ஆடு (சீன சோதிடம்)
ஆடு சீன சோதிடத்தின் எட்டாவது குறி ஆகும். 1931, 1943, 1955, 1967, 1979, 1991, 2003, 2015, 2027, 2039 ஆகிய வருடங்கள் ஆடு வருடங்கள் ஆகும். இந்த வருடத்தில் பிறந்தவர்கள் இளகிய மனம் மற்றும் கூச்ச சுபாவம் கொண்டவர்களாகவும், சிறந்த படைப்பாளிகளாகவும் இருப்பார்கள் என்பது சீன சோதிடத்தின் கணிப்பு ஆகும்.

பெயர்க்காரணம்
முன்பு ஒரு காலத்தில் முதல் வருடக்குறியாக யார் வருவது என்பதில் விலங்குகளுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதற்கு தீர்வாக கடவுள் ஒரு நீச்சல் போட்டியை அறிவித்தார். இதில் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை ஆகியவை முதல் ஏழு இடங்களில் வந்தன. இவற்றிக்கு பிறகு ஆடு, குரங்கு, சேவல் ஆகிய மூன்றும் ஒன்றுக்கொண்டு உதவி செய்துகொண்டு அடுத்ததாக வந்தன. இதில் சேவல் ஒரு மரப்பலகையை கண்டுபித்து அதில் மற்ற மூன்று விலங்குகளையும் ஏற்றிக்கொண்டு வந்தது. இந்த பலகை ஆற்றின் இடையில் இருந்த புதர்களில் சிக்கிக்கொண்ட போதெல்லாம் குரங்கு மற்றும் ஆடு ஆகிய இரண்டும் அவற்றை விலக்கிவிட்ட படியே வந்தன. இவ்வாரு ஒற்றுமையுடன் ஒன்றாக வந்த இந்த விலங்குகலை வாழ்த்திய கடவுள் ஆட்டை எட்டாவது வருடக்குறியாகவும், குரங்கு மற்றும் சேவலை முறையே ஒன்பதாவது பத்தாவது வருடக்குறியாகவும் தெரிவு செய்தார்.
ஆடு எட்டாவது சீன சோதிட குறியாக குறிப்பிடப்படுவதின் காரணமாக, சீனாவில் கூறப்படும் கதை இது.
இயல்புகள்
நேரம் | மதியம் 1:00 முதல் 3:00 வரை |
உரிய திசை | தெற்கு, தென்மேற்கு |
உரிய காலங்கள் | கோடை காலம் (சூலை) |
நிலையான மூலகம் | நெருப்பு |
யின்-யான் | யின் |
ஒத்துப்போகும் விலங்குகள் | முயல், பன்றி, குதிரை |
ஒத்துப்போகாத விலங்குகள் | எலி, எருது |
இராசி அம்சங்கள்
இராசி எண்கள் | 3, 4, 5, 12, 34, 45, 54 |
இராசி நிறம் | மஞ்சள், வெளிர் பச்சை |
இராசிக் கல் | மரகதம் |
ஆடு வருடத்தைய பிரபலங்கள்
- அப்துல் கலாம்
- பில் கேட்சு
- விசய் மல்லையா
- வடலூர் வள்ளலார்
- விக்ரம் சாராபாய்
- பிரகாசு படுகோன்
- டி. கே. பட்டம்மாள்
- வாலி
- மாதுரி தீக்சித்
- போரிசு பெக்கர்
- ஆர்வின் ரைட்
- மைக்கேல் ஏச்சலோ
- மார்க் டிவைன்
- புரூசு வில்லிசு
- சேன் ஆசுடின்
இதையும் பார்க்கவும்
உசாத்துணை
- சீன விலங்கு ஜோதிடம் - சித்ரா சிவகுமார்
வெளி இணைப்புகள்
- Sheep/Ram Personality
- Ram Personality and Related Ram Links
- The Year of the Ram
- Sheep Astrology
- Sheep Horoscope
- Tarot.com profile
- Sheep/Goat compatibility page
- Chinese Zodiac