நான்காம் கோவிந்தன்

நான்காம் கோவிந்தன் (Govinda IV ஆட்சிக்காலம் 930-935 ), இவன் இரண்டாம் அமோகவர்சனின் தம்பியாவான். இவன் 930இல் மன்னனானான் என்பது குறித்து சிக்மங்ளூரின் கன்னடப் பதிவுகள் வழியாக தெரிகிறது. இவன் தன் அண்ணனைக் கொன்ற பாவச் செயலால் இவன் மிகவும் செல்வாக்கற்ற மன்னனாக இருந்தான். [1] இவனது ஆட்சிக்காலத்தில் கன்னோஜை இராஷ்டிரகூடர்கள் இழந்தனர். நான்காம் கோவிந்தனைக் கீழைச் சாளுக்கியர் தோற்கடித்து அவனது ஆட்சிப்பகுதிகள் சிலவற்றையும் கைப்பற்றினர். இறுதியாக, இவனது கூட்டமைப்பைச்சேர்ந்தவனும், ஆந்திரத்தின் வேமுலவாட மன்னனுமான அரிகேசரி என்பவன் இவனுக்கு எதிராக 935இல் புரட்சிசெய்து மூன்றாம் அமோகவர்சனை ஆட்சியில் அமரவைத்தான். இந்தத் தகவல்கள் கன்னட கவிஞர் ஆதிகவி பம்பா என்பவரது எழுத்துகளால் தெரியவருகிறது இந்தக் கவிஞர் அரிகேசரியால் ஆதரிக்கப்பட்டவர் ஆவார். [2]நான்காம் கோவிந்தான் சோழர்களுடன் திருமண உறவுவைத்திருந்தான். தனக்கு எதிராக புரட்சி ஏற்பட்டதும் இறுதியில் சோழர்களிடம் அடைக்கலம் சென்றான். நான்காம் கோவிந்தன் கன்னட கவிஞர் ரவிங்கபதா என்பவரை ஆதரித்தான்.

உசாத்துணை

குறிப்புகள்

  1. Reu (1933), p81
  2. Kamath (2001), p82
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.