நீடாமங்கலம்
நீடாமங்கலம் (ஆங்கிலம்:Needamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டம் மற்றும் நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.
நீடாமங்கலம் | |
அமைவிடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருவாரூர் |
வட்டம் | நீடாமங்கலம் வட்டம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | டி. ஆனந்த், இ. ஆ. ப. [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
9,336 (2011) • 3,563/km2 (9,228/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 2.62 சதுர கிலோமீட்டர்கள் (1.01 sq mi) |
குறியீடுகள்
| |
இணையதளம் | www.townpanchayat.in/needamangalam |
அமைவிடம்
நீடாமங்கலம் பேரூராட்சி, திருவாரூருக்கு 27 கிமீ தொலைவில் உள்ளது. நீடாமங்கலத்தில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே அமைந்த நகரங்கள் தஞ்சாவூர் 32 கிமீ; கும்பகோணம் 26 கிமீ; மன்னார்குடி 12 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
2.62 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மன்னார்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2392 வீடுகளும், 9336 மக்கள்தொகையும் கொண்டது. [5] [6]
சங்ககாலம்
சங்ககாலத்தில் இந்த ஊர் நீடூர் என்னும் பெயருடன் விளங்கியது. அக்காலத்தில் இது மிழலை நாட்டின் தலைநகர். எவ்வி என்னும் வள்ளல் சங்ககாலத்தில் இதனை ஆண்டுவந்தான்.
ஆதாரங்கள்
- "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- நீடாமங்கலம் பேரூராட்சியின் இணையதளம்
- http://www.townpanchayat.in/needamangalam/population
- Needamangalam Population Census 2011