பன்றி (சீன சோதிடம்)

பன்றி சீன சோதிடத்தின் பன்னிரெண்டாவது மற்றும் கடைசிக் குறி ஆகும். 1935, 1947, 1959, 1971, 1983, 1995, 2007, 2019, 2031, 2043 ஆகிய வருடங்கள் பன்றி வருடம் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் அமைதி, வீரம் மற்றும் அறிவு தாகம் ஆகிய குனங்களை தன்னகத்தே கொண்டவர்களாக இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.

பெயர்க்காரணம்

முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய் ஆகியவற்றை தொடர்ந்து பன்றி பன்னிரெண்டாவதாக வந்தது. போட்டியின் இடையில் பசியின் காரணமாக உணவு அருந்திவிட்டு வந்தால், அதனால் பன்னிரெண்டாவது விலங்காகத்தான் வர முடிந்தது. இதனால் பன்றியை கடவுள் பன்னிரெண்டாவது வருடக்குறியாக அறிவித்தார்.

பன்றி பன்னிரெண்டாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.

இயல்புகள்

  
நேரம்மாலை 9:00 முதல் 11:00 வரை
உரிய திசைவடக்கு, வட மேற்கு
உரிய காலங்கள்இலையுதிர் காலம் (நவம்பர்)
நிலையான மூலகம்நீர்
யின்-யான்யின்
ஒத்துப்போகும் விலங்குகள்முயல், ஆடு
ஒத்துப்போகாத விலங்குகள்பாம்பு, குரங்கு, பன்றி


இராசி அம்சங்கள்

  
இராசி எண்கள்1, 3, 4, 5, 8, 16, 18, 34, 41, 48
இராசி நிறம்கருப்பு, ஊதா
இராசிக் கல்மாணிக்கம்

பன்றி வருடத்தைய பிரபலங்கள்

பன்றி வருடத்தில் உதயமான நாடுகள்

இதையும் பார்க்கவும்

உசாத்துணை

  • சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.