நெய்தல் (திணை)

நெய்தல் நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். கடலும் கடல் சார்ந்த இடங்களும் நெய்தல் என அழைக்கப்படுகின்றன. நெய்தல் நிலத்தலைவர்கள் கொண்கன், சேர்ப்பன், பரதவர் ,துறைவன், புலம்பன் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டனர். "வருணன் மேய பெருமணல் உலகமும்" எனத் தொல்காப்பியம் இதுபற்றிக் கூறுகிறது.

நெய்தல் மலரில் உப்பங்கழிகளில் பூக்கும் உவர்நீர் மலர், நெல்வயலில் பூக்கும் நன்னீர் மலர் என இருவகை உண்டு.

நெய்தல் நிலத்தின் பொழுதுகள்

கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் என்னும் பெரும் பொழுதுகளும் வைகறை, எற்பாடு என்னும் சிறுபொழுதும் நெய்தல் நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.

நெய்தல் நிலத்தின் கருப்பொருட்கள்

நெய்தல் நிலத்தின் உரிப்பொருட்கள்

  • அக ஒழுக்கம் : இரங்கல்
  • புற ஒழுக்கம் : தும்பை
தமிழர் நிலத்திணைகள்
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.