நீடூர்
நீடூர் என்பது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை தாலுக்காவில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றியம் ஆகும். இது மயிலாடுதுறையில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சங்ககாலத்தில் இதனை ஆண்ட அரசன் எவ்வி ஆவான் என அகநானூற்றின் ஒரு பாடல் ('நீடூர் கிழவோன்', பாடல் 266) வாயிலாகக் கணிக்கலாம்[1]
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 5017 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 2,434 ஆண்கள், 2,583 பெண்கள் ஆவார்கள். நீடூர் மக்களின் சராசரி கல்வியறிவு 80.73% ஆகும். நீடூர் மக்கள்தொகையில் 16.05% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
மனிதர்கள்
நீடூர் சி.அ. அப்துல்காதர் துனிஷ்யா வெற்றிக்காக மாயூரம் (மயிலாடுதுறை) பட்டமங்கலத் தெருவில் உள்ள பிரபலமான மணிக்கூண்டை 1943ஆம் ஆண்டு நிறுவினார்.[2]
இடங்கள்
இங்குள்ள "ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா" என்னும் அரபிப் பாடசாலை 1912ஆம் ஆண்டு அப்துல் கரீம் அவர்களால் நிறுவப்பட்டது.[3]
ஆதாரங்கள்
-
யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன்
வாய் வாள் எவ்வி ஏவல் மேவார்
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர்
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்,
கள்ளுடைப் பெருஞ் சோற்று எல் இமிழ் அன்ன,
கவ்வை ஆகின்றால் பெரிதே (அகநானூறு 266) - http://nidurseason.wordpress.com/?p=573
- http://nidurmadarsa.blogspot.in/2012/10/blog-post_14.html