பச்சிலைப்பள்ளி பிரதேச சபை

பச்சிலைப்பள்ளி பிரதேச சபை (Pachchilaipalli Divisional Council) இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 167.75 சதுர மைல்கள். இதன் வடக்கிலும், கிழக்கிலும் யாழ்ப்பாண மாவட்டமும்; தெற்கில் கரைச்சி பிரதேச சபையும்; மேற்கில் யாழ்ப்பாண நீரேரியும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் 9 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 9 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

வட்டாரங்கள்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபைப் பகுதி 8 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]

வட்டாரங்கள்கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல.பெயர்இல.பெயர்
1முகமாலைKN91அரசங்கேணி
KN92இத்தாவில்
KN93முகமாலை
2கிளாலிKN89அல்லைப்பளை
KN94வேம்பொடுகேணி
KN95கிளாலி
3பளைKN87பளை நகரம்
KN88புலோப்பளை மேற்கு
KN90கச்சார்வெளி
4தம்பாகமம்KN86தம்பாகமம்
5முல்லையாடிKN84புலோப்பளை
KN85முல்லையாடி
6சோரன்பற்றுKN82சோரன்பற்று
KN83தர்மகேணி
7முகாவில்KN80முகாவில்
KN81மாசார்
8இயக்கச்சிKN78கோவில்வயல்
KN79இயக்கச்சி

தேர்தல் முடிவுகள்

1998 உள்ளாட்சித் தேர்தல்

29 சனவரி 1998 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[2][3]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 73146.15%5
 ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 37723.80%2
 ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 36222.85%2
 தமிழீழ விடுதலை இயக்கம் 1147.20%0
செல்லுபடியான வாக்குகள் 1,584100.00%9
செல்லாத வாக்குகள் 385
மொத்த வாக்குகள் 1,969
பதிவில் உள்ள வாக்காளர்கள் 7,463
வாக்களித்தோர் 26.38%

2011 உள்ளாட்சித் தேர்தல்

23 யூலை 2011 இல் இடம்பெற்ற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு * 1,65055.89%6
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி ** 1,18440.11%3
 ஐக்கிய தேசியக் கட்சி 1143.86%0
 மக்கள் விடுதலை முன்னணி 40.14%0
செல்லுபடியான வாக்குகள் 2,952100.00%9
செல்லாத வாக்குகள் 339
மொத்த வாக்குகள் 3,291
பதிவில் உள்ள வாக்காளர்கள் 7,116
வாக்களித்தோர் 46.25%
* ஈபிஆர்எல்எஃப் (சு), இதக, புளொட், டெலோ, தவிகூ ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.
** ஈபிடிபி, இசுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கியது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.