இளையன்புதூர் செப்பேடுகள்

இளையன்புதூர் செப்பேடுகள் எனப்படுபவை கி.பி.726 ஆம் ஆண்டு முற்கால பாண்டிய அரசனான அரிகேசரி பராங்குசன் மாறவர்மனின் 36 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட செப்பேடுகள் ஆகும்.இந்த செப்பேடுகள் மதுரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த செப்பேடுகள் மூலம் முற்கால பாண்டியர் வரலாறு குறித்த செய்திகள் கிடைத்துள்ளன.

மொழி மற்றும் வடிவமைப்பு

கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளில் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன. தொடக்கத்திலும், முடிவிலும் வடமொழி கிரந்த எழுத்துக்கள் காணப்படுகின்றன. மொத்தம் 65 வரிகளை உடையது.24 அங்குல நீளமும், 11.5அங்குல அகலமும் கொண்ட இச்செப்பேட்டின் எடை 2.7 கிலோ ஆகும்.

செப்பேடு கூறும் செய்தி

  • வடிவம்பலம்ப நின்ற பாண்டியன் வழி வந்த ஜயந்தவர்மன் என்ற மன்னன மகன் அரிகேசரி பராங்குசன் மாறவர்மன், ஆசி நாட்டு கம்பலை என்னும் மறவனை வென்று அவன் நிலத்தை அரசுடைமையக்கினான். காடாக கிடந்த அந்த நிலங்களை கி.பி. 726 ஆம் ஆண்டு சீரமைத்து இளையன்புதூர் என்று பெயரிட்டு பாரத்வாஜி நாராயணபட்ட சோமாயாஜி என்னும் அந்தணருக்கு கொடை வழங்கி செப்பெடும் வெட்டித்தந்தான் எனவும் அந்த நிலத்தின் நான்கு பக்க எல்லைகளும் இந்த செப்பெட்டில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
  • சேந்தன் மகனாகிய அரிகேசரி பராங்குசன் மாறவர்மனை சேந்தமாறன் என்றும் தேர்மாறன் என்று செப்பேடு கூறுகிறது. மேலும் இந்த செப்பேடு இரணியகற்பம், துலா பாரம் செய்து கொடை கொடுத்தான் எனவும், களக்குடி என்ற ஊரில் அரிகேசரி ஈஸ்வரம் என்ற சிவாலயத்தை கட்டி எழுப்பினான் எனவும் கூறுகிறது. பாண்டி பெரும்பணைக்காரன் மகன் அரிகேசரியே, சின்னமனுர் செப்பேட்டையும் எழுதி இருக்கலாம் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது.
  • வைகைக்கரை, ஏனாதி ஆகிய ஊர்களில் கிடைத்த கல்வெட்டுகள் இந்த மன்னனின் 50 ஆம் ஆட்சியாண்டில் எழுதப்பட்டது. வேள்விக்குடி மற்றும் சிறிய சின்னமனூர் செப்பேடுகளில் கூறப்பட்ட செய்திகள் இந்த செப்பேடுகளிலும் ஒன்றி வருகிறது என ஆய்வாளர்களால் கருதப்படுகிறது. இந்த மன்னன் பெயரால் சின்னமனூர் அரிகேசநல்லூர் என அழைக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.