பகாங் ஆறு
பகாங் ஆறு (மலாய்: சுங்கை பகாங்) மலேசியாவின் பகாங் மாநிலத்தின் வழியாகப் பாயும் ஆறு ஆகும். 459 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த ஆறு மலாய் தீபகற்பத்தின் மிக நீளமான ஆறு ஆகும். இந்த ஆறானது, தித்திவாங்சா மலைத்தொடரில் உள்ள ஜிலாய் மற்றும் டெம்பெலிங் ஆறுகளின் சந்தியில் உற்பத்தியாகி தென்சீனக் கடலில் கலக்கிறது.இந்த ஆற்றின் வடிநிலப்பகுதியின் பரப்பளவானது 29,300 சதுர கிலோமீட்டர்களாகும். இந்தப் பரப்பில் 27,000 சதுர கிலோமீட்டர் அளவிற்கு பகாங் மாகாணத்திலேயே அமைந்துள்ளது. [1]
நீரேந்துப் பகுதி நாடுகள் | பகாங், மலேசியா |
நீளம் | 459 km (285 mi) |

ஆற்றின் போக்கு
தித்திவாங்சா மலைத்தொடரின் மேல் சரிவுகளில் உள்ள கேமரன் மலையிலிருந்து ஜிலாய் நதி தென்கிழக்கு திசை நோக்கி பாய்கிறது. இந்த ஆறானது, டெம்பெலிங் ஆற்றில் சேர்வதற்கு முன்பாக டெங்கு மற்றும் கோலா லிப்பிஸ் ஆகியவை வழியாக பாய்கிறது. டெம்பெலிங் ஆறானது பகாங் மற்றும் திராங்கானு மாநில எல்லையில் உள்ள உலு டெம்பெலிங்கில் தொடங்கி தென்கிழக்கு திசையில் நகர்ந்து கோலா தாகான் வழியாகக் கடந்து செல்கிறது. பகாங் ஆறானது, தெற்கு திசையில் கடந்து ஜெராண்டுட் பெரி, கோலா க்ராவ், கெராடு மற்றும் தெமர்லோ ஆகிய பகுதிகளைக் கடந்து செல்கிறது. மெங்காராக் ஆற்றில் இந்த ஆறானது வடகிழக்கு நோக்கி திரும்பி செனார் வழியாகப் பாய்ந்து பின்னர் லுபுக்கி பாகு மற்றும் லெபார் என்ற இடத்தில் கிழக்கு திசை நோக்கி திரும்புகிறது. அதன் பின் வெள்ளப்பெருக்குச் சமவெளியான பாலோன் இனாய், பெக்கான் மாவட்டம் மற்றும் கோலா பகாங் ஆகிய நிலப்பரப்புகளைக் கடந்து தென்சீனக் கடலில் கலக்கிறது.[2]
இந்த ஆறு உற்பத்தியாகும் இடத்திலிருந்து கேமரன் பீடபூமி, லிபிஸ், ஜெரான்டட், டெமெர்லோ, பெரா, மரன் மற்றும் பெக்கான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பகாங் மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களையும் கடந்து செல்கிறது. ஜெலாய் ஆற்றின் கிளை நதியான லிபிஸ் ஆறுானது, பகாங் மற்றும் பெராக் மாகண எல்லையில் உள்ள ராவ்ப் மாவட்டத்தில் உலு சங்கையில் உற்பத்தியாகிறது. இந்த ஆறு ஜெலாய் ஆறு முடிவடையயும் இடத்தில் கோலா லிபிஸ் எனுமிடத்தில் தனது பயணத்தை நிறைவு செய்கிறது. பகாங் ஆற்றின் கிளை நதியான செமாண்டன் ஆறு பென்டாங் மாவட்டத்தில் தனது நகர்வைத் தொடங்கி பகாங் ஆறு மற்றும் செமாண்டன் ஆறு சங்கமிக்கும் இடமான கோலா செமாண்டனில் முடிவடைகிறது. பகாங் மாநிலத்தில் பகாங் ஆறு பாய்ந்து வளப்படுத்தாத ஒரே ஒரு மாவட்டம் ரோம்பின் ஆகும்.
