பவுல் உரோமர்
பவுல் உரோமர் (Paul Romer) ஒரு அமெரிக்கப் பொருளியலாளர், தொழில் முனைவாளர், செயற்பாட்டாளர். இவர் பொருளாதார வளர்ச்சி நிபுணர்களில் ஒருவர். தொழில்நுட்பமும், விதிகளும் எவ்வாறு முன்னேற்றத்தை அல்லது பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன என்பது பற்றி இவர் ஆய்ந்து கோட்பாடுகள் உருவாக்கி உள்ளார்.
பவுல் உரோமர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||||
உலக வங்கி முதன்மை பொருளாதார வல்லுநர் | |||||||||||||
பதவியில் அக்டோபர் 2016 – 24 சனவரி 2018 | |||||||||||||
குடியரசுத் தலைவர் | ஜிம் யோங் கிம் | ||||||||||||
முன்னவர் | கெளசிக் பாசு | ||||||||||||
பின்வந்தவர் | சாந்தா தேவராஜன் (பதில்) | ||||||||||||
தனிநபர் தகவல் | |||||||||||||
பிறப்பு | பவுல் மைக்கேல் உரோமர் நவம்பர் 6, 1955[1] டென்வர், கொலராடோ, அமெரிக்கா | ||||||||||||
கல்வி | சிக்காகோ பல்கலைக்கழகம் (BSc, MA, முனைவர்) மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் குயீன்சு பல்கலைக்கழகம் | ||||||||||||
விருதுகள் | பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (2018) | ||||||||||||
|
சரியான விதிகளையும், தொழில்நுட்பத்தையும் கொண்ட நகரங்கள் உலகப் பொருளாதர வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்பது இவரது கருத்துக்களில் ஒன்று. தூய்மை, நலம், போக்குவரத்து, காவல் என பல முனைகளில் கவனமாக உருவாக்கப்பட்ட விதிகளைக் கொண்ட நகரம் ஆற்றல் படைத்த மனிதர்களையும் தொழில்நுட்பத்தையும் பெற்று வளர்ச்சி பெறும் என்பது இவரது கருத்து.
இவர் 2018 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு[2] வில்லியம் நோர்டவுசுடன் இணைந்து பெற்றார்.
மேற்கோள்கள்
- Romer, Paul Michael (1983). Dynamic competitive equilibria with externalities, increasing returns and unbounded growth (Ph.D.). சிக்காகோ பல்கலைக்கழகம். OCLC 28795806 – via ProQuest. (Subscription required (help)). Cite uses deprecated parameter
|subscription=
(help) - Appelbaum, Binyamin (October 8, 2018). "2018 Nobel in Economics Awarded to William Nordhaus and Paul Romer". The New York Times. https://www.nytimes.com/2018/10/08/business/economic-science-nobel-prize.html.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.