பெக்கான்

பெக்கான் (Pekan) மலேசியா, பகாங் மாநிலத்தின் அரச நகரம். பகாங் மாநிலத்தின் தலைநகரமான குவாந்தானில் இருந்து தென்கிழக்காக 45 கி.மீ. தொலைவில் உள்ளது. பெக்கான் நகரத்தின் பெயர் Bunga Pekan எனும் மலரின் பெயரில் இருந்து வந்தது.[1] இங்கு பகாங் சுல்தானின் அரண்மனையும், அரச பள்ளிவாசலும் உள்ளன. இந்த நகரம் மலேசியாவின் இரு பிரதமர்களை உருவாக்கித் தந்த பெருமையைப் பெறுகிறது.

பெக்கான்
மாவட்டம்
நாடு மலேசியா
பகாங் பகாங் டாருல் மாக்மூர்
தொகுதிபெக்கான்
அரசு
  மாவட்ட ஆளுநர்டத்தோ முகமட் பாட்சிலி பின் முகமட் கெனாலி
பரப்பளவு
  மொத்தம்3
மக்கள்தொகை (2006)
  மொத்தம்120
  அடர்த்தி31.53
அஞ்சல் குறியீடு26600
தொலைபேசிக் குறியீடு0609
வாகனப் பதிவுC
மலாயா கூட்டரசு1895
ஜப்பானியர் ஆட்சி1942
மலாயா கூட்டமைப்பு1948
இணையதளம்http://www.mdpekan.gov.my

மலேசியாவின் இரண்டாவது பிரதமர் துன் அப்துல் ரசாக் அவர்களும்,[2] இப்போதைய பிரதமர் நஜீப் துன் ரசாக்[3] அவர்களும் இந்த நகரில் பிறந்தவர்கள். பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் தகப்பனார்தான் துன் அப்துல் ரசாக். பெக்கான் நகரின் பழைய பெயர் இந்திராபுரா.[4] இந்தியாவில் இருந்து வந்த இந்திய வணிகர்கள் இந்திராபுரா என்று அழைத்தனர்.[5]

வரலாறு

முன்பு காலத்தில் பகாங் ஆற்றின் இரு மருங்கிலும் பெக்கான் மலர்கள் நிறைய பூத்துக் குலுங்கின. அந்த மலர்களின் பெயர் பெக்கான் நகருக்குச் சூட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த நகரம் 17ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டாலும், இதுவரையில் சரியான சான்றுகள் கிடைக்கவில்லை.

ஆனால், 18ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் உள்ள சுலாவாசி தீவில் இருந்து மக்கள் பெக்கான் நகரில் குடியேறியதாக சான்றுகள் உள்ளன. அப்படி குடியேறிய குடும்பங்களில் ஒன்றுதான் முன்னாள் பிரதமர் துன் அப்துல் ரசாக்கின் குடும்பம் ஆகும்.

பெக்கான் நாடாளுமன்றத் தொகுதி

பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக பிரதமர் நஜீப் துன் ரசாக் இருக்கிறார்.

நாடாளுமன்றம்தொகுதிநாடாளுமன்ற உறுப்பினர்கட்சி
P85 பெக்கான்நஜீப் துன் ரசாக்தேசிய முன்னணி

பெக்கான் சட்டமன்றத் தொகுதிகள்

பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.

நாடாளுமன்றம்மாநிலம்தொகுதிசட்டமன்ற உறுப்பினர்கட்சி
P85 N20புலாவ் மானிஸ்கைருடின் முகமட்தேசிய முன்னணி
P85 N21பெராமு ஜெயாஇப்ராஹிம் அகமட் முகமட்தேசிய முன்னணி
P85 N22பேபார்இஷாக் முகமட்தேசிய முன்னணி
P85 N23சினிஅபு பாக்கார் ஹருண்தேசிய முன்னணி

துணை மாவட்டங்கள்

பெக்கான் மாவட்டத்தில் 11 துணை மாவட்டங்கள் அல்லது முக்கிம்கள் உள்ளன.

  • பேபார் (176,400 ஹெக்டர்)
  • பென்யோர் (73,600 ஹெக்டர்)
  • லேபார் (47,100 ஹெக்டர்)
  • புலாவ் மானிஸ் (22,000 ஹெக்டர்)
  • பெக்கான் (17,300 ஹெக்டர்) (தலைநகர்)
  • தெமாய் (12,700 ஹெக்டர்)
  • காஞ்சோங் (11,4000 ஹெக்டர்)
  • லாங்கார் (9,600 ஹெக்டர்)
  • கோலா பகாங் (3,900 ஹெக்டர்)
  • பகாங் துவா (3,900 ஹெக்டர்)
  • புலாவ் ரூசா (2,600 ஹெக்டர்)

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.