மன்னார் பிரதேச சபை

மன்னார் பிரதேச சபை (Mannar Divisional Council) இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள உள்ளூராட்சி அமைப்புக்களுள் ஒன்று ஆகும். மன்னார் நகரசபைப் பகுதி தவிர்ந்த மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் அடங்கும் பகுதிகள் இப்பிரதேச சபைக்குள் அடங்குகின்றன. இதன் மொத்தப் பரப்பளவு 189.35 சதுர மைல்கள். இதற்குள் தலைமன்னார்த் தீவின் பெரும் பகுதியும், தலைநிலத்தில் உள்ள உயிலங்குளம் பகுதியும் அடங்கியுள்ளன. தலைமன்னார்த் தீவின் தெற்கு பகுதியில் மன்னார் நகரசபையுடன் பொது எல்லையைக் கொண்டுள்ள ஒரு சிறு பகுதி தவிர ஏனைய பகுதிகள் கடலால் சூழப்பட்டுள்ளன. தலை நிலத்தில், இதன் வடக்கில் நீரேரியும்; கிழக்கில் மாந்தை மேற்கு பிரதேச சபையும்; தெற்கிலும், மேற்கிலும் நானாட்டான் பிரதேச சபையும் எல்லைகளாக உள்ளன. இச்சபைக்கான உறுப்பினர்களும், சபையின் தலைவரும் நேரடியாக மக்களால் தெரிவுசெய்யப்படுகின்றனர். மன்னார் பிரதேச சபையில் 9 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த 9 உறுப்பினர்களும் விகிதாசார பிரதிநிதித்துவ முறையில் இடம்பெறும் தேர்தல் ஊடாகத் தெரிவு செய்யப்படுகின்றனர்.

வட்டாரங்கள்

மன்னார் பிரதேச சபைப் பகுதி 10 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவ்வட்டாரங்களின் இலக்கம், பெயர், அவற்றில் அடங்கியுள்ள கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் பற்றிய விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம்.[1]

வட்டாரங்கள்கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
இல.பெயர்இல.பெயர்
1தலைமன்னார்MN48தலைமன்னார் வடக்கு
KN49தலைமன்னார் தெற்கு
KN52தலைமன்னார் தொடர்வண்டி நிலையம்
3தலைமன்னார்த்துறைMN50தலைமன்னார்த்துறை மேற்கு
MN51தலைமன்னார்த்துறை கிழக்கு
MN53கட்டுக்காரன் குடியிருப்பு
3துளுக்குடியிருப்புMN54துளுக்குடியிருப்பு
MN57பேசாலை வடக்கு
4பேசாலைMN55பேசாலை மேற்கு
MN56பேசாலை தெற்கு
5சிறுத்தோப்புMN58சிறுத்தோப்பு
MN59பெரியகரிசல்
MN60ஓலைத்தொடுவாய்
6புதுக்குடியிருப்புMN61புதுக்குடியிருப்பு
7எருக்கலம்பிட்டிMN63எருக்கலம்பிட்டி மேற்கு
MN64எருக்கலம்பிட்டி வடக்கு
MN64எருக்கலம்பிட்டி கிழக்கு
MN64எருக்கலம்பிட்டி தெற்கு
MN64எருக்கலம்பிட்டி மத்தி
8தாழ்வுப்பாடுMN62தோட்டவெளி
MN70தாழ்வுப்பாடு
9தாராபுரம்MN68தாராபுரம் மேற்கு
MN69தாராபுரம் கிழக்கு
10உயிலங்குளம்MN86திருக்கேதீஸ்வரம்
MN87பெரியநாவற்குளம்
MN88நாகதாழ்வு
MN89நீலசேனை
MN90கள்ளிகட்டைக்காடு
MN91புதுக்கமம்
MN92உயிலங்குளம்
MN93மாதோட்டம்
MN94வண்ணமோட்டை
MN95உயிர்த்தராயன்குளம்
MN96பரப்பாங்கண்டல்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.