ஜெராண்டுட்

ஜெராண்டுட் (ஆங்கிலம்: Jerantut); சீனம்: 而连突) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில் உள்ள ஒரு முக்கியமான நகரம் ஆகும். இந்த நகரம் அமைந்து இருக்கும் மாவட்டத்திற்கும் ஜெராண்டுட் என்று பெயர். ஜெராண்டுட் நகரம் கோலாலம்பூரில் இருந்து 220 கி.மீ., குவாந்தான் நகரில் இருந்து 180 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. ஜெராண்டுட் மாவட்டத்தின் தலைப்பட்டணமாகவும் விளங்குகிறது.

Jerantut
ஜெராண்டுட்
மாவட்டம்
மாவட்டத் தலைநகரம்

சின்னம்
நாடு மலேசியா
மலேசியா
மாவட்டம்
உருவாக்கம்1914
அரசு
  வகைநகராண்மைக் கழ்கம்
  மாவட்ட அதிகாரிதுவான் அலி ஷாபானா பின் சபாருடின் SIMP.,AMP. (2014)
  நாடாளுமன்ற உறுப்பினர்துவான் அகமட் மாஸ்லான்
பரப்பளவு
  மொத்தம்7,561
மக்கள்தொகை (2004)
  மொத்தம்90,000
  அடர்த்தி12
நேர வலயம்MST (ஒசநே+8)
  கோடை (பசேநே)பயன்பாடு இல்லை 3° 56′ 0″ North, 102° 22′ 0″ East (ஒசநே)
அஞ்சல் குறியீடு27xxx
தொலைபேசி குறியீடு08
இணையதளம்http://www.mdjerantut.gov.my/

பகாங் மாநிலத்தின் வடக்கே அமைந்து இருக்கும் ஜெராண்டுட், தேசிய வனப்பூங்காவான தாமான் நெகாராவின் நுழைவாயில் பட்டணம் என்றும் அழைக்கப் படுவது உண்டு. தாமான் நெகாராவிற்குச் செல்வதற்கு முன்னர், பெரும்பாலான வெளிநாட்டுப் பயணிகள் இங்கு தங்கிச் செல்வது உண்டு.[1]

பகாங் மாநிலத்தின் ஆகப் பெரிய மாவட்டமான ஜெராண்டுட்டின் வட எல்லையில் கிளாந்தான், திரங்கானு மாநிலங்கள் உள்ளன. தெற்கே பகாங் மாநிலத்தின் தெமெர்லோ, மாரான் மாவட்டங்கள். மேற்கே லிப்பிஸ், ரவுப் மாவட்டங்கள். கிழக்கே குவாந்தான் மாவட்டம். ஜெராண்டுட் மாவட்டத்தில் தான் தெம்பிலிங் ஆறு ஓடுகிறது.

இந்த ஆற்றின் வழியாக தேசிய வனப்பூங்காவான தாமான் நெகாராவைச் சென்று அடையலாம். தெம்பிலிங் ஆறும், ஜெலாய் ஆறும் இணைந்துதான், தீபகற்ப மலேசியாவின் மிகப் பெரிய பகாங் நதியை உருவாக்குகின்றன. பகாங் நதி தென்சீனக் கடலில் கலக்கிறது.

வரலாறு

பகாங் மாநிலத்தின் முதல் அரசரான சுல்தான் அகமட் வான் அகமட் காலத்திலேயே, ஜெராண்டுட் எனும் பெயர் புழக்கத்தில் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.[2]

ஜெராண்டுட்டின் பழைய பெயர் சிம்பாங் அம்பாட் (Simpang Empat). அதன் பின்னர், பிரித்தானியர்களின் ஆட்சி காலத்தில் ‘ஜங்சன் 4’ (Junction 4) என்று அழைக்கப்பட்டது. பகாங் ஆற்றின் ஜெராண்டுட் பகுதியில் நீர் வீரியம் ஏற்படுவது உண்டு. மீன் பிடிப்பவர்கள் அதை ‘அவாங் துட்’ என்று அழைத்தார்கள். அதுவே, காலப் போக்கில் ஜெராண்டுட் என்று பெயர் பெற்றது.[3]

அமைவு

ஜெராண்டுட் நகரம், மலேசியாவின் முதல் தேசிய வனப்பூங்காவான தாமான் நெகாராவின் நுழைவாயில் நகரமாக அமைகின்றது. கோத்தா கெலாங்கி குகைகள் ஜெராண்டுட் நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் இருக்கின்றன. இந்தக் குகைகள், தொல்பொருளியல் துறையினர் ஆய்வு செய்யும் இடமாக இருக்கின்றது.

ஜெராண்டுட் மாவட்டம் பத்து துணை மாவட்டங்களைக் கொண்டது. 125 கிராமங்கள் உள்ளன.[4] சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடங்களாக லதா மெராவுங் நீர்வீழ்ச்சி, மலேசியப் பழங்குடியினர் குடியிருப்புகள், குனோங் தகான், குனோங் பெனோம், ராபிள்சியா பாதுகாப்பு மையம் (ஆங்கிலம்: Rafflesia Conservation Center) போன்றவை அமைகின்றன. பகாங் மாநிலத்தின் பெரிய மாவட்டமான ஜெராண்டுட், அண்மைய காலங்களில் மிகத் துரிதமான வளர்ச்சியைக் கண்டு வருகிறது.

துணை மாவட்டங்கள்

ஜெராண்டுட் மாவட்டத்தில் பத்து துணை மாவட்டங்கள் உள்ளன.

  • உலு தெம்பிலிங் - Hulu Tembeling (416,897 ஹெக்டர்)
  • தெம்பிலிங் தெங்ஙா - Tembeling Tengah (135,718 ஹெக்டர்)
  • புலாவ் தாவர் - Pulau Tawar (84,435 ஹெக்டர்)
  • தெபிங் திங்கி - Tebing Tinggi (33,400 ஹெக்டர்)
  • உலு செக்கா - Hulu Cheka (29,000 ஹெக்டர்)
  • பெடா - Pedah (24,600 ஹெக்டர்)
  • புராவ் - Burau (12,120 ஹெக்டர்)
  • கோலா தெம்பிலிங் - Kuala Tembeling (10,778 ஹெக்டர்)
  • தே - Teh (9,563 ஹெக்டர்)
  • கெலோலா - Kelola (6,248 ஹெக்டர்)

அரசியல்

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி


நாடாளுமன்றம்தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர்கட்சி
P81 ஜெராண்டுட்செகு அகமட் நாஸ்லான்பாரிசான் நேசனல்


மாநிலச் சட்டமன்றம்


நாடாளுமன்றம்மாநிலச் சட்டமன்றம்தொகுதிசட்டமன்ற உறுப்பினர்கட்சி
P81 N9தகான்வான் அமீசா வான் அப்துல் ரசாக்பாரிசான் நேசனல்
P81 N10டாமாக்லாவ் லீபாரிசான் நேசனல்
P81 N11புலாவ் தாவார்அகமட் சுக்ரி இஸ்மாயில்பாரிசான் நேசனல்


ஜெராண்டுட் தமிழ்ப்பள்ளி

ஜெராண்டுட் தேசிய வகை தமிழ்ப்பள்ளி {மலாய்: Sekolah Jenis Kebangsaan (Tamil), ஜெராண்டுட் நகரத்தின் ஜாலான் பெந்தாவில் அமைந்து உள்ளது. 14 ஆசிரியர்கள் பணிபுரியும் இப்பள்ளியில் 182 மாணவர்கள் பயில்கின்றனர். 96 ஆண்கள். 86 பெண்கள்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.