மினாங்கபாவு மக்கள்
மினாங்கபாவ் மக்கள் இந்தோனேசியாவின் மேற்கு சுமத்திராவிலுள்ள மினாங்கபாவ் பெருநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
- மினாங்கபாவு மொழி, மினாங்கபாவு பெருநிலம் என்ற கட்டுரைகளும் உள்ளன.
| ||||||||||||||||
மொத்த மக்கள்தொகை | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
(circa 7 மில்லியன்) | ||||||||||||||||
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | ||||||||||||||||
இந்தோனேசியா (2010 கணக்கெடுப்பு) | 5,530,000[1] | |||||||||||||||
ஜகார்த்தா (2010 கணக்கெடுப்பு) | 500,000[2] | |||||||||||||||
மலேசியா | 50,000 - 80.000[3] | |||||||||||||||
மொழி(கள்) | ||||||||||||||||
மினாங்கபாவ் மொழி, மலாய் மொழி | ||||||||||||||||
சமயங்கள் | ||||||||||||||||
இஸ்லாம் | ||||||||||||||||
தொடர்புள்ள இனக்குழுக்கள் | ||||||||||||||||
மலாய் மக்கள் |
இவர்களின் கலாசாரம் தாய்வழி மரபைச் சேர்ந்தது (Matrilineal). பெண்களே ஒரு குடும்பத்தின் தலைவருக்குரிய தகுதியைப் பெறுகிறார்கள். சொத்துடைமையும் நிலவுடைமையும் ஒரு தாயிடம் இருந்து ஒரு மகளிடம் போய்ச் சேர்கிறது. அதே சமயத்தில், அரசியல் சமய தொடர்பான காரியங்களுக்கு ஆண்கள் பொறுப்பு வகிக்கிறார்கள்.
இவர்கலின் இத்தகைய கலாசார மரபை அடாட் பெர்பாத்தே (Adat Perpatih) என்று மலேசியாவில் அழைக்கிறார்கள். இந்தோனேசியாவில் லாரே புடி கானியாகோ (Lareh Bodi Caniago) என்று அழைக்கிறார்கள். மேற்கு சுமத்திராவில் மட்டும், 40 இலட்சம் மினாங்கபாவ் மக்கள் வாழ்கின்றனர். இந்தோனேசியாவின் மற்ற பகுதிகளிலும், மலேசியாவிலும் ஏறக்குறைய 30 இலட்சம் மினாங்கபாவ் மக்கள் வாழ்கின்றனர்.
சொற்பிறப்பியல்
மெனாங் கெர்பாவ் எனும் சொற்கள் திரிந்து மினாங்கபாவ் ஆனது. மினாங்கபாவ் என்பது மினாங், கபாவ் ஆகிய சொற்களில் இருந்து வந்தது.[4][5] மெனாங் (Menang) என்றால் வெற்றி. கெர்பாவ் (Kerbau) என்றால் எருது.[6] வெற்றி பெறும் எருது என்று பொருள் படுகிறது.
புராணக் கதை
மினாங்கபாவ் எனும் சொல் எப்படி உருவானது என்பதற்கு ஒரு புராணக் கதையும் உண்டு. மினாங்கபாவ் மக்களுக்கும் அண்டை மாநிலத்தின் இளவரசருக்கும் எல்லைத் தகராறு. இரண்டு எருதுகளை மோத விட்டால் தகராறு தீர்க்கப்படலாம் என்று மினாங்கபாவ் மக்கள் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தார்கள். அண்டை மாநிலத்தின் இளவரசரும் ஒப்புக் கொண்டார்.[7]
அண்டை மாநிலத்தின் இளவரசர் ஒரு பெரிய திடகாத்திரமான எருதைக் கொண்டு வந்தார். மினாங்கபாவ் மக்கள் பசியால் வாடி நின்ற ஓர் எருது கன்றுக் குட்டியைக் கொண்டு வந்தனர். வயற்காட்டில் பெரிய எருதைப் பார்த்த எருது கன்றுக் குட்டி, பால் குடிப்பதற்காக அதை நோக்கி ஓடியது. சின்னக் கன்றுக் குட்டி தானே என்று பெரிய எருது அசட்டையாக இருந்து விட்டது.[7]
பெரிய எருதின் மடியில் பால் குடிக்க முயற்சி செய்த போது, கன்றுக் குட்டியின் கூரிய கொம்புகள் பாய்ந்து பெரிய எருமை இறந்து போனது. அந்த வகையில் மினாங்கபாவ் மக்கள் வெற்றி பெற்றனர். எல்லைத் தகராறும் தீர்ந்து போனது.[7]
வரலாறு
14-ஆம் நூற்றாண்டில், ஜாவாவை ஆட்சி செய்த சிங்காசாரி, மஜபாகித் பேரரசுகளுடன் நட்புறவு கொண்டிருந்த ஆதித்யவர்மன் என்பவர் மினாங்கபாவ் பேரரசைத் தோற்றுவித்தார்.[8][9] மினாங்கபாவ் பீடபூமியில் மினாங்கபாவ் பேரரசைத் தோற்றுவித்த ஆதித்யவர்மன் புத்த சமயத்தைச் சார்ந்தவர். 1347-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை மினாங்கபாவ் பேரரசை ஆட்சி செய்தார்.
