பழவேற்காடு

பழவேற்காடு (ஆங்கிலம்: Pulicat) (Pazhaverkadu) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிற்றூர் ஆகும். இது சென்னைக்கு வடக்கே கடலோரத்தில் அமைந்துள்ள ஓர் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஊராகும். சென்னையிலிருந்து 60 கிமீ தொலைவிலும் எலவூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. இது பழவேற்காடு ஏரியையும் வங்காள விரிகுடாவையும் பிரிக்கும் ஸ்ரீஹரிகோட்டா தீவில் அமைந்துள்ளது. இங்கு பல அமெரிக்க $ 1 பில்லியன் மதிப்புள்ள மருத்துவ சிறப்பு பொருளாதார மண்டலம்[3] உட்பட பல சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுவதாலும் பழவேற்காடு முதன்மை பெற்று வருகிறது. இங்கு உள்ள பழவேற்காடு ஏரி பறவைகள் காப்பகம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது.

பழவேற்காடு
  ஊர்  
பழவேற்காடு கிராமத்தின் பெயர் பலகை
பழவேற்காடு கிராமத்தின் பெயர் பலகை
பழவேற்காடு
இருப்பிடம்: பழவேற்காடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 13°25′00″N 80°19′00″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவள்ளூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

வரலாறு

விசய நகர மன்னர்களின் துணையுடன் போர்த்துக்கீசியர்கள் 1502ஆம் ஆண்டில் இங்கு ஓர் வணிகப் புறமையத்தை நிறுவினார்கள். பின்னர் இங்கு கோட்டை ஒன்று கட்டிக்கொண்டு இருந்தனர் 1609ஆம் ஆண்டில் ஒல்லாந்தரிடம் தோற்று இந்தக கோட்டையை இழந்தனர். பழவேற்காடு 1609 முதல் 1690 வரை ஒல்லாந்தரிடம் இருந்தது. அதன்பிறகு கோட்டை அடிக்கடி கைமாறியது. இறுதியாக 1825 முதல் பிரித்தானியர்களின் கைவசமானது. இங்குள்ள டச்சு தேவாலயம் பலமுறை சீரமைக்கபட்டும் இன்று அழிபட்ட நிலையில் உள்ளது டச்சுக் கோட்டையும் இடுபாடுகளுடன் உள்ளது. பழைய கலங்கரைவிளக்கத்தை இன்னும் ஏரியின் மறுகரையில் பார்க்கலாம். இங்குள்ள 1622 ஆண்டு கல்லறை தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது.

வன காப்பகம்

பழவேற்காடு பழவேற்காடு பறவைகள் காப்பகத்தினுள் அமைந்துள்ளது. அக்டோபர் முதல் மார்ச்சு வரை இங்கு ஆயிரக்கணக்கான புலம்பெயர் பறவைகள் வருகின்றன.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. http://www.frontierlifeline.com/Expansion_plans.asp
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.