தும்பை

தும்பை (Momordica dioica) எனப்படுவது இந்தியாவிலும் இலங்கையிலும் மரக்கறியாகப் பயன்படுத்தப்படும் தாவர இனமொன்றாகும். தும்பங்காய் என்று இலங்கையில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவகிரி வட்டத்திற்குட்பட்ட ஆத்துவழி மலைபிரதேசங்களிலும் காணப்படுகிறது. [1] இக்காய்களை தமிழகத்தில் பழுப்பக்காய், அல்லது பழுவக்காய் என்று அழைக்கின்றனர். இதன் காய்கள் பொரிக்கவும், கறியாக்கவும் படுவதுடன் இறைச்சி அல்லது மீனுடன் சேர்த்தும் உணவாகக் கொள்ளப்படுகின்றன. இது துவர்ப்புச் சுவையுடன் இருக்கும். இக்காய் நீரிழிவு நோய் நோய்க்குச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

தும்பை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Cucurbitales
குடும்பம்: Cucurbitaceae
பேரினம்: Momordica
இனம்: M. dioica
இருசொற் பெயரீடு
Momordica dioica
ரொக்சுபர்கு. முந்தைய Willd.

வேறு மொழி பெயர்கள்

மேலும் பார்க்க

வெளித் தொடுப்புகள்

  1. கட்டுப்படுத்தும் பழுப்பக்காய் வளர்ப்புதி இந்து தமிழ் 30 சனவரி 2016
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.