வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும். இது மானிப்பாய் தேர்தல் தொகுதியில் அமைந்துள்ளது. இது வடக்கில் வங்காள விரிகுடாவையும், வட கிழக்கில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையையும், கிழக்கில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையையும், தென் கிழக்கில் நல்லூர் பிரதேச சபையையும், தெற்கில் யாழ்ப்பாண மாநகர சபையையும், தென் மேற்கில் யாழ்ப்பாணக் கடல் நீரேரியையும், மேற்கில் வலிகாமம் மேற்கு பிரதேச சபையையும் எல்லைகளாகக் கொண்டு ஒரு நீள் சதுர வடிவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுமார் 55 சதுர கிலோ மீட்டர்களாகும்.

இறுதியாக திருத்தப்பட்ட 2010 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின் படி 31,022 வாக்காளர்களையும், மொத்தம் 16 பிரதேச சபை உறுப்பினர்களையும் கொண்டுள்ளது.

2011 தேர்தல்கள்

1998 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதேச சபை தேர்தலின் பின் நாட்டின் போர்ச்சூழலால் உள்ளூராட்சித்தேர்தல்கள் இடம்பெறவில்லை. பின்னர் மார்ச் 2011 இல் தேர்தல் நடைபெறுமென தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆயினும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் தேர்தல் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் அக்கட்சி நீதிமன்றில் வழக்கு தொடுத்தது. இதனால் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன. பின்னர் அக்கட்சியின் வேட்புமனுக்கள் நீதிமன்றால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து 2011 சூலை 23 அன்று தேர்தல்கள் இடம்பெற்றது.

இதன் முடிவுகள் பின்வருமாறு அமைந்தன.

கட்சி வாக்குகள் வீதம் இடங்கள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11,954 72.02% 12
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 4,428 26.68% 4
ஐக்கிய தேசியக் கட்சி 216 1.3% 0
  • மொத்த வாக்குகள்  :31,022
  • அளிக்கப்பட்டவை  :18,369
  • நிரகரிக்கப்பட்டவை  : 1,771
  • செல்லுபடியானவை : 16,598

இதன்படி இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பட்டியலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 12 பேர் விருப்பு வாக்குகள் அடிப்படையில் பிரதேச சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களின் விபரம்
  1. அ. ஜெபநேசன், 2,809 வாக்குகள்
  2. ச. சிவகுமாரன், 2,337 வாக்குகள்
  3. ஆ. சி. கணேசவேல், 2,314 வாக்குகள்
  4. வி. சுப்பிரமனியம், 2,226 வாக்குகள்
  5. சி. மகேந்திரன், 2,120 வாக்குகள்
  6. க. கௌரிகாந்தன், 2,045 வாக்குகள்
  7. சு. பரமகுரு, 1,672 வாக்குகள்
  8. செ. சிவபாதம், 1,491 வாக்குகள்
  9. அ. ஜோன் ஜிப்ரிக்கோ, 1,427 வாக்குகள்
  10. த. குமணன், 1,121 வாக்குகள்
  11. க. பொன்ன, 1,116 வாக்குகள்
  12. ம. சூசைப்பிள்ளை, 1,046 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் வெற்றி பெற்றோர்
  1. வெலிச்சோர் அன்ரன் ஜோன்சன், 2,707 வாக்குகள்
  2. ஜே.செல்வராசா, 693 வாக்குகள்
  3. க. நடராசா, 605 வாக்குகள்
  4. பா. நாகேந்திரம், 454 வாக்குகள்

அ. ஜெபநேசன் பிரதேச சபைத் தலைவராகவும், ஓய்வுபெற்ற கிராம சேவகர் ச. சிவகுமாரன் உதவித் தலைவராகவும் கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களது தெரிவு 30.07.2011 அன்று இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட விசேட வர்த்த மானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.