செப்பேடு

செப்பேடுகள் என்பவை பழங்காலத்தில் மன்னர்களின் கோவில் தானங்கள், வம்சாவளி[1] , போர்க்குறிப்புகள், மரபு வழிக்கதைகள் போன்ற நிகழ்வுகளைப் பதிந்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட உலோகத் தகடு ஆகும். இவை தற்காலத்தில் பழங்காலத்தைப் பற்றி அறியும் தொல்லியல் சான்றுகளாக இருந்து வருகின்றன. இவற்றில் சென்னை அருங்காட்சியகத்தில் இருக்கும் 280 செப்பேடுகளை படியெடுக்க -முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.[2]

இயற்கையாக ஓலைச்சுவடிகள் அழிவது போலச் செப்பேடுகள் அழிவது இல்லை. எனவே பண்டைய மக்கள் செப்பேடுகளைப் படிக்கவும் பாதுகாக்கவுமின்றிப் பூமியில் புதைத்து வைத்தனர். மேலும் பல செப்பேடுகள் உருக்கப்பட்டுப் பாத்திரங்களாக மாறின. செம்பின் உபயோகத்துக்காக பல செப்பேடுகள் அழிக்கப்பெற்றன. இவற்றை மீறி சில செப்பேடுகள் தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டெடுக்கப்பட்டன.

செப்பேடுகள் அவை கிடைத்த இடத்தைக் கொண்டோ அவை இருக்கும் இடத்தைக் கொண்டோ பெயரிடப்படுகின்றன. செப்பேடுகளை அவை கிடைக்கும் இடத்தை மட்டும் வைத்து அவ்விடத்திற்கே உரியது என்று கூறமுடியாது. ஏனெனில் செப்பேடுகளை எடுத்துச் செல்வது எளிமையாக இருப்பதன் காரணமாக ஓரிடத்திற்குரியவை வேறுபட்ட தொலைவான இடங்களில் கூடக் கிடைக்கலாம்.

இந்தியா

இந்தியாவில் இதுவரையில் 1561 செப்பேடுங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றின் விவரம்:

மாநிலம்பட்டயங்களின் எண்ணிக்கை
தமிழ்நாடு489
ஆந்திரப் பிரதேசம்289
மகாராட்டிரம்168
கர்நாடகம்162
குஜராத்112
ஒரிசா105
மத்தியப்பிரதேசம்73
மேற்கு வங்காளம்52
ராஜஸ்தான்50
பீகார்32
அசாம்11
கேரளா9
மற்றவை9

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.