பரதவர்
பரதவர், பரவர் அல்லது பரதர் என்போர் தமிழகத்திலும் மற்றும் இலங்கையிலும் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் முத்துராஜா சமூகத்தின் ஒரு பிரிவை சார்ந்தவர்கள். முத்துக்குளித்தல், மீன் பிடித்தல், சங்கறுத்தல், உப்பு விளைத்தல் போன்றவை இவர்களது தொழில்கள். கடல் சார்ந்த தொழிலில் ஈடுபடும் இவர்கள் பண்டைய காலங்களில் மன்னர்களாகவும் போர் வீரர்களாக அரச படைகளில் பணியாற்றினர். பல சங்க இலக்கியங்கள் இவர்கள் புகழைப் பாடுகின்றன. பல்வேறு கல்வெட்டுக்கள் மற்றும் சங்க இலக்கிய நூல்கள் இந்த பரதவர்களின் சிறப்பை உரைக்கின்றன. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவர்கள் இசுலாமியர்களால் ஒடுக்கப்பட்டு பின் கிறிஸ்தவ மறையைத் தழுவினர்.
வாழும் பகுதிகள்
பரதவர், பரவர், அல்லது பரதர் என்ற சாதிப் பெயருடைய மக்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்பட்டாலும் திருநெல்வேலி, இராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் அதிக அளவில் உள்ளனர். இலங்கையில் இவர்கள் தனி இனக்குழுவாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த சமூகத்தினர் முழுவதுமாக கத்தோலிக்கத்தை தழுவியிருந்தாலும் ஒரு சில இடங்களில் இந்து பரதவர்களும் உள்ளார்கள்.
சமூகப் பிரமுகர்கள்
- சந்திரபாபு - திரைப்பட நடிகர்
- ஜே. எல். பி. ரோச் விக்டோரியா - இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி
- ஐ. எக்ஸ். பெரைரா - முன்னாள் இலங்கை தொழில்துறை அமைச்சர்
- கே. ஆர். நாராயணன் - முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர்
- டிமிட்ரி மாஸ்கரேஞாஸ் - இலங்கைத் தமிழ் இங்கிலாந்து துடுப்பாட்டக்காரர்
உசாத்துணை
- நெய்தல் நில மன்னர்கள், கலாநிதி ஏ.எஸ்.சோசை, விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம்