ஜிம் யோங் கிம்

ஜிம் யோங் கிம் (Jim Yong Kim, பிறப்பு திசம்பர் 8, 1959) உலக வங்கியின் 12 ஆவது தலைவர் ஆவார். மார்ச்சு 23, 2012 அன்று கிம்மை உலக வங்கியின் அடுத்த தலைவராக ஐக்கிய அமெரிக்கா நியமிப்பதாக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா அறிவித்தார்.[1] இவர் 2012 ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 ஆம் நாள் முதல் உலக வங்கியின் தலைவராக உள்ளார்.[2] 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் இவர் உலக வங்கியின் தலைவராக 1 ஜூலை, 2017 முதல் உள்ள ஐந்தாண்டு காலத்திற்கு இவர் மறு நியமனம் செய்யப்பட்டார்.[3]

ஜிம் யோங் கிம்
김용
金勇
உலக வங்கித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
ஏப்ரல் 16, 2012
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 8, 1959 (1959-12-08)
சியோல், தென் கொரியா
வாழ்க்கை துணைவர்(கள்) யூன்சூக் லிம்
பிள்ளைகள் 2
இருப்பிடம் அனோவர், நியூ ஹாம்சயர்
படித்த கல்வி நிறுவனங்கள் பிரௌன் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
தொழில் மருத்துவர்
ஜிம் யோங் கிம்
Hangul김용
Hanja金勇
Revised RomanizationGim Yong
McCune–ReischauerKim Yong

முன்னதாக டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைவராக உள்ள ஓர் கொரிய அமெரிக்க மருத்துவர். இதற்கு முன்பாக ஆர்வர்டு மருத்துவப் பள்ளியின் உலகளாவிய உடல்நலம் மற்றும் சமூக மருத்துவத் துறையின் தலைமைப் பேராசிரியராகவும் பார்ட்னர்ஸ் இன் எல்த் என்ற தன்னார்வல அமைப்பின் இணை நிறுவனராகவும் செயல் இயக்குனராகவும் இருந்துள்ளார். சூலை 1, 2009இல் ஐவி லீக் பல்கலைக்கழகமான டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைமையேற்று இத்தகைய பொறுப்பில் அமரும் முதல் ஆசிய-அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார்.[4]

இவர் சனவரி 7 2019 இல் தான் உலக வங்கித் தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாகவும், 2019 பெப்ரவரி 1 அன்று இந்த முடிவு நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்தார்.[5]

மேற்கோள்கள்

  1. Office of the Press Secretary, The White House (23 March 2012). "President Obama Announces U.S. Nomination of Dr. Jim Yong Kim to Lead World Bank". பார்த்த நாள் 23 March 2012.
  2. Sudeep Reddy (16 April 2012). "U.S. Nominee Is Elected to Lead World Bank". The Wall Street Journal. பார்த்த நாள் 8 சனவரி 2019.
  3. Leslie Picker (27 September 2016). "World Bank Picks Jim Yong Kim for Second Term as President". The New York Times. பார்த்த நாள் 8 சனவரி 2019.
  4. "김용 교수, 아시아인 최초 아이비리그 총장 선임…다트머스 대학", Yahoo Korea.
  5. "Jim Yong Kim steps down as President of World Bank". BBC News. பார்த்த நாள் 8 சனவரி 2019.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.