அச்சே

அச்சே என்னும் சிறப்புப் பகுதி, இந்தோனேசியாவுக்கு சொந்தமானது. இதன் தலைநகரம் பாந்தா ஆச்சே ஆகும். இது இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் அமைந்துள்ளது.

அச்சே தாருஸ்ஸலாம்
Aceh Darussalam
اچيه دارالسلام
சிறப்புப் பகுதி
Baiturrahman Grand Mosque in Banda Aceh

கொடி

சின்னம்
குறிக்கோளுரை: "பஞ்சசீதா"(சமசுகிருதம்)
"ஐந்து குறிக்கோள்கள்"
நாடுஇந்தோனேசியா
தலைநகரம்பாந்தா ஆச்சே
அரசு
  ஆளுநர்சைனி அப்துல்லா (ஆச்சே கட்சி)
  துணை ஆளுநர்முசாகிர் மனாப்
பரப்பளவு
  மொத்தம்58,376
மக்கள்தொகை (2014)[1]
  மொத்தம்4
  அடர்த்தி81
மக்கள்
  இனக் குழுக்கள்70.65% அச்சே இனம்
8.94% சாவக இனம்
7.22% காயோ இனம்
3.29% பலாக்
2.13% அலாஸ் இனம்
1.49% சிமுலு இனம்
1.40 அனெக் ஜாமீ இனம்
1.11% மலாய்
1.04% சிங்கில் இனம்
0.74% மினாங்கபாவு மக்கள்[2]
  சமயம்98.19% இசுலாம் (அதிகாரப்பூர்வமானது)
  மொழிகள்அச்சே மொழி, இந்தோனேசிய மொழி (அலுவல்)
நேர வலயம்நேரம் (UTC+7)
இணையதளம்www.acehprov.go.id

இங்கு பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் அச்சே இன மக்கள் ஆவர். இது இயற்கை வளங்கள் நிறைந்த பகுதியாகும். இங்கு பாறை எண்ணெய், இயற்கை எரிவளி ஆகியன கிடைக்கின்றன. உலகிலேயே அதிய எரிவளி கிடைக்கும் இடங்களில் இது முன்னணியில் உள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது மதப் பழமைவாதக் கொள்கையுடைய மக்கள் அதிகம் வசிக்கு பகுதியாகும்.[3]

அரசு

இந்த பகுதி மாகாணமாக கருதப்படாமல், சிறப்பு ஆட்சிப்பகுதியாக கருதப்படுகிறது. எனவே, மற்ற பகுதிகளைக் காட்டிலும்,அதிக தன்னாட்சியை கொண்டது.

ஆட்சிப் பிரிவுகள்

இந்த சிறப்புப் பதினெட்டு உட்பிரிவுகளாகவும், ஐந்து நகரங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெரிய நகரமான பாந்தா அச்சே என்னும் நகரமே இதன் தலைநகரம் ஆகும்.[4][1] சபாங், பண்டா அச்சே, அச்சே, அச்சே பெசார், பிடீ, பிடீ ஜாயா, பிரியூன், மத்திய அச்சே, பெனேர் மெரியா, வடக்கு அச்சே, லொக்சியுமவே, கிழக்கு அச்சே, லங்சா, அச்சே டஹ்மிஆங், காயோ லூவேஸ், தென்மத்திய ஆச்சே, சுபுலுஸ்ஸலாம், அச்சே சிங்கில், சிமியுலே, தெற்கு அச்சே, தென்மேற்கு அச்சே, நகன் ராயா, மேற்கு அச்சே, அச்சே ஜாயா ஆகியன.

பொருளாதாரம்

2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியின் தாக்கத்தால் சீரழிவு ஏற்பட்டு, இந்த பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த பகுதி சுனாமி ஏற்பட்ட மையப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் கிட்டத்தட்ட 170,000 மக்கள் இறந்தனர். ஒரு வருடத்திற்கு பின்னரும் பலர் வீடுகளின்றி முகாம்களில் தங்கியிருந்தனர்.[5] இங்கு வாழும் மக்களில் பலர் வறுமைக்கோட்டுக்கு கீழான வாழ்க்கை நிலையை கொண்டுள்ளனர்.[6] இந்த பகுதியை மறுசீரமைக்க இந்தோனேசிய அரசு ஒரு குழுவை அமைத்தது. பன்னாட்டு நிறுவனங்கள், அரசு ஆகியவற்றுடன் மக்களும் தங்கள் இருப்பிடங்களை மீளக் கட்டுவிக்கும் பணியை தொடங்கினர். இங்கு சுனாமி நினைவாக அருங்காட்சியகம் ஒன்றும் அமைக்கப்பட்டது.[7]