மத்திய சுமத்திராவில் ஒரு மாநிலமாக இருந்த மலையபுரத்தின் அரசராக இருந்தவர் ஆதித்யவர்மன். இந்த மலையபுரம் (Malayapura), இப்போது பாகாருயோங் (Pagarruyung) என்று அழைக்கப்படுகிறது.[10][11]
ஆதித்யவர்மன்
1309-இல் இருந்து 1328 வரை, மஜபாகித் பேரரசை ஆட்சி செய்த ஜெயா நெகாரா என்பவரின் ஒன்றுவிட்ட சகோதரர்தான் ஆதித்யவர்மன். திரிபுவனராஜா எனும் பேரரசரின் பேரனும் ஆவார். மஜபாகித் பேரரசின் மூத்த அமைச்சராக ஆதித்யவர்மன் இருந்த போதுதான் மினாங்கபாவ் பேரரசைத் தோற்றுவித்தார்.[12]
ஆதித்யவர்மன் மறைந்த பிறகு, மினாங்கபாவ் பேரரசு மூன்று சிற்றரசுகளாகப் பிரிந்து போயின. மூன்று அரசர்கள் தனித்தனியாக ஆட்சி செய்தனர். ராஜா ஆலாம், ராஜா ஆடாட், ராஜா இபாடாட் எனும் மூன்று அரசர்கள். சுருக்கமாக ராஜா தீகா செலோ (Rajo Tigo Selo) என்று அழைக்கப் பட்டார்கள்.[13][14]
படத் தொகுப்பு
- ஆதித்யவர்மன்
- மினாங்கபாவ் இளம் தம்பதியினர்
- மினாங்கபாவ் இல்லம்
- மினாங்கபாவ் கடற்கரை திருவிழா
- மினாங்கபாவ் உணவுகள்
- ஆதித்யவர்மன் அருங்காட்சியகம்
- மினாங்கபாவ் பெண்கள்
மேற்கோள்கள்
- Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape. Institute of Southeast Asian Studies. 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:981-230-212-3.
- Widespread in the Indonesian Archipelago; west central Sumatra Province, Padang area.
- Gordon, Raymond G. (2005) (online version). Ethnologue: Languages of the World. Dallas, Tex.: SIL International. http://www.ethnologue.com/web.asp. பார்த்த நாள்: 2015-01-20.
- The name Minangkabau is thought to be a conjunction of two words, minang which referred to victorious and kabau or buffalo.
- There is a legend that the name is derived from a territorial dispute between the Minangkabau and a neighbouring prince.
- The word Minangkabau can actually be interpreted as a compound of the words menang (win) and kerbau (buffalo).
- On this day of legend in the mid-14th century, a buffalo fight would settle the question of who should rule the central highlands of the Indonesian island of Sumatra.
- Hardjowardojo, R.P., (1966), Adityawarman, Sebuah Studi tentang Tokoh Nasional dari Abad XIV, Djakarta: Bhratara.
- Brandes, J.L.A. , (1897), Pararaton (Ken Arok) of het boek der Koningen van Tumapěl en van Majapahit, Uitgegeven en toegelicht, Batavia: Albrecht; 's Hage: Nijhoff, VBG 49.1.
- Johannes Gijsbertus de Casparis (1975). Indonesian palaeography: a history of writing in Indonesia from the beginnings to C. A, Part 1500. E. J. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-04172-1.
- Bosch, FDK (1931) (in nl). De rijkssieraden van Pagar Roejoeng Overdr.. uit het Oudheidkundig Verslag 1930, Batavia. பக். 49–108.
- Brandes, J.L.A. , (1897), Pararaton (Ken Arok) of het boek der Koningen van Tumapěl en van Majapahit, Uitgegeven en toegelicht, Batavia: Albrecht; 's Hage: Nijhoff, VBG 49.1.
- Abdullah, Taufik (October 1966). "Adat and Islam: An Examination of Conflict in Minangkabau". Indonesia (Indonesia, Vol. 2) 2: 1–24. doi:10.2307/3350753.
- Reid, Anthony (2005). An Indonesian Frontier: Acehnese and Other Histories of Sumatra. National University of Singapore Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9971-69-298-8.