மூன்றாம் அமோகவர்சன்

மூன்றாம் அமோகவர்சன் (Amoghavarsha III ஆட்சிக்காலம் 934–939) இவன் கன்னடத்தில் பத்திகா என்று அழைக்கப்படுகிறான். நாடு கடத்தப்பட்ட நிலையில் இருந்த இவன் மூன்றாம் இந்திரனின் தம்பியாவான். இவன் ஆந்திரத்தின் வேமுலவாட மன்னனான அரிகேசரி என்பவனின் கூட்டமைப்பு படைகளின் உதவியுடன் நான்காம் கோவிந்தனுக்கு எதிராக புரட்சிசெய்து ஆட்சிக்கு வந்தான். இவனது ஆட்சியைப்பற்றி அதிகமாகத் தெரியவில்லை.இவனது வயது முதிர்ச்சியின் காரணமாக நிர்வாகத்தில் ஆர்வம் காட்டாததால் இவனது மகன் மூன்றாம் கிருஷ்ணன் ஆட்சியைக் கவனித்துவந்தான்.[1] அமோகவர்சனின் பட்டத்தரசி குந்தகாதேவி ஆவாள், இவள் காளச்சூரிய மரபின் இளவரசியாவாள். இவனது மகளை மேலைக் கங்கர் மரபின் இரண்டாம் பூதுகனுக்கு மணம் செய்வித்தனர். [2]

மேற்கோள்

குறிப்புகள்

  1. Kamath (2001), p82
  2. Reu (1933), p82
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.