சுற்றுச்சுழலும் உயிரிகளும்

இங்கு பல வகையான உயிரினங்கள் வாழ்கின்றன.[8] இங்கு சுமாத்திரா காண்டா மிருகங்கள், சுமாத்திராப் புலி, ஒராங்குட்டான், சுமாத்திரா யானை ஆகிய அரிய உயிரினங்கள் வாழ்கின்றன.[8] இங்கு 460 சுமாத்திரா யானைகள் வசிப்பதாக 2014ஆம் ஆண்டின் கணக்கெடுப்பு தெரிவிக்கின்றது.[9] 1970 ஆம் ஆண்டு முதலே இந்த பகுதியில் காடழிப்பு நடந்து வருகிறது.[10]

பண்பாடு

இங்கு அச்சே இன மக்கள், காயோ இன மக்கள், அலாஸ் இன மக்கள், மலாய் மக்கள் உள்ளிட்டோர் வசிக்கின்றனர்.[11]

இங்கு வாழும் மக்கள் அச்சே மொழியில் பேசுகின்றனர். இது சாமிக் மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழி. இந்த மொழியுடன் தொடர்புடைய மொழிகள் வியட்நாமிலும், கம்போடியாவிலும் வாழும் மக்களால் பேசப்படுகின்றன. இந்த மொழி மலாய் மொழிக் குடும்படுத்துடனும் தொடர்புடையது. இந்த மொழியில் மலாய், அரபு மொழிகளின் தாக்கத்தை உணர முடியும். இந்த மொழி ஜாவி எழுத்துகளில் எழுதப்படுகிறது.

சமயம்

இங்கு வாழும் மக்களில் 98 சதவீதம் பேர் இசுலாமிய சமயத்தை பின்பற்றுகின்றனர். 50,300 மக்கள் புரொட்டஸ்தானத்தையும், 3,310 மக்கள் கத்தோலிக்கத்தையும் பின்பற்றுகின்றனர்.[12]

இணைப்புகள்

சான்றுகள்

  1. http://www.depkes.go.id/downloads/Penduduk%20Kab%20Kota%20Umur%20Tunggal%202014.pdf Estimasi Penduduk Menurut Umur Tunggal Dan Jenis Kelamin 2014 Kementerian Kesehatan
  2. Aris Ananta, Evi Nurvidya Arifin, M. Sairi Hasbullah, Nur Budi Handayani, dan Agus Pramono (2015). Demography of Indonesia’s Ethnicity. Institute of Southeast Asian Studies dan BPS – Statistics Indonesia.
  3. How An Escape Artist Became Aceh's Governor, டைம் (இதழ்), 15 February 2007
  4. Biro Pusat Statistik, Jakarta, 2011.
  5. Jumlah penduduk Aceh 4.486.570 jiwa
  6. Edward Aspinall, Ben Hillman, and Peter McCawley, Governance and capacity-building in post-crisis Aceh', a report by Australian National University Enterprise, Canberra, for UNDP, Jakarta, 2012.
  7. Indonesia Opens Tsunami Museum. The Irrawaddy. March–April 2009. p. 3
  8. Simanjuntak, Hotli and Sangaji, Ruslan (20 May 2013). "Scientists urged to stand up for Aceh's biodiversity". The Jakarta Post. http://www.thejakartapost.com/news/2013/03/20/sciencists-urged-stand-aceh-s-biodiversity.html.
  9. "Gajah Sumatera Hanya Tersisa 460 Ekor di Aceh" (19 August 2014).
  10. McGregor, Andrew (2010). "Green and REDD? Towards a Political Ecology of Deforestation in Aceh, Indonesia". Human Geography 3 (2): 21–34.
  11. http://www.ari.nus.edu.sg/docs/wps/wps05_035.pdf
  12. "Regent orders churches closed, destroyed in Aceh". பார்த்த நாள் 13 June 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.