வரலாறு
பகாங் ஆற்றின் கரையோரங்களில் 1400 ஆம் ஆண்டளவிலேயே போர்வீரர்களும், கடலோடிகளும் கடல்சார் தென்கிழக்காசியா, அச்சே, ரியாவு, பலெம்பாங் மற்றும் சுலாவெசி போன்ற இடங்களில் குடியேறத் தொடங்கினர்.பகாங் நதி மற்றும் நதியோரமாகக் குடியிருந்த உள்ளூர்வாசிகள் பற்றிய தொடக்க கால வரலாற்றுப்பதிவுகள் மலாய் அன்னல்சு மற்றும் இக்காயத் முன்சி அப்துல்லா ஆகியவற்றில் காணப்பட்டன.
தொடக்க கால நீர்வழிப் போக்குவரத்தில் பங்கு
பகாங் ஆறு மற்றும் மியுவார் ஆறு ஆகியவை செர்டிங் ஆறானது பகாங் ஆற்றின் கிளை ஆறான பெரா ஆற்றுக்குள் ஊடுருவிக் கலப்பது போல நெகிரி செம்பிலானில் உள்ள ஜெம்பால் எனுமிடத்திற்கருகில் கிட்டத்தட்ட இணைகின்றன. ஜெம்பால் ஆறும் மியுவார் ஆற்றுக்குள் பாய்ந்து கலக்கிறது. பெக்கானில் உள்ள கோலா பகாங் அல்லது கோலா லிப்பிஸ் வரை வணிகப் படகுகளல் மியுவார் ஆற்றில் தங்கள் பயணத்தைத் தொடர முடிகிறது.
நகரங்கள் மற்றும் பாலங்கள்
ஜெலாய் மற்றும் டெம்ப்ளிங் ஆறுகள் சங்கமிக்கும் இடத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ஜெரான்டுட் அமைந்துள்ளது. டெமெர்லோவானது செமன்டான் ஆறு மற்றும் பகாங் ஆறு சங்கமிக்கும் இடத்திற்கருகிறல் உள்ளது. பகாங்கின் சிறப்பு வாய்ந்த நகரான பெக்கானானது ஆற்றின் சமவெளியில் ஆற்றின் தொடக்க இடத்திற்கருகில் தெற்கு கரையோரமாக அமைந்துள்ளது.
பகாங் ஆற்றின் மீது 7 பாலங்கள் குறுக்காக கட்டப்பட்டுள்ளன. அவை பெக்கானில் உள்ள அபுபக்கர் பாலம்,பாலோ இனாயில் டுன் ரசாக் நெடுஞ்சாலையில் உள்ள பாலோ இனாய் பாலம், செனாரில் உள்ள செனார் பாலம், டெமெர்லோவில் உள்ள டெமெர்லோ பாலம்,சாங்காங்கில் உள்ள கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையில் செமன்டான் பாலம், கோலா கிராவில் உள்ள சுல்தான் அகமது சா பாலம் மற்றும் ஜெனார்டுட் பெரியில் உள்ள சுல்தான் அப்துல்லா பாலம் ஆகியவையாகும்.
பகாங் ஆற்றங்கரையில் உள்ள பெரா மாவட்டம் மட்டுமே ஆற்றின் குறுக்காக எந்த ஒரு பாலத்தையும் கொண்டிராத மாவட்டம் ஆகும்.
மேற்கோள்கள்
- "Pahang River". Bereau of Metereology. பார்த்த நாள் 23 நவம்பர் 2017.
- "Pahang River". scribd. பார்த்த நாள் 23 நவம்பர் 2017.