAN. "How a Pandya ruler tackled rebellion". hindu.com. பார்த்த நாள் டிசம்பர் 04, 2012.
  3. "South Indian Inscriptions, PANDYA INSCRIPTIONS, INTRODUCTION". whatisindia.com. பார்த்த நாள் டிசம்பர் 04, 2012.
  4. "No. 206.—TWO PANDYA COPPER PLATE GRANTS FROM SINNAMANUR". whatisindia.com. பார்த்த நாள் டிசம்பர் 04, 2012.
  5. "Copper Plates". chennaimuseum.org. பார்த்த நாள் டிசம்பர் 04, